Advertisement

துக்க வீட்டில் வீபரீதம்: சவப்பெட்டி மீது மின்சாரம் பாய்ந்ததில் 15 பேர் மயங்கி விழுந்தனர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குளிரூட்டப்பட்ட சவப்பெட்டி மீது மின்சாரம் தாக்கியதில் 15 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த செம்பட்டிவிடுதி என்ற பகுதியில் சின்னதம்பி, 70 என்பவர், உடல் நலக்குறைவால் இறந்தார். அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இன்று இரவு 7 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டு மீணடும் மின்சாரம் வந்தது.அப்போது சவப்பெட்டி யில் உள்ள வயரை பிளக் பாயன்ட்டில் பொருத்தும் போது மின்சாரம் தாக்கியது, இதில் சவப்பெட்டி அருகே இருந்த 15 பெண்கள் மீது மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் சிகிச்சை பெற்று இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பினர். மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement