Advertisement

மக்களை மிரட்டும் மின் கம்பம் துறை அதிகாரிகள் கவனிப்பரா?

அம்பத்துார்: மின் வாரியத்தின் அலட்சியத்தால், சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள், மக்களை அச்சுறுத்துகின்றன.அம்பத்துார், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு துணை மின் நிலையம் அருகே, அம்பத்துார்-செங்குன்றம் சாலையில் உள்ள மின் கம்பம், சிதிலமடைந்து கம்பிகளின் ஆதரவில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அதன் அருகே நிறுத்தப்படும் வாகனங்கள் மோதினால், உடைந்து விழும் நிலை உள்ளது.அம்பத்துார், ஒரகடம் பேருந்து நிறுத்தம் அருகே, மணி தெரு சந்திப்பு, வெங்கடாபுரம் மவுனசாமி மடம் தெரு, உழவர் சந்தை வேளாண்மை அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள், அம்பத்துார் சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு முதல் பிரதான சாலையில் உள்ள மின்மாற்றிகள் ஆகியவை சிதிலமடைந்துள்ளன.அவற்றால் மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மின் வாரியத்தினர் அவற்றை சீரமைத்தால், விபத்து, உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement