Advertisement

சசிகலாவுக்கு சலுகை தொடர்கிறது: தகவலறியும் சட்டத்தில் அம்பலம்

பெங்களூரு: 'சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் வாபஸ் பெறப்படவில்லை' என, தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

பல மாற்றங்கள் :கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதி அளிக்க பட்டதாகவும், சலுகை அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், கர்நாடக சிறை துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கிடையில், சிறையிலுள்ள சசிகலா தொடர்பாக பல கேள்விகளை கேட்டு, வக்கீல் நரசிம்மமூர்த்தி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த கேள்விகளுக்கு, மத்திய சிறை உதவி கண்காணிப்பாளர், குறிப்பிட்ட நாட்களுக்குள் பதில் அனுப்பியுள்ளதாக, நரசிம்மமூர்த்தி கூறி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: சிறை விதிமுறைப்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை, நான்கு பேர் மட்டும் கைதியை பார்க்கலாம். நெருங்கிய உறவினர்களாக இருந்தால், ஆறு பேர் வரை பார்க்கலாம்.ஆனால், சசிகலாவை, ஏழு பேருக்கும் அதிகமானோர்பார்த்துள்ளனர்; இவர்களை, நெருங்கிய உறவினர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கட்சிக்காரர் கள் என தெரியவந்துள்ளது.

விதிமுறைகள் தளர்வு:கைதிகளை, பகல், 11:00 மணியிலிருந்து, மாலை,
5:00 மணி வரை தான் பார்க்க அனுமதி அளிக்கப்படும். சசிகலா விஷயத்தில், சிறை விதிமுறைகள் தளர்த்த பட்டுள்ளன. சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள், வாபஸ் பெறப்பட்டதா என்ற கேள்விக்கு, 'எந்த சலுகையும் வாபஸ் பெற பட வில்லை' என, பதிலளிக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • mindum vasantham - madurai,இந்தியா

  Indha amma onjidichu daa

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  இதை படித்த திருநாவுக்கரசர் தலையில் துண்டை போட்டு நடக்கிறார் கருநாடக காங்கிரஸ் ஆட்சியில்.

 • ravi - chennai,இந்தியா

  வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாத கர்நாடகா சிறை அதிகாரிகள் - நீங்கள் என்ன மனிதர்களா - இந்த ஊழலில் ஈடுபடுகிறீர்களா -

 • christ - chennai,இந்தியா

  பணம் விளையாடுகிறது ........

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நடந்து வரும் விவகாரங்களை பார்க்கும் பொழுது கர்னாடக அரசு சசியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது போல உள்ளது...இதுவும் மத்திய அரசின் திருவிளையாடல்களில் ஒன்றா..

 • anand - Chennai,இந்தியா

  எல்லாம் ஸ்டாலின் புண்ணியம் தான்..ஆட்சியை கவிழ்த்தால் விடுதலை செய்வதாக ஒப்பந்தம் என்று தகவல்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிறையையும் கூட திரண்ட மடம் போல நடத்தும் கர்நாடக அரசின் யோக்கியதை உலகறிந்ததே... இதை மனதில் கொண்டுதான் சு சாமி சின்னம்மாவை வேறு சிறைக்கு மாற்றவேண்டும் என்று சொன்னார்...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சசிக்கு மட்டும் தானா இந்த சலுகைகள் கிடைக்கிறது? ஆயிரம் கோடியை ஏப்பமிட்ட சுபத்திரா ராய் போன்ற பணக்கார கைதிகளுக்கும் இதே நிலைமை தான். அவர் இப்போது மத்திய அரசின் சலுகையுடன் இருப்பதால், விஷயம் வெளியே கசிவதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வேண்டிய மல்லையா தான் மாட்டிக்கொண்டார். ஆட்சி மாறியதும், காட்சிகள் மாறும். இப்போது தண்டனைக்கு உட்பட்டவர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். முடிந்தவரை, வாய்தா வாங்கி பார்ப்பார்கள். கடைசியில், ஜெயிலை வாங்கிவிடுவார்கள். ஆட்சி மாறியபிறகு, குமாரசாமி போன்ற நீதிமான்கள் சரியாக கணக்கு போட்டு விடுவித்து விடுவார்கள். சிபிஐ எதிர்கட்சிக்குனு வலை போடும். ஆளும் கட்சியினருக்கு கிளீன் சீட் கொடுக்கும். இந்த நாடகங்களை தொடர்ந்து பார்ப்பது நமது தலையெழுத்து.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement