Advertisement

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டித்துள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக, 12 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் தரவும், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், 'மாணவி அனிதாவின் மரணம், பள்ளி செல்லும் இளைய சமூகத்தினர் மனதில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு, உளவியல் ஆலோசனைகளை வழங்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தற் போது ஆசிரியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருவது பற்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், குறைவான மதிப்பெண் பெற்றதற்கு, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் ஒரு காரணம். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களில், சில பேருக்கு மட்டுமே, மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. போராடும் ஆசிரியர்கள், இதற்கு வெட்கப்பட வேண்டும்; அவர்களுக்கு, பொறுப்பு உணர்வு வேண்டும்.நீதிமன்ற உத்தரவை, ஆசிரியர்கள்
பின்பற்றவில்லை என்றால், அவர்கள் வழக்கு தொடர முடியாதபடி, உத்தரவு பிறப்பிக்க நேரிடும். போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும்.அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நிறைய பேர் உள்ளனர்.

சங்க தலைவர்கள், தாங்கள் தான் உயர்ந்தவர்கள் போல செயல்படுகின்றனர். அவர்கள் என்ன, அரசிய லமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா; ஆசிரியர்கள், என்ன தொழிலாளிகளா; போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது; அதுகுறித்து, அரசு அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதி, விசாரணையை, வரும், ௧௮ம் தேதிக்குதள்ளிவைத்தார்.

இதற்கிடையில், 'பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வருவது இல்லை. அதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க வேண்டும்' எனக்கோரி, மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இம்மனுவையும் விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிறுவேலியநல்லுாரில் உள்ள, பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் காளிதாஸ், பள்ளிக்கு தொடர்ந்து வராததால், பள்ளியை கிராமத்தினர் மூடியுள்ளனர். தள்ளாடிய நிலையில், பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வந்துள்ளார்.தற்போது, அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வருவது இல்லை; முறையாக கற்பிப்பதில்லை என்ற, புகார்கள் உள்ளன.

அதேநேரத்தில், அரசு பள்ளிகளில், அர்ப்பணிப்பு உணர்வுடன், நேர்மையாக பணியாற்றும் ஆசிரியர்களும் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு, பாராட்டுக்குரியது; அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த
நீதிமன்றத்தை பொறுத்தவரை, தவறு செய்யும் ஆசிரியர்கள் பற்றியே கவலை கொள்கிறது. அரசு பள்ளிகளில், இப்படி நிலைமை இருக்கும் போது, ஆசிரியர்களில் ஒரு பகுதியினர், பணியை புறக்கணிக்கின்றனர். அதனால், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

எனவே,கீழ்கண்ட தகவலை அதிகாரிகள் அளிக்கவேண்டும்.

*பள்ளிக்கு செல்லாமல், எத்தனை ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன?
* எவ்வளவு ஆசிரியர்கள், பணிக்கு வராமல் உள்ளனர்?
* ஆசிரியர் சங்கங்களில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், நிர்வாகிகளாக பணியாற்றுகின்றனரா?
* தனியார் பள்ளி ஆசிரியர்களும், போராட்டத்தில் பங்கேற்கின்றனரா அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் மட்டும், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனரா?
* அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
* தமிழக மக்கள் தொகையில், ஆசிரியர் விகிதாச்சாரம் எவ்வளவு?
* ஆசிரியர்களின் குறைந்தபட்ச, அதிகபட்ச சம்பளம் எவ்வளவு?
* அதற்கு, அரசு பணம் எவ்வளவு செலவிட படுகிறது; அரசின் மொத்த பட்ஜெட்டில், எத்தனை சதவீதம்?
* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் சதவீதம் என்ன; அவர்களின் சராசரி மாத, ஆண்டு வருமானம் என்ன?
* தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, குறைவான சம்பளம் வழங்கப்படுகிறதா?
* போராட்டத்தினால், எத்தனை பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன?
* பணி புறக்கணிப்பை தடுக்க, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த மனு மீதான விசாரணை, இன்று தொடர்கிறது.

'மெமோ'வுக்கு விளக்கம் தர வேண்டாம்



நீதிமன்ற தடை, அரசு எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ - ஜியோ போராட்டம் தீவிரமாகி உள்ளது. அதனால், 'எஸ்மா, டெஸ்மா' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. முதற்கட்டமாக, அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, தனித்தனியாக துறை அலுவலகம் மூலம், விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கப்படுகிறது.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், 'மெமோ அல்லது நோட்டீசை, ஆசிரியர்கள் யாரும் கையெழுத்திட்டு வாங்க வேண்டாம்; விளக்கமும் தர வேண்டாம். அதன் மீதான நடவடிக்கைகளை, நாங்கள் கவனித்து கொள்வோம் என, சங்கங்கள் அறிவித்துள்ளன' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (53)

  • Arulmurugan - Pallipalayam,இந்தியா

    இந்த போராட்டம் ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துப்புரவு பணியாளர் முதல் தலைமை செயலாளர் வரை அனைவருக்கும் பொருந்தும் அதனால ஆசிரியர் குறை கூற வேண்டாம்

  • Arulmurugan - Pallipalayam,இந்தியா

    ஐந்து வருஷம் எம் எல் ஏ வாக இருந்தால் வாழநாள்பூரா ஓய்வூதியம் பெறும் இவர்கள் வாழ்நாள் பூராவும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கக் கூடாது?. ஏழாவது ஊதிய கமிஷன் சிபாரிசை ஏற்காததது ஏன் ஆக்கபூர்வமான நீதி இல்லை..அவர்களை போராட்டம் வரை செல்ல வைத்தது யார்? இதை ஏன் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வில்லை....

  • Rathakrishnan - anganur ,இந்தியா

    ஜக்கடோ ஜியோ உங்கள் பிள்ளைகளை எப்போது அரசு பள்ளியில் சேர்ப்பீர்கள்???.

  • Rathakrishnan - anganur ,இந்தியா

    போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை அரசு பணம் இனிக்காது அரசுப்பள்ளியில் படிப்பது கசக்குதா???... இந்த லட்சணம் இந்த வருடம் 5 மாணவர் மட்டுமே மருத்துவத்தில் சேர்ந்துள்ளார்கள்

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    இது அரசாங்கத்தின் தவறுதான். மக்கள் சேவை செய்ய வருபவர்கள் வருடாவருடம் அந்த பதவி ஏற்பு உறுதியை திரும்ப சொல்லவைத்து மனதில் பதிய வைக்கவேண்டும். பலபேருக்கு தங்கள் மக்கள் சேவை செய்ய வந்திருக்கிறோம் , இந்த சம்பளம் மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப்படுகிறது என்ற அடிப்படை அறிவே இல்லாமல் , திமிர் பிடித்து அலைகிறார்கள் , அதிகார மமதை , மக்களை ஏதோ அவர்களிடம் பிச்சை எடுக்க வருவது போல நடத்துவது. நான் ஒருமுறை இதை மற்றவர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டியதற்கு ஒரு அதிகாரி கண்ணீர் விட்டுவிட்டார் , இதில் கண்ணீர் விட என்ன இருக்கிறது , மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசு பதவி. இங்கே அதிகாரம் , திமிர் எல்லாம் ஏற்க முடியாது.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    எப்படித்தான் இப்படி மனசாட்சி இல்லாமல் போராடுகிறார்களோ ? கொஞ்சமாவது நினைத்து பாருங்கள் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் , உங்களை விட மெத்த படித்தவர்கள் எவ்வளவு குறைந்த சம்பளத்தில் அதிக மணிநேரம் உழைக்கிறார்கள், அவர்கள் வேறு ஒரு வேலை கூட செய்ய முடியாது , நேரம் இல்லை , ஆனால் நீங்கள் சிலமணிநேரம் மட்டும் பள்ளியில் இருக்கிறீர்கள் , பலமணிநேரம் வேறு தொழில்கள் செய்கிறீர்கள் (சைடு பிசினஸ் )அவர்களுக்கு வேலை நிரந்தரம் கூட இல்லை , விடுமுறை மிக மிக குறைவு.

  • sankar - Nellai,இந்தியா

    அவ்வளவு சலுகைகளையும் அனுபவிக்கு ஒரே கூட்டம் - இந்த கூட்டம் - புடிச்சு ஆறுமாசம் உள்ள போடுங்க - புதுசா இளைஞர்களை எடுத்து போடுங்கள் - இதுதான் தீர்வு

  • Muruganandam - Madras,இந்தியா

    இவையெல்லாம் கேடு கேட்ட மக்களாட்சி முறையின் சாபங்கள்.

  • Kesavan Anand - Chennai,இந்தியா

    முதலில் வாத்தியாருக்கு மரியாதையை கொடுங்கள். உங்கள் வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமாக உள்ளன. வெளி நாடுகளில், முன்னேற்றமடைந்த நாடுகளில் ஆசிரியர்க்கு வழங்கும் மரியாதையை பாருங்கள். ஒரு ஆசிரியரை மதிக்காத சமூகம் அழிந்தே தீரும் . உங்கள் வார்த்தை என்னை போன்ற கடமையை செய்யும் ஆசிரியர்களை வருத்தம் அடைய செய்கிறது. தகுதி இல்லாத ஆசிரியர்கள் என்றால் அதட்கு யார் பொறுப்பு? மக்களுக்கு தெரியாதா? கந்து வட்டி கொடுப்பவனுக்கு யார் வேலையே கொடுத்தது ? முதலில் ஊழலை ஒழித்து நியாமான முறையில் பணி நியமனம் செய்யுங்கள். சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால், மாணவர்களுக்கு நீண்ட நாட்கள் பாட திட்டம் மாற்ற போராடுனீர்களா? இல்லை திறமையான ஆசிரியர்களைத்தான் நியமிக்க போராடுனீர்களா? வெட்கம் கெட்டவர்களே நீங்கள் இப்பொழுது மட்டும் ஏன் ஆசிரியர்களை கேட்கிறீர்கள். நிறைய லஞ்ச பேர் வழிகள் கோடி கணக்கில் சொத்து வைத்து உள்ளனர். அவர்களிடம் எப்படி வந்தது என்று கேட்க துப்பில்லை . கிட்ட தட்ட தோணுதுஒன்பது சதவீத தனியார் பள்ளிகள் என்ன செய்கின்றன என்று தெரியும். எதாவது முறை இட்டீர்களா? இல்லை. நிச்சயமாக கூறுகிறேன் முழு தவறும் ஸமுத்யத்தின் மீதே உள்ளது ? ஆசிரியரை குறை கூறாதே. முடிந்தால் ஒரு ஆணையை இடுங்கள் , கி பி 2000 க்கு பிறகு வந்த ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வை வையுங்கள் , அது முழுக்க ஐ ஐ டி யால் நடத்த படவேண்டும். இதை முக்கியமாக கல்லூரி ஆசிரியர்களுக்கும் வைக்க வேண்டும் .

    • Ramachandran Kokkath - Chennai,இந்தியா

      முன்னேற்றம் அடைந்த நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் கடமை மறந்து அநியாயமாக தெருவில் இறங்கி போராடும் கேடு கேட்ட ஆச்சிரியர்களையும் ஒப்பிடுவதே தவறு.

  • Muhunth - Melbourne ,ஆஸ்திரேலியா

    Please don't hike salary. Please consider un-employed for their position.

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    இன்று இப்படி தேவையற்ற போராட்டங்கள் நடக்கின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாழாய் போகிறது. இது போன்ற போராட்டத்தால் நேரடியாகவே நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இன்றைக்கு ஒரு அரசு பள்ளி ஆசிரியர் குறைந்த பட்சம் 25000 ரூபாய் வாங்குகிறார். ஆனால் தனியார் பள்ளியில் வேலை செய்பவர்கள் 5000 ரூபாய்க்கு கூட வேலை செய்கிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களை கேட்பார் யாருமில்லை. ஆனால் தனியார் பள்ளியில் கசக்கி பிழிகிறார்கள். இவ்வளவு சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் சம்பளம் அதிகம் கேட்டு போராடுகிறார்கள். இதற்க்கு காரணம், முந்தைய அரசுகள் தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக ஆசிரியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கின. அது மட்டுமின்றி ஊழியர்களின் வருங்கால வைப்பு தொகையை கூட செலுத்த வக்கற்ற அரசாக இன்றைக்கு மாறி விட்டன. இன்றைக்கு அரசும் ஆசிரியர்களும் தங்களது சுய நலத்தோடு செயல்படுவதால் பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்களின் எதிர்காலம்தான். எனவே முதலில் இந்த போராட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்க்கு முன் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நாம் காசுக்காக கேவலமானவர்களை ஆட்சியில் அமர்த்தினோம். இன்று அதன் பலனை அனுபவிக்கிறோம். நமது பிள்ளைகளின் எதிர்காலம் வீணாக போகிறது. சவுக்கால் அடித்தால் கூட நமக்கெல்லாம் புத்தி வராது.

    • Selvakarthi - Bangalore,இந்தியா

      நக்கீரன், சின்ன புள்ள மாதிரி பேச கூடாது, எத்தனை அரசு பள்ளிகளில் கழிவறைகள் மற்றும் பாடம் நடத்த வகுப்புக்கள் இல்லை என்பது தெரியுமா... 5 வருடம் MLA வகை இரூந்தால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவி தொகை, ஆனால் உயிரை கொடுத்து வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஏதும் இல்லை..

    • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

      எத்தனை அரசு பள்ளிகளில் கழிவறைகள் மற்றும் பாடம் நடத்த வகுப்புக்கள் இல்லை என்பது தெரியுமா தெரிந்தால் இத்தனை நாள் அதற்காக ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறீர்களா? அதை கொண்டுவருவதற்கு என்ன முயற்சி எடுத்தீர்கள்?

  • Krishna Prasad - Chennai,இந்தியா

    The Supreme Court must take this as SUO MOTO and ban agitations by the teachers which affects the academics of thousands of students

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    நீதி மன்றம் கோடி கோடியாக கொள்ளை அடிப்பவர்களையும் , மக்கள் விரோத ஆட்சி செய்பவர்களையும் , நீதி மன்றத்தின் உத்தரவை மதிக்காத முதல்வரையும், முதலில் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கூறிவிட்டு மறு நாள் முடியாது என்று சொன்ன மத்திய அரசியும் இப்படி கடுமையாக கண்டித்ததுண்டா? இல்லை அந்த முதல்வரையும் பிரதமரையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொன்னதுண்டா?

    • yila - Nellai,இந்தியா

      அல்லது கலெக்டர் சகாயம் அவர்களின் கிரானைட் கொள்ளையைப் பற்றிய அறிக்கையை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுதான் உண்டா? அந்த அறிக்கை எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா? பொதுக்குழு வழக்குக்கு ஒரே நாளில் விசாரணை, அப்பீல், அனுமதி.... ஆனால், சாமானியர்களின் வழக்குகளுக்கு?

  • krish - chennai,இந்தியா

    அரசு ஊழியர்கள் மாதாந்திர சம்பளத்தை தனியார் பள்ளி ஆசிரியரின் சம்பளத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் நேரத்தில், கீழ் கண்ட விவரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள விழைகிறேன். 1 மணி வேலை நேர பணி சம்பளம்.(தனியார் ஆசிரியர் குறைந்த விடுமுறை நாட்கள் பெற்று, அதிக நேரம் பணி செய்ய உட்படுத்தப்படுகிறார்கள்). 2 வேலைக்கு பாதுகாப்பு. 3 மாணவர் சராசரி /உயரிய தேர்ச்சி (பாஸ்%) சம்பந்தப்பட்ட தேர்வு முடிவுகள்- அதனால் ஏற்படும் மன உளைச்சல், வேலை நீக்கம் 4 அதிக வேலை பளு, நிர்வாக நிர்பந்தம் போன்றவை.

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

    இந்த கேள்விகளையும் கேளுங்கள். எத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செயகிறார்கள்? கந்து வட்டி பேர் எவ்வளவு? பிரைவேட் டியூஷன் எவ்வளவு? யூனியன் வேலை மட்டும் செய்பவர்கள்? பள்ளியிலிருந்து 8 கி. மீ. க்கு மேல் தங்கி இருப்பவர்கள் ? கோடை விடுமுறையில் புத்தாக்க பயிற்சிக்கு போக மாட்டேன் என்பவர்கள்? தங்களுடைய வீட்டில் தங்களுடைய சப்ஜெக்ட்டில் நூலகம் வைக்காதவர்கள்?

    • ravichandran - Hosur,இந்தியா

      கடைசியில ஒருத்தன் கூட மிஞ்ச மாட்டான்...

  • Appu - Madurai,இந்தியா

    ஆசிரிய ஊழியர், மாணவர்களின் நியாயமான கோரிக்கையை முறையாக கையாள இயலாத இந்த அரசும் நீதி மன்றங்களும் மக்கள் மேல் வழக்கு தொடுப்பதிலும் அவர்களுக்கு அபராதம் போடுவதிலும் மத்தியில் ஆளும் பாஜகவின் முக பிம்பம் போல மக்களுக்கு மேலும் செலவீனங்களை அதிகப்படுத்தி விடுவதில் மட்டுமே இருப்பது மிக மோசமான கேவலமான மாநில ஆட்சி முறை.. இவர்கள் ஆட்சியை கவிழ்த்து வீட்டுக்கு அனுப்புவத்தில் தவறே இல்லை...கமான் தினகரன் சோர்ந்து விடாதே....

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஒரே ஒரு வருத்தம்...நீதிமன்றம் ஒரு கேள்வி கேட்டு இருக்கலாம்... "ஏன் இவ்வளவு நாள்கள் ஏழாவது ஊதிய கமிஷன் சிபாரிசை நிறைவேற்றவில்லையே என்று"

    • ஜெயந்தன் - Chennai,இந்தியா

      நீதி மன்றம் அரசை கேள்வி கேட்காது...இளிச்சவாயனையும் அப்பாவிகளையும் தான் கேள்வி கேட்கும்......

    • hasan - Chennai,இந்தியா

      அரசு ஏழாவது சம்பள கமிஷனையும் நிறைவேற்றினால் மட்டும் போராடமாட்டார்களா? முதலில் சங்கங்களை ஒழிக்க வேண்டும்

  • Senthilkumar Veeramalai - udaipur,இந்தியா

    Dear Friends, Kindly find out reasons why they are in strike, all are educated. If I am retiring from job in private company I can get all the benefits with in three months but what about Govt. They will give after three years if any can accept. Govt has make the tem perfect then only they can take actions

    • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      every action will have an equal reaction

  • balakrishnan - coimbatore,இந்தியா

    இதை நீதிமன்றம் சொல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, அரசே செய்யலாம், கையாலாகாத அரசு துணிந்து செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது, இவங்க பிரச்சனைகளை பார்க்கவே இவங்களுக்கு நேரம் இல்லை, இந்த சமயத்தில் இந்த அரசு ஊழியர் போராட்டத்தில் கவனம் செலுத்த எங்கே இருக்கும் நேரம், இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும், என்ன குறைச்சல் இவர்களுக்கு,

  • R Sanjay - Chennai,இந்தியா

    நாட்டில் ஆட்சியாளர்கள் அரசியல்வியாதிகள் அரசு உயரதிகாரிகள் எவ்வளவோ ஊழல் செய்து கொள்ளை அடித்து நாட்டின்/ மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளார்கள். அவர்களை களை எடுக்க இந்த நீதிமன்றங்கள் என்ன செய்தது? ஒரு அரசியல்வியாதி குற்றவாளி என்று கூறவே இருவது வருடங்கள் தேவைப்படுகிறது அரசு உயரதிகாரி ஊழல் செய்து தவறு இழைத்தவன் என்று ஆணித்தரமாக தெரிந்தும் அவன் அவன் பதவியிலேயே தொடர்ந்து இருக்கிறான். இது தான் நம் ஜனநாயக நாடு

    • partha - chennai,இந்தியா

      அரசியல் வியாதிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தண்டனை கொடுக்கக்கூடிய தேர்தல் என்ற ஒன்றை சரியாக பயன்படுத்த தெரியாத நம் மக்களை நோகுங்கள்

  • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

    திரு. கிருபாகரன் அவர்கள் மிக அருமையாக விமர்சித்துள்ளார். புனிதமான ஆசிரியர் தொழிலை நாசப்படுத்தும் புல்லுரிவிகளை களையெடுக்க வேண்டும். கொழுத்த சம்பளம் வாங்கிக்கொண்டு வேலையே செய்யாமல், தனிப்பட்ட முறையில் டியூசன் எடுத்து அதிலும் வருமானம் பார்க்கும் இந்த கேடுகெட்ட ஜென்மங்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பி.ஹச்.டி. படித்து விட்டு தனியார் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒரு பேராசிரியரின் சம்பளம் ருபாய் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரைதான். ஆனால் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் நாற்பதாயிரம்.. திரு.கிருபாகரன் மிகச் சரியான கேள்விகளை கேட்டுள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் என்ற புல்லுரிவிகள் பள்ளிக்கும் வருவது கிடையாது. வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வேலையே செய்யாமல் ஜாலியாக உலா வருகின்றனர். அரசு பள்ளிகளின் தரம் எவ்வாறு உள்ளது? அதற்கு காரணம் யார்? இதையெல்லாம் கேள்வி கேட்கும் காலம் வந்து விட்டது. இந்த பொறுப்பற்ற ஜென்மங்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் 25 % கொடுத்தால் போதும். அதுவே அதிகம்.

    • balakrishnan - coimbatore,இந்தியா

      உண்மையிலும் உண்மை, இவர்களின் வாழ்க்கைத்தரம் ஒரு பெரிய மில் முதலாளி அளவிற்கு உள்ளது, நிறைய வாத்தியார்கள் ஒரு பெரிய பள்ளிக்கூடம் போல டியூஷன் சென்டர் வைத்து நடத்துகிறார்கள், வாங்கும் சம்பளத்திற்கு உழைக்கும் நோக்கம் சிறிது கூட இல்லை, இதை தவிர இவர்களுக்கு அளவற்ற சலுகைகள் ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன இருக்கிறது, இவர்களை ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும், படித்த இளம் ஆண் பெண்களை நியமனம் செய்து, வெறும் பத்தாயிரம் ருபாய் சம்பளம் கொடுத்தால் போதும், வருடத்திற்கு இரண்டாயிரம் ருபாய் சம்பள உயர்வு, இதுபோல ஒரு ஐந்து வருடம், அதன் பிறகு அவர்களுக்கு தகுதி தேர்வு வைத்து சம்பளம் எக்காரணம் கொண்டும் இருபத்தைந்து ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    இந்த நீதிபதி தான் ஊராட்சி தேர்தலை நிறுத்தி இன்று வரை உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி அதிகாரிகளும் உள்ளாட்சி அலுவலர்களும் மஞ்சக்குளிக்க காரணமானவர். இப்போதும் ஆள்வோரின் அடக்குமுறையை ஆதரிக்க வந்து விட்டார். போராட்டத்துக்கான முக்கிய காரணம் ஓய்வூதிய பிரச்னை என்பதையே கவனத்தில் கொள்ளவில்லை.

    • Krishna Prasad - Chennai,இந்தியா

      இதே நீதிபதி தான் ஹெல்மெட் ruleaiyum எடுத்து வந்தது

    • yila - Nellai,இந்தியா

      நீதிபதிகளுக்கும் அரசிடம் இருந்து அழுத்தமா? ஏன் தராசு ஒரு பக்கமாக சரிகிறதோ?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ஆசிரியர்களின் சம்பளத்தை அவர்களால் பாதிக்கப்படும் மாணவர்களே நிர்ணயிக்கட்டும் அப்போதுதான் புத்தி வரும்

    • balakrishnan - coimbatore,இந்தியா

      மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்து தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கவேண்டும், என்ற நடைமுறை அமுல் படுத்தவேண்டும்,

    • yila - Nellai,இந்தியா

      அப்போ அரசியல் வாதிகளுக்கு..? வாக்குறுதி தவறும் ஆள்வோருக்கு...?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்ற கொள்கை உள்ள இது போன்ற அமைப்புக்களை ஏன் அரசு அங்கீகரித்தது?

  • DR TE PARTHASARATHY - chennai,இந்தியா

    நீதிபதி கூறிய கருத்துக்கள் மக்கள் மனதில் ஏற்கனேவே மனஉளைச்சலை ஏற்படுத்தியவைத்தான் .கல்விநிர்வாகம் என்ற ஒன்று தமிழ் நாட்டில் உள்ளதா ? கல்வி சிறந்த தமிழ்நாடு என்பது சரித்திரமாகி விட்டது. ஐ ஐ டி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு பின் தங்கி உள்ளது ஐ ஏ ஸ் தேர்வு நிறைய பேர் பாஸாகி உள்ளனர் .எனவே தகுந்த வழி காட்டுதலும் உதவியும் இருந்தால் மாணவர் வாழ்வு நலம் பெறும். தமிழ் நாடு வளம் பெறும்.

  • Vetri Vel - chennai,இந்தியா

    ஐந்து வருஷம் எம் எல் ஏ வாக இருந்தால் வாழநாள் பூரா ஓய்வூதியம் பெறும்.. நிழலுக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத கைநாட்டுகள் இருக்கும்போது... வாழ்நாள் பூராவும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏன் அரசு ஓய்வூதியம் வழங்கக் கூடாது?... அதுவும் கல்வி பணி செய்யும் ஊழியர்களுக்கு... கல்வி மட்டுமே.. ஒரு சமுதாயத்தை முன்னேற்றும்... எனது கருத்து... சீர் குலைப்பது இந்த வட நாட்டு காரனின் கை தடி அரசு... கல்வி துறையை மேம்படுத்த வேண்டிய கட்டாயம்.. இன்று தமிழ் நாட்டில்...

    • தேச நேசன் - Chennai,இந்தியா

      கல்விப்பணியென்றால் ரியல் எஸ்டேட் கந்துவட்டி சிட்பண்டு சைடு பிஸினஸா?

    • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

      கேனத்தனமான கருத்து " சீர் குலைப்பது இந்த வட நாட்டு காரனின் கை தடி அரசு... கல்வி துறையை மேம்படுத்த வேண்டிய கட்டாயம்.. இன்று தமிழ் நாட்டில்... " முதலில் வடநாட்டு காரன் சீர் குலைக்கிறானாம் அடுத்து ஒரு மாமாங்கமாக கெட்டுக்கிடக்கும் கல்வி தரத்தை நிமிர்த்தவேண்டுமாம்." எந்த வடநாட்டு காரன் தமிழ்நாட்டை ஆண்டாண்டா, தமிழகத்தின் கல்வி தரத்தை கெடுக்க? அக்மார்க் தமிழன் தானே ஆண்டுகொண்டும் பூண்டு எடுத்து கொண்டும் இருக்கிறான்? இதை கெடுக்க வேறு ஒருவன் வேண்டுமா?

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

    மூர்க்கங்கள் காலடி எடுத்து வைக்கும் எந்த நாடுமே முன்னேறாது. அது போல கம்யூனிஸ்ட்கள் நுழையும் எந்த துறையும் முன்னேறாது. இந்த இருவரின் ராசியும் அப்படி. கல்வித்துறையில் இருக்கும் சங்கங்கள் பெரும்பாலானது கம்யூனிஸ்ட் கட்சியினது. பள்ளிக்கு செல்லாமல் கட்சி பணிக்கு செல்லும் மற்றும் ரோட்டில் நின்று நோட்டீஸ் விநியோகித்து வரும் எத்தனையோ ஆசிரியர் என்ற போர்வையில் வேலைபார்த்து வரும் கம்யூனிஸ்ட்களை பார்க்கலாம். இது திமுகவின் ஆட்சி காலத்தின் கம்யூனிஸ்ட் கூட்டணியால் விளைந்த ஒரு அவலம். நீதிமன்றம் கொடுத்த சூடு இதற்கு கொசு கடித்தது போல. தட்டிவிட்டு விட்டு, போராடி கொண்டே இருப்பார்கள்.. இவங்களுக்கு மாணவர்கள் மீது அக்கறையா.. மாநிலத்தின் மீது அக்கறையா அல்லது நாட்டின் மீது அக்கறையா? இவர்களுக்கு அக்கறை எல்லாம்.. கட்சி...மதசார்பற்ற தன்மை என்று சொல்லி மூர்க்கங்களின் காலை கழுவி குடிப்பது, ஹிந்துக்களை எதிர்ப்பது மற்றும் முதலாளித்துவம் என்று சொல்லி ஏழை தோலாளர்களின் வயிற்றில் அடிப்பது

    • balakrishnan - coimbatore,இந்தியா

      உங்களின் கருத்தில் வெறுப்புணர்வை தான் பார்க்க முடிகிறது, பொறுப்புணர்வு இல்லை, கம்யூனிஸ்ட்கள் ஆளும் மாநிலத்தில் இருந்து தான் இன்று பல பெரிய பொறுப்புகளில் ... இருந்துவருகிறார், காவிகள் ஆளும் மாநிலங்களின் மாணவர்கள் தகுதியோடு ஒப்பிடுகையில் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட இயக்கங்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் கல்வித்தரம் உயர்ந்து தான் இருக்கிறது, டாடா, அம்பானி, பஜாஜ், கோட்ரேஜ், ஐ.டி.சி, போன்ற பெரிய நிறுவனங்களில் மிக உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இருப்பதே இதற்கு சாட்சி, அனைத்துக்கும் மேல் ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடார் தமிழகத்தில் படித்தவர் தான், டெல்லியில் பல பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள்,

    • partha - chennai,இந்தியா

      சிவ நாடார் தமிழ் நாட்டில் படித்தவர் என்பது மட்டும் உண்மை ஆனால் அவர் இந்த திருட்டு முட்டாள் கழகங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே (அதாவது 1967 க்கு முன்பே ) பூனா போய் walchand group இல் சேர்த்து தப்பிவிட்டார். இங்கிருந்திருந்தால் எப்படியெல்லாம் நாசமாகியிருப்பார் என்று சொல்லத்தேவையில்லை

    • sankar - Nellai,இந்தியா

      நீங்கள் சொல்கிற அவர்கள் எல்லாம் - உங்கள் கல்வித்திட்ட விளைவு அல்ல - மத்திய அரசு பள்ளிகளிலும் - மெட்ரிக்கிலும் பயின்றவர்கள் - ஆகவே இந்த ஒப்பீடு தவறு

  • Baskar - Paris,பிரான்ஸ்

    ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் அனாவசியமானது. அவர்கள் வாங்கும் லஞ்சமே போதும். நாளேடுகளில் பார்த்தால் நாளொரு தாசில்தார் .வி.ஓ.என்று பலமட்டத்திலும் லஞ்சம் வாங்குகின்றனர். இதில் இவர்களுக்கு மேற்கொண்டு சலுகைகள் வேறு. எல்லாமே இவர்களின் பின் நின்று ஆட்டி வைக்கும் அரசியல் கட்சிகள் தான் காரணம்.. இன்று நீதிமன்றம் சொன்னது போல் கடுமையான நடவடிக்கை தேவை.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    அரசு பள்ளி ஆசிரியர்களில் முக்கால்வாசி பேருக்கு மாணவர்களின் கல்வியில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பது, இந்த சமுதாயத்தை பாதிக்கிறது. இருபத்தைந்து சதவீத ஆசிரியர்கள் உண்மையில் சேவை மனப்பான்மையுடன் வேலை செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் கொஞ்சமும் பொறுப்பின்றி நடந்து கொள்கிறார்கள். அதற்கு காரணம் முறையான மேற்பார்வை மற்றும் மேலாண்மை இல்லாதது தான். அது அரசின் குற்றம். ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாணவர்களால் மட்டுமே ரெவியூ செய்யயப்பட வேண்டும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அப்படி தான் உள்ளது. அப்போது தான் அரசு கல்வி திறன் உயரும். அரசு வேண்டுமென்றே தனியார் பள்ளிகளை வளர்ப்பதற்காகவே, அரசு ஆசிரியர்களின் அலட்சியத்தை கண்டுகொள்வதில்லை. அரசியல்வாதிகள் தனியார் பள்ளி கூட கல்வி தந்தைகள் ஆகிவிட்டதால், அவர்கள் அரசு பள்ளிகளை மூடுவதற்கு சதி செய்கிறார்கள். கேள்வி கேட்க ஆள் இல்லை என்றால், யாருமே வேலை செய்யமாட்டார்கள். ஐம்பது சதவீத ஆசிரியர்கள் சுய தொழில் செய்கிறார்கள். இந்தியாவில் சுய தொழிலை வளர்க்க அரசு விரும்பினால், மக்கள் அனைவரையும் ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தால், அத்தனை ஆசிரியர்களும் தொழில் அதிபர்களாக மாறி, இந்தியா பணக்கார நாடாகிவிடும்.

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    இவர்கள் போராடுவது புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து தான். அதை பற்றி நீதிபதி கவலை பட்டு இருக்கின்றாரா? நீதிபதிகளுக்கு என்ன, நீதி வழங்க நிதியை பெற்று கொண்டு சந்தோசமாக இருப்பார்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடம் லஞ்சம் வாங்க முடியுமா என்பதை சிறிதும் நினைத்து பார்க்கின்றானா? எப்படி நீதி துறையில் சில கழிசடைகள் இருக்கின்றார்களே அதே போல் எல்லா துறையுளும் தான் இருக்கின்றார்கள். சில ஆசிரியர்கள் தவறு செய்யத்தான் செய்கிறார்கள். அதனால் எல்லோரையும் பழி வாங்க கூடாது.

    • Ophir Raja Lawrie - Tirunelveli,இந்தியா

      பென்ஷன் கிடையாது என்று தெரிந்து தானே வேலையில் சேர்ந்தார்கள். இப்பொழுது கேட்டால் நியாயமா?

    • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

      உலகம் பூராவும் , ஏன், இந்தியா பூராவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, CPF - க்கு மாறியாயிற்று. உனக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? அதுவும் 2003க்கு பிறகு வந்தவரிகளுக்குத்தான். அவனவன் மாதாமாதம் சம்பாதிப்பதில் ஒரு பங்கை தன் பிற்காலத்துக்கு சேமித்து வைப்பதுதான் காலத்தின் கட்டாயம். 20 அல்லது 30 வருஷம் உனக்காக உழைத்த உன் வீட்டு வேலைக்காரர்களுக்கு நீ பென்ஷன் கொடுக்கிறாயா? அல்லது உன் தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு அல்லது உனக்காக உழைத்த மாடுகளுக்கு நீ வாழ்நாள் பென்ஷன் கொடுக்கிறாயா? சில, விறல் விட்டு என்னும் ஆசிரியர்கள்தான் உண்மையாக உழைக்கிறார்கள். அவர்கள் பேரை சொல்லி நீ உன்னை உயர்திக்கொள்ளாதே.

    • Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா

      மிகச்சரியான கருத்து.

    • Appu - Madurai,இந்தியா

      @Ophir Raja Lawrie - Tirunelveli,இந்தியா ///வெட்டி தனமாக கடமையை செய்யவே கையூட்டு வாங்கும் அரசு ஊழியர்களுக்கு பென்சன் கொடுக்க இயலும்போது,,வருங்கால சந்ததிகளை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு பென்சன் கொடுப்பதில் என்ன குறை கண்டீர்?அதிமுக செம்போ நீர்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement