Advertisement

பாகிஸ்தானுக்கு ஆதரவு: ரஷ்யா, சீனா உறுதி

மாஸ்கோ: அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த போது பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு
எதிராக கடினமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் அளித்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம், என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஏராளமான நிதிஉதவி அளிக்கிறது. அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோமோ, அவர்களுக்கு அதே பாகிஸ்தான் சொர்க்கபுரியாகவும்
உள்ளது. இதில் மாற்றம் வேண்டும். அமெரிக்க படைவீரர்களையும், அதிகாரிகளையும் இலக்காகக் கொள்கிற பயங்கரவாதிகளையும், போராளிகளையும் பாதுகாக்கிற நாட்டுடன் நட்புறவாட முடியாது.
தலிபான், இன்னும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதால், அதைஇனியும் நாம்
வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கையை விடுத்தார்.
கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்க்கொள்ள வேண்டிவரும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் மீண்டும் படையின் எண்ணிக்கையையும் அமெரிக்கா உயர்த்துவது உறுதியாகி உள்ளது.
டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளநிலையில் நாங்கள்
ஆதரவு அளிப்போம் என பாகிஸ்தானுக்கு ரஷ்யா, சீனா உறுதியளித்து
உள்ளது. பிரிக்ஸ் அமைப்பு வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்பு தீர்மானித்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அடுத்த நாளே சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தினால் பாதிகப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது. அதனை பாராட்ட வேண்டும் என்றது.
இதற்கிடையே பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு எதிரான எந்தஒரு தீர்மானமும் அமெரிக்காவிற்கு பலன் அளிக்காது என பாகிஸ்தான் கூறிஉள்ளது.
பாகிஸ்தானுக்கு
எதிராக அமெரிக்கா ஐ.நா. சபையில் பொருளாதார தடை தீர்மானம் கொண்டுவந்தால், ரஷ்யா, சீனா அதனை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கும் என இருநாடுகளும் துாதரக ரீதியில் உறுதியளித்து உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Bala Subramanian - Bangalore,இந்தியா

    ரஷ்யாவோட இந்த முடிவை பார்த்தால் இந்தியாவும் ரஷ்யாவும் பாதை மாறுகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது இந்தியா அமெரிக்காவோட சேரும் என்றும் பாக்கிஸ்தான் ரஷ்யாவோட சேரும் என்றே தோன்றுகிறது இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement