Advertisement

ஹபீஸை விட முடியாது! : பஞ்சாப் மாகாண அரசு உறுதி

லாகூர்: ஜமாத் உத்தவா பயங்கரவாத அமைப்புத் தலைவன், ஹபீஸ் சயீத்தின் வீட்டுக் காவலை விலக்க, பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாண அரசு மறுத்துள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி, ஹபீஸ் சயீத், ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவனாக உள்ளான். இவனது நடவடிக்கைகளால், பாகிஸ்தானில் உள்ள, பஞ்சாப் மாகாணத்தில், சட்டம், ஒழுங்கு சீர்கெடுவதாக குற்றஞ்சாட்டி, அம்மாகாண அரசு, வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது.
இவன் கூட்டாளிகள் சிலரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுளனர். ஹபீஸ் சயீத் மற்றும் கூட்டாளிகளின் வீட்டுக் காவல், சமீபத்தில், மேலும், 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து, இவர்கள், லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில், பஞ்சாப் மாகாண அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'சயீது மற்றும் அவனது கூட்டாளிகளை விடுவித்தால், சட்டம், ஒழுங்கு சீர்கெடும் அபாயம்
உள்ளது.
எனவே, அவர்களின் வீட்டுக்காவலை விலக்க முடியாது' என, கூறப்
பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Indira -

    வீட்டு காவலா? விட முடியாதா ?பாகிஸ்தானில் எல்லாமே கேலிக்கூத்து தான்.அவன் வீட்டுக் காவலில் தான் இன்னும் வசதியாக இருப்பான். அரசு செலவுகளை பார்த்து கொள்ளும்.தீவிரவாத அமைப்பை உறவுக்காரன் மக்கி பார்த்துக் கொள்கிறான் வேறு என்ன வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement