Advertisement

தமிழகம், ஆந்திராவில் சீசன் கொய்யா விலை வீழ்ச்சி

தமிழகம் மற்றும் ஆந்திராவில், சீசன் துவங்கியுள்ளதால், கொய்யாப்பழம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வேலுார், கடலுார் மாவட்டங்களில், கொய்யாப்பழம் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், ஆங்காங்கே, கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில், கொய்யா பழ சீசன் துவங்கியுள்ளது.ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களிலும், கொய்யா பழ சீசன் களைக்கட்ட துவங்கியுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் அறுவடை செய்யப்படும் கொய்யாப்பழங்கள், மாநிலத்தின் முக்கிய மார்க்கெட்களுக்கு, விற்பனைக்கு வருகிறது.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மட்டும், நாள்தோறும், 20க்கும் மேற்பட்ட மினி லாரிகளில், அவை விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்துள்ளதால், கொய்யா பழங்களின் விலையும் சரிந்து வருகிறது.சில்லரை விலையில், 1 கிலோ, 40 - 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவற்றை மொத்தமாக வாங்கி செல்லும் சிறு வியாபாரிகள், சாலையோர கடைகளில் மட்டுமின்றி, தள்ளுவண்டிகளில் வைத்தும் விற்பனை செய்கின்றனர்.விலை மலிவாக உள்ளதால், பலரும் கொய்யா பழங்களை ஆர்வமுடன் சுவைக்க துவங்கியுள்ளனர்.
-நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Patriot - Chennai,இந்தியா

    இதை செய்தியாக கொடுக்கும் பொது கொய்யாவின் மொத கொள்முதல் விலை என்ன என்பதையும் விசாரித்து எழுதுங்கள் அப்போதுதான் இதில் வியாபாரிகள் லாபம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.வெறும் சில்லறை விலை மட்டும் வெளியிட்டு பயனில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement