Advertisement

அடுத்த கட்டம் இரட்டை இலை: பழனி - பன்னீர் கூட்டணி ஆயத்தம்

பொதுக்குழுவை கூட்டி, அனைவருடைய ஒப்புதலோடு, கட்சியில் இருந்து சசிகலாவை காலி செய்த சூட்டோடு, அடுத்த கட்டமாக, அ.தி.மு.க., கட்சி பெயரை, இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மேற்கொண்டுஉள்ளனர்.
ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரு அணிகளாக பிளவுபட்டது. சென்னை, ஆர்.கே.நகர் இடைதேர்தலில், இரு அணிகளும், இரட்டை இலை சின்னத்தை கோரின. அதனால், தேர்தல் கமிஷன்,அந்த சின்னத்தை முடக்கியது. அ.தி.மு.க., என்ற பெயரை பயன்படுத்தவும், தடை விதித்தது.

பிளவுபட்ட அணிகளுக்கு, 'அ.தி.மு.க., - அம்மா, அ.தி.மு.க., - புரட்சித் தலைவி' என, பெயர் சூட்டப்பட்டது. இரு அணிகளும் தனித்து போட்டியிட்டன. ஆனால், தினகரன் தரப்பில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பட்டதால், தேர்தல் கமிஷன், தேர்தலை ஒத்தி வைத்தது.அதன்பின், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, இரு அணிகள் சார்பிலும், தேர்தல் கமிஷனில், லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன; ஆனாலும், முடிவு எடுக்க படாமல், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில், தற்போது இரு அணிகளும் இணைந்துள்ளதுடன், முதல் பொதுக்குழுக் கூட்டமும், நேற்று முன்தினம், சென்னையில் நடத்தப்பட்டது. அதில், இரு அணிகள் இணைந்ததற்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மேலும், அ.தி.மு.க., கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்கவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக, சசிகலாவை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து நீக்கினர்.

அவரது நியமனத்தை ரத்து செய்யும் தீர்மானம், பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யபட்ட, பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற்று, கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்க, முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர். அவற்றில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கையெழுத்து வாங்கும் பணி,தற்போது தீவிரமாகநடந்து வருகிறது.இது தொடர்பாக, சென்னையில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அவசர ஆலோசனை நடத்தினர்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுபடி, இன்னும் இரண்டு நாட்களில், அமைச்சர்கள், டில்லி சென்று, ஆவணங்களை சமர்ப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'இரு அணிகளும் இணைந்ததற்கான ஆதாரத்தை அளித்து, பிரமாண பத்திரங்களை, இரு தரப்பினரும் வாபஸ் பெற்றால், கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம், அவர்களுக்கு கொடுக்கப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (18)

 • dandy - vienna,ஆஸ்திரியா

  படிப்பறிவில்லாத. மக்களுக்கு ஜனநாயகம் சரிப்படாது ...

 • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

  ஏன் தாமரை இருக்கலாமே

 • AURPUTHAMANI - Accra,கானா

  எல்லோரும் மேலே புலம்புகிறார்கள்,ஆனால் ஒரு கவனமாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட ப்ராஜெக்ட் போல.எல்லாம் வரிசையாக கவனமாக நடக்கிறது இந்த சத்தத்தில் தெரியவில்லை.மன்னார்குடி வெளியே,admk விற்கு பண்ணீரும் எடப்பாடியும் உரிமையாளர்கள்,கட்சி பெயர் சின்னம் வாங்கப்படும் .இதுதான் டார்கெட்.இதை நோக்கி மெதுவாக ஆனால் சரியாக நகர்கிறார்கள்.ரொம்ப துள்ளும் கீழ்மட்டத்தினர் காணாமல் அடிக்கப்படுவார்கள்.ஆரம்பம் சம்பத் எங்கே?இது ஒரு விவரமான ப்ரோக்ராம். துள்ளும் பெரியவர்கள் அவர்களே வந்து விடுவார்கள்,சரி இதன் முடிவில் டார்கெட் நிச்சியம்,ஆனால் மக்கள்,AIADMK தொண்டர்கள் அடுத்த தேர்தலில் என்ன செய்வார்கள் என்று இதில் நிச்சயிக்க முடியாது.எதிர்பார்க்கும் பலநே இல்லாவிட்டால் AIDMK மன்னார்குடி இரண்டும் காணாமல் போய்விடும்.

 • Franklin Kumar - Chennai,இந்தியா

  இலை சருகாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது இனி அது உயிர்க்காது

 • Ahamed Fazal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மக்களே ஓட்டு போட நீங்க 500 ரூபாய் வாக்குறிங்க, ஒட்டு போட பணம் கொடுத்தவன் 500 கோடி சம்பாதிக்கிறான், சிந்திங்க மக்களே போராடுங்க உங்க உரிமைக்காக.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  What is use of getting back the Two Leaves Symbol for AIADMK party as people of our state are already forgotten the two leaves and the party after the death of Jayalalithaa. These people may complete their full term only on these issues and not going to do any thing for our state now.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  சின்னாபின்னமாக்கினவனே சிரிச்சிக்கிட்டு நிக்கிறான்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ரெட்டை இல்லை கிடைத்தாலும் உங்களால் மக்களை சந்திக்க முடியாது, அந்த அளவிற்கு மக்கள் உங்கள் மீது வெறுப்போடு இருக்கிறார்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பழனிக்கு ஒரு இலை... பன்னீருக்கு ஒரு இலை...

 • Arachi - Chennai,இந்தியா

  பணியாட்கள் இரு எஜமானர்கள் கீழ் பணியாற்ற இயலாது என்பார்கள். இவர்கள் விஷயத்திலும் இக்கூற்று பொய்த்துப் போவதில்லை. என்னுடைய உன்னுடைய ஆள்களுக்கு செய்யவில்லை என்ற பிரச்சனை கூடியவிரைவில் தலை தூக்கும். அதிமுக வின் முடிவிற்கு இவர்களுடைய கூட்டு தான் ஆரம்பம்.

 • M.S.Jayagopal. - Salem,இந்தியா

  நம் நாட்டில் ஜனநாயகம் என்பது இன்னும் வளரவேண்டி உள்ளது. வாக்காளர்கள் தகுதி மேம்பட்டாலே நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க முடியும். கட்சிகளின் சின்னத்தை மட்டும் பார்த்து வோட்டு போடும் நிலையை தவிர்க்க வேண்டும். எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் கொடுக்கக்கூடாது. ஒரு தொகுதியில் வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படவேண்டும். ஏழைகளுக்கு அரசின் உதவி அவசியம் தேவை. ஆனால் இலவசம் கொடுத்து வாக்குகளை பெறும் குறுக்கு வழியை அடைக்க வேண்டும். அதற்கு அரசின் இலவசங்களை பெறுபவர்களுக்கு வோட்டு போடும் உரிமை இருக்கக்கூடாது. இது போன்ற பல சீர்திருத்தங்களை துணிந்து மேற்கொண்டு நாம் நம் ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இதில் தெரிந்து போகும் தேர்தல் கமிஷனுக்கும் மோசடிக்குமான கள்ள உறவு.

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  கடைசி வரை தமிழகம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. ஆட்சி நாள் முழுவதும் கட்சியை காப்பாற்றுவது பற்றியே சிந்தனை, உருப்பட்றும் தமிழகம்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சின்னம்மாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்... கொள்ளை அடித்த பணம் அதன் உரிமையாளர்களுக்கு செல்ல வேண்டும்..

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  அதுக்கு அனுகூலமாக டெல்லிக்கு ஆள் எப்பவோ போயாச்சு...

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  பன்னீர் கவனமாக இல்லையென்றால் எடப்பாடி உள்ளேயே வைத்து கும்மாங்குத்து குத்தி கதையை முடித்து விட போகிறார். மறுபடியும் தர்ம யுத்தம் தொடங்கினால் ஒருவர் கூட பின்னே நிற்க மாட்டார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement