Advertisement

நெருக்கடி அதிகரிப்பு: அணி மாற வாய்ப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு வெற்றிகரமாக முடிந்து, கட்சி முழுமையாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வசம் வந்துள்ளது. இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினகரன் அணியில், 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். புதுச்சேரியில் தங்கியிருந்த அவர்கள், தற்போது, கர்நாடக மாநிலம், மைசூரு அடுத்த கூர்க், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், 'கட்சியில் தினகரன் கை ஓங்கும்; முக்கிய பதவிகளைப் பெறலாம்' என, நம்பினர்.

'மேலும், பலஎம்.எல்.ஏ.,க்கள், 'ஸ்லீப்பர் செல்' எனப்படும், ரகசிய பிரிவாக உள்ளனர். அவர்கள், முதல்வருக்கு எதிராக போர்க்கொடி துாக்குவர்' என, தினகரன் கூறி வந்தார்.
அது, சுத்தப் பொய் என்பது, பொதுக்குழுவில் உறுதியாகி உள்ளது. பொது செயலர் பதவியில் இருந்து, சசிகலா துாக்கி எறியப்பட்டதால், தினகரன் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்தகட்டமாக, தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குகள் எதுவும் உள்ளதா என, ஆய்வு செய்யப்படுகிறது. வழக்கு இருந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, அவர்களை வழிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

இனி தினகரனுடன் தொடர்ந்து இருந்தால், எதிர்காலம் வீணாகி விடுமோ என்ற அச்சம், அவருடன் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில், அவர்கள் அணி மாறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (42)

 • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

  நான் நினைத்தேன் ஜெயாவை யாரும் மிரட்டவோ பணியவைக்கவோ முடியாது...நிச்சயம் சசிகலாவை அவர் ஒரு வேலைக்காரி இடத்தில் தான் வைத்திருக்கிறார் என்று. இப்போது மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற வெட்கம் சிறிதும் இன்றி ஆட்சிக்காக துடிப்பதை பார்த்தால், ஜெயா இருக்கும்போதே இவர்கள் நிச்சயம் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்திருப்பார்கள். அப்படி இருந்தும் ஜெயா சசியை தன்னுடன் இருக்க அனுமதித்திருக்க மாட்டார். வளர்மதி சொல்வதுபோல் அவரை இந்த கொள்ளை கும்பல் என்ன சொல்லி மிரட்டி வைத்திருந்தது தெரியவில்லை. இல்லையெனில் சசி திமுகவுடன் சேர்ந்து மிடாஸ் வருமானம் பார்ப்பது ஜெயாவுக்கு தெரிந்து விட்டு வைத்திருக்க மாட்டார்...

 • Vijay D. Ratnam - Chennai,இந்தியா

  21 பேரும் அணி மாறவேண்டிய அவசியமில்லை. ஒரு ஏழு எட்டு பேர் மாறினால் போதும். ஆட்டம் க்ளோஸ். மன்னார்குடி மாஃபியா ஆட்டம் ஒன்றிரண்டு வாரங்களில் முடிந்துவிடும்.

 • Sundaram - Thanjavur,இந்தியா

  முதலில் அரசியல் பரபரப்புக்கு முடிவை கூறுங்கள்...ஊழல் குடும்பத்தை நீக்கிய ஆட்சியை மட்டுமே அமைக்க வேண்டும்

 • Jeeva - virudhunagar,இந்தியா

  அணி மாறித்தானே ஆக வேண்டும் .

 • shekaran - thiruchi,இந்தியா

  இதுக்கு ஒரு முடிவே இல்லையா

 • rajan - kerala,இந்தியா

  அண்ணே இப்படியே போன இனி நம்ம சுடலை கதை கனவு என்னவாகும். புஸ்ஸுன்னு போகும்டா இனி அவனும் சத்தமில்லாம அவன் அச்சனுக்கு டீ ஆதிகிட்டே உன்னால நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என சொல்லி அவனும் கூட நட்பு கேடாய் முடியும்னு கிட்டு வருவான்.

 • rajan - kerala,இந்தியா

  ஆகா சின்னத்தாயி மன்னார்குடி மாபியா பல்லை புடுங்கியாச்சு. இனி அந்த புகழேந்தி பையன் மட்டும் தான் அப்பப்போ பிச்சை காசுக்காக போய் டீ ஆத்திகிட்டு வருவான். சின்னத்தாயி கூட இனி எந்த தொந்தரவும் இல்லாம கேண்டில் ஒன்னு போல சைஸ் மாறாம உருட்டலாம். என்ன ஆட்டமடா இது மெகா சீரியல் மாதிரில்லா போட்டாக. இனி மொத்த கன்டைனரையும் அள்ளி கஜானாவுல சேர்த்துட்டா சரியாப்போகும்.

 • Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா

  தமிழக பாரதிய ஜனதா பார்ட்டி NEET , NAVYOTHAYA சர்ச்சையை விட்டு விட்டு கிராமங்கள் தோறும் நிலவும் பராமரிப்பற்ற குடிநீர் மற்றும் தரமற்ற சாலைவசதி மற்றும் கட்டிடங்கள் , நில ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு போராட முன்வரவேண்டும் . திருட்டு திருவிட கழகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை ஊடகங்கள் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பரப்பிவருவதை வீதி இறங்கி போராடினாலொழிய தமிழகத்தை கைப்பற்ற வேறு வழிகள் இல்லை . வார்டு வாரியாக போராட்டங்களை ஆரம்பித்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக பதவியை கைப்பற்றலாம் .

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Who is paying the expenditure incurred in Koovaathur, Pondicherry Coorg resorts? If the MLAs staying in the resorts enjoys the hospitality from others, is it not amount to corruption ? The income tax department must probe the expenditure details of the MLAs stayed and still staying in resorts. The source of money for these politicians stay must be known to the public people.

 • Indhuindian - Chennai,இந்தியா

  புலி வருது புலி வருது என்று பூச்சாண்டி காட்டினால் ஒரு நாள் நிஜமாகவே வந்து பூச்சாண்டி கட்டியவனை அடித்துவிடுமல்லவா

 • sachin - madurai,இந்தியா

  ஈ பி எஸ் எப்போதோ ஆட்சி செய்யும் பெரும்பான்மையை இழந்து விட்டார்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சசி மற்றும் தினகரனுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். எனவே தேர்தல் என்றுவந்தால் இந்த செய்திகளின் தாக்கம் பொதுமக்களிடம் இருக்கும்.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  நிச்சயமாக 2 அல்லது 3 நபர்களை தவிர்த்து அணி மாறுவது நிச்சயம் அதுவும் சின்னம் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  தீனக்காரன் தனி கட்சி துவங்குவார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கொள்கை பரப்பு செயலாளர் ஆவார். அந்த கட்சி பிஜேபி எதிர்ப்பு என்ற காரணம் காட்டி திமுகாவோடு கூட்டணி வைக்கும். தற்போதைய அரசியல் சூழ்நிலையே இனி நீடிக்க போகிறது. தீனக்காரன் தரப்பு சில எம் எல் ஏக்கள் திமுகாவில் அடைக்கலம் ஆவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தீனக்காரனின் கட்சி கரைந்து காணாமல் போகும். இரண்டு மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசால், தீனக்காரன் கைது செய்யப்படுவார். இது எனது கணிப்பு. எப்படி போகும் என்று பாப்போம்.

 • Original Indian - Chennai,இந்தியா

  இன்னும் அதிமுக படம் முடியவில்லை அடுத்து இபிஸ் & ஒபிஸ்யின் அதிகார சண்டை போடும் காட்சி........

 • Franklin Kumar - Chennai,இந்தியா

  .... ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கவும்

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜெயாவையே ப்ளாக் மெயில் செய்த மன்னை மாபியா கும்பல் அல்லவா ?

 • R Sanjay - Chennai,இந்தியா

  21 MLAக்கள் அனைவரும் அணிமாறிவிட்டால். இவர்கள் அனைவரும் இனி புனிதர்களாக கருதப்படுவர்.

 • ilicha vaayan - chennai,இந்தியா

  ஒரு கோமாளியும் 20 கூமுட்டைகளும் ஆட்டம் போடுகின்றன. மன்னார்குடி மாபியா திமுக வோடு சேர்ந்து விடும் என்ற சிறு விஷயம் கூட யோசிக்காத கூமுட்டைகள் . இடர்பாடியும் வெந்நீரும் காசு பார்ப்பவர்கள் தான் சந்தேகமே இல்லை. மற்ற கொள்ளைக் கூட்டங்களை விட இவர்கள் எவ்வளவோ மேல் .வாங்கிய காசுக்கு தின குறையிடம் கூவியாச்சு . உடனே ஓடி வந்து தாய் வீடு வந்தேன் என்று பித்தலாட்டம் செய்தாவது மீண்டும் சேருங்கள் இங்கயும் காசு கிடைக்கும். உங்கள் வாழ்நாளில் கடைசி முறையாக 20 பேர்களும் பதவியில் இருக்கிறீர்கள். போவதற்குள் ஒரு சிறு துளி நன்மையாவது உங்கள் தொகுதிக்கு செய்யுங்கள் .

  • Ravin Thangaraj - Theni,இந்தியா

   "உங்கள் வாழ்நாளில் கடைசி முறையாக 20 பேர்களும் பதவியில் இருக்கிறீர்கள்" - அருமை..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தினகரனுடன் தொடர்ந்து இருந்தால், எதிர்காலம் வீணாகி விடுமோ என்ற பயத்தை விட பணம் பதவி போய் விடுமே என்ற பயம்தான்...

 • Sami - Tirupur,இந்தியா

  மக்கள் பணி செய்யாமல் ஓடி போன சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஆட்கொணர்வு பொது வழக்கை நீதிமன்றத்தில் ஒருவர் கூடவா போடவில்லை. அப்போ மக்களும் இவர்களுக்கு ஆதரவு என்பது விளங்குகிறது.

  • AURPUTHAMANI - accra,கானா

   சாமீ சார்,ரொம்ப யோசிக்கிறீங்க. வேண்டாம் சார் .....

 • பிரேமானந்தா சாமியார் - perth,ஆஸ்திரேலியா

  அட என்னப்பா .... கைய பெசஞ்சிகிட்டு இருக்காங்க eps மற்றும் ops ...... வன் கொடுமை மற்றும் குண்டர் சட்டத்தில் வெளியில் வரமுடியாத வழக்குகளை ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் தொகுதி மக்கள் வாயிலாக அள்ளி தெளியுங்கள் ...அப்புறம் பாருங்கள் .......... முதலில் கருணாஸை பிடியுங்கள் மற்றவை எல்லாம் வழிக்கு வந்துவிடும் ....அவர் போடும் தில்லாலங்கடி நாடகத்திற்கு அளவே இல்லை

 • Musthafa - Cuddalore,இந்தியா

  அணி மாற்றம் தான் இயல்பு, இவர்கள் எப்போதுமே அணிமாறுபவர்கள்

 • karthi - chennai,இந்தியா

  மக்கள் எதிர்ப்பு சசிகலா குடும்பத்தின் மீது அதிகமாக இருப்பதால், எடப்பாடி அவர்கள், ஜெயலலிதா பாணியில் அதிரடியாக செயல்பட வேண்டும். குடகில் உள்ள 20 MLA க்களின் குற்ற பின்னணி ஆகியவற்றை துரிதமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால், துண்டை காணோம், துணியை காணோம் என்று அனைவரும் ஓடி வந்து விடுவார்கள். மக்களின் அன்றாட பணிகள் முடங்கி இருப்பதால், மக்கள், சொகுசு ரிசார்ட்டில் உள்ள அந்த 20 MLA க்களின் மேல் மிகுந்த கோபத்தில் உள்ளனர். குடும்ப ஆட்சியை மக்கள் எதிர்க்கின்றனர்.

  • balaji - ,

   Adu Ela sari Karthick koovatur la irunda 122 MLA Kal ah Ena pananum and inda aayama pota sign edum seladunu edapadi avargala sattasabai admk talaivara ah Pani adula sign potadu inda sasikala Dan solikranga so avarum padavi ah resign pannaum ah

  • sachin - madurai,இந்தியா

   122 பேர் கூவத்தூரில் கூத்து அடித்த பொது மக்கள் என்ன சந்தோஷமாகவே இருந்தார்கள் இதே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூத்து அடித்ததில் மக்கள் மனதில் அதிமுக இதோடு காலி பண்ண வேண்டும் என்று தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார்கள் . உள்ளாட்சி,பாராளுமன்ற தேர்தலில் குடுக்கும் அடில அதிமுக துண்டை காணோம் துணியை காணோம் னு ஓட போகுது பாருங்க ...

 • Thiii - Chennai,இந்தியா

  அப்போ ஸ்டாலின் முதல்வர் கனவு அம்பேலா.. கடைசிவரைக்கும் கனவு முதல்வர் தானா..?

  • Anand - chennai,இந்தியா

   அதிலென்ன சந்தேகம்.

  • sriram - Chennai,இந்தியா

   "S" என்கிற ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் முதலமைச்சர் ஆவது கஷ்டம் தான்..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பிளாக் மெயில்தான் காரணமாயிருக்கும் இல்லையெனில் பெரும்பாலானோர் பொதுக்குழுவுக்கு ஓடியிருப்பர்

 • Sithu Muruganandam - chennai,இந்தியா

  தினகரனிடம் உள்ளவர்கள் எத்தனையோ சோதனையிலும் உறுதியாகவே உள்ளார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

  • soundararajan - Udumalaipettai,இந்தியா

   என்ன பெரிய சத்ய சோதனை அவர்களுக்கு ? சோதனை அல்ல... பணம் செய்யும் மாயாஜாலம் .... தினகரன் பணத்தின் மூலமாக அடிமைகளை கட்டு படுத்தி வைத்து இருக்கிறார். MLA க்கள் அவ்வளவு ஒழுக்க சீலர்களாக இருந்தால் ஏன் பாண்டிச்சேரி, குடகு என்று மறைந்து வாழ வேண்டும். தங்களது தொகுதிகளிலேயே தில்லாக சுற்றி வரலாமே. இவர்களையெல்லாம் (காசு வாங்கிக்கொண்டு) ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த நமது வாக்காளர்கள் தான் முதல் குற்றவாளிகள். தினகரன் ஆகட்டும் OPS , EPS ஆகட்டும், எல்லோரும் தங்களது பதவி, அதிகாரத்திற்க்காக போட்டி இடுகிறார்களே ஒழிய, மக்களுக்காக, அவர்களது நலன் மற்றும் முன்னேற்றத்திற்க்காக, இதுவரை ஒரு எள்ளளவு கூட செய்யவில்லை, எண்ணுவதில்லை.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  தொகுதி மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் இந்த MLA க்கள் சொகுசு விடுதிகளில் பொழுதை வீணாக்குகிறார்கள். அதற்கு ஏதாவது தண்டனை உண்டா?

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அட கேனப்பயித்தாரானுகளா தினகரன் ஒரு மலை கூர் இல்லேயே எப்படி அவனை நம்பினீங்க பெயில் முடிஞ்சு போனால் போயிருவான் ஜே=திஹாருக்கு தெரியாதா ,இவன் கனிமொழி ராசா எல்லாமே ஜாமீனிலேயே தான் இருக்காங்க மறக்கவேண்டாம் , ஐயாவாள் ஒதுக்கி ஓரம்கட்டபாவங்களே சசியின் குடும்பம் முச்சுடுமே கச்சிலேந்து தள்ளப்பட்டவங்களே தான் அந்தம்மாவால் ஓரம்கட்டப்பட்டவனே தான் இன்று உள்ள பல மந்திரிகள் eps செங்கடையான் எல்லாமே சசியால் பதவிக்குவந்தானுக தெரியுமில்லே

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் மற்றும் சவுண்டு சரோஜா தவிர மற்றவர்கள் எல்லோரும் இங்கிட்டு வந்திடுவாய்ங்க.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இவர்களுக்கு கெட்ட காலம் நெருங்கி விட்டது. புகழேந்தி பேச்சை கேட்டு ஆடும் இந்த எம்.எல்.ஏக்களுக்கு. பழனியப்பனை பிடித்தது போல் எந்த எம்.எல்.எ மீதும் வழக்கு இருந்தால் பிடித்து உள்ளே போட வேண்டியது தான். நாஞ்சில் தலை மறைவு பழனியப்பன் விசாரணை கைதி .மீதம் உள்ளது வெற்றி வேல் செந்தில் பாலாஜி மேலும் இரண்டொரு பேர்கள். ஆமாம் பெங்களூர்காரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை. அவனை முதலில் தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்.

  • AURPUTHAMANI - accra,கானா

   சரியாக சொன்னீர்கள்,இந்த ஆள் கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஆதரவாக வாட்டாள் நாகராஜை எதிர்த்து இதுவரை பேசவில்லை. லைப்ரரி உடைப்பு முதல் லாரி டிரைவர் அடிப்பு மற்றும் kpn எரிப்பு அன்று வரை கூட ஆளே காணோம் இவர் யார் என்றே தெரியாது ..பரப்பன அக்ராஹார PRO போஸ்ட் கிடைத்தவுடன் கொடுத்திருக்கு மேல் கூவ ஆரம்பித்து விட்டார்.எல்லாம் பணம் ,மேலும் இதற்க்கு முக்கிய காரணம் நமது டிவிகளும் அதன் இரவு பஞ்சாயத்துகளும்,அதிலும் சில நெறியாளர்களும் வஞ்சனை இல்லாமல் இவரை தமிழக முதல்வர் ரேஞ்சுக்கு உயர்த்தி உரையாடுவதுதான் வேடிக்கை

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  தங்க தட்டில் வைத்து கொடுத்த மாதிரி வாய்ப்பு வந்தது ஸ்டாலினுக்கு. சரியான அறிவுரை இல்லாமல் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார். பாண்டிச்சேரிக்கு தினகரன் குரூப் சென்றதுமே ஆட்டத்தை தொடங்கி இருக்க வேண்டும். இப்போது உயர் நீதி மன்றம் உதவிக்கு வந்தாலும், தினகரன் குரூப் பிரிந்து விட்டால் கதை முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு வர போவதில்லை. வரப்போகும் சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அடிமைகள் இருக்கும் காசை வைத்து ஸ்தாலினை வீழ்த்தினாலும் ஆச்சர்யம் அடைய வேண்டாம். ஜெயா அப்போலோவில் இருந்தபோதே அடிமைகள் காசை வைத்து மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஸ்தாலினை புறமுதுகிட்டு ஓடுமாறு செய்தவர்கள் தான். வாய்ப்புகள் எப்போது கூரையை பிய்த்து கொண்டு கொடுக்காது என்பதை விரைவில் ஸ்டாலின் உணருவார்.

  • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

   இதுக்கெல்லாம் அவுரு சரிப்பட்டு வர மாட்டாரு. கம்யூனிஸ்ட், வைகோ திருமா இவங்க கூட சேர்ந்தா வெறும் போராட்டம் தான் பண்ண முடியும்.

  • ilicha vaayan - chennai,இந்தியா

   இட ஒதுக்கீட்டின் படியும் , சமூக நீதியை நிலை நாட்டவும் அண்ணன் சுடாலின் அவர்களுக்கு, முதல்வர் பதவி மற்றும் மாணவர் அணி தலைவர் பதவியும் அளிக்குமாறு வந்தேறிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement