Advertisement

காபூலில் தாக்குதல்: பலி 3

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், விளையாட்டு மைதானத்தில் நேற்று, கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது, மைதானத்திற்குள் வேகமாக நுழைய முயன்ற நபரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நபர், உடனே, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த தற்கொலை படை தாக்குதலில், போலீஸ்காரர் உட்பட, மூன்று பேர் பலியாயினர்; ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, கிரிக்கெட் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement