Advertisement

மாடல் அழகிக்கு வாரன்ட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த, மாடல் அழகி, அயான் அலி, 24.இஸ்லாமாபாத்திலிருந்து,
ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள, துபாய் நகருக்கு செல்வதற்காக, 2015ல், விமான நிலையம்
வந்த, அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். சட்ட விரோதமாக, 35 லட்சம் ரூபாயை பரிமாற்றம் செய்ய முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பின், ஜாமினில் வெளியான அவர், மீண்டும் துபாய் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு, தொடர்ந்து, 12வது முறையாக ஆஜர் ஆகாததால், அவரை உடனடியாக கைது செய்யும் படி, இஸ்லாமாபாத் கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது.அயான் அலியின் தாயார் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதை ஏற்க மறுத்த கோர்ட், இதற்கு முன் பல முறை, பல காரணங்கள் கூறி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத, அயான் அலிக்கு கண்டனம் தெரிவித்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement