Advertisement

நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை செயல்படுத்த...ஆலோசனை!

நதிகளை இணைத்து, தேசிய நீர் வழி போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 30 நதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை, 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பதினைந்தாயிரம் கி.மீ., நீள, கால்வாய் கட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் இடையே, தண்ணீரை சேமித்து வைக்கும் ஏரிகள் போன்ற, 3,000 நீர் நிலைகளை உருவாக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதல்கட்டமாக, கென் - பெட்வா, தமங்கங்கா - பிஞ்ஜால், பர் தபி - நர்மதா, மகாநதி - கோதாவரி, மனஸ் - சங்கோஷ் தீஸ்டா - கங்கை ஆகிய நதிகளை, இணைக்கும் திட்டம், வரும் டிசம்பரில் துவக்கப்பட உள்ளது.

எதிர்ப்பு



நதிகளை இணைத்தால், தங்களின் நீராதாரம் பாதிக்கும் என கருதுவதால், இந்த திட்டத்துக்கு, சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், மதுரையை சேர்ந்த, பேராசிரியர், ஏ.சி.காமராஜ் முன்வைத்த, நீர்வழி போக்குவரத்து திட்டம், பல மாநில
அரசுகளின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, திட்டம் சிறப்பாக உள்ளதாக, காமராஜுக்கு, பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆர்வம்



காமராஜின், நீர்வழி திட்டத்தை அமல் படுத்துவ தோடு, நீர் வழிப்பாதைகளில், போக்கு வரத்தை செயல்படுத்தவும், அமைச்சர் நிதின் கட்கரி ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

தென்னக நதிகளில் நீர்வழி போக்குவரத்து



மதுரையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ், நதிகள் இணைப்பிற்கான, மத்திய அரசு நிபுணர் குழுவில், உறுப்பினராக உள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள நதிகளை, சிறப்பான வகையில் பயன்படுத்த, தென்னக நதிநீர் போக்குவரத்து திட்டத்தை, காமராஜ் முன்வைத்துள்ளார்.இதுகுறித்து, காமராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டில், எந்த மாநிலமும், நீர் இன்றி கஷ்டப்பட கூடாது என்பதே, என் நோக்கம். அதற்காக, நீடித்து நிலைக்கத்தக்க, நீர் பகிர்மான திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்துக்கும், தேசிய நீர்வழி போக்குவரத்து திட்டத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.ஆனால், நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதால், அனைத்து மாநிலங்களுக்கும், பல்வேறு பலன்கள் கிடைக்கும்.நதிகள் இணைப்பு திட்டத்தால், 3.5 கோடி ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மாறாக, நீர்வழி போக்குவரத்து திட்டத்தால், நாடு முழுவதும், ஆறு கோடி ஹெக்டேர் விவசாய நிலம் பாசனம் பெறும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தால், 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு காமராஜ் கூறினார்.

எதிர்ப்பு இருக்காது!



மழை, வெள்ள நீரை பயன்படுத்துவது குறித்து, காமராஜ் கூறியதாவது:

நதி இணைப்பு திட்டம், ஒரு திசை நோக்கி செயல்படும். மாறாக, நீர் வழி போக்குவரத்து திட்டம், இரு திசை நோக்கி செயல்படும். இந்த திட்டம் மூலம், மழை, வெள்ளத்தால், ஆண்டுதோறும் வீணாகி வரும், 1,500 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றினால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். 2,000 கி.மீ., நீள, நீர்வழி போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்.

ஆண்டுதோறும், கோதாவரி நதி நீர் மட்டும், 3,000 டி.எம்.சி., கடலில் கலந்து வீணாகிறது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் தண்ணீர் தேவை, இதில், 25 சதவீதம் மட்டுமே. நதிகள் ஓடும் மாநிலங்களில், அவற்றின் பயன்பாட்டுக்கு அதிகமான நீர் மட்டுமே சேகரிக்கப்படுவதால், இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதில், எந்த மாநிலத்துக்கும் சிரமம் இருக்காது.இவ்வாறு காமராஜ் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (38)

  • Santhana gopala krishna pappachami china kuzhanthai / - Sydney ,ஆஸ்திரேலியா

    இங்கு மழை வரத்து குறைவுதான் என்றாலும் சேமிக்க கற்றுக்கொள்ளவில்லை. அரசியல் செய்கிறோம்.

  • Ganesh Balaji - Edmonton,கனடா

    இந்த திட்டத்தால் அனைவருக்கும் மிகவும் பலன் உள்ளது என்றால் மத்திய அரசு உடனே பரிசீலனை செய்து, அதனை விரைவில் செயல் படுத்த வேண்டும். இத்திட்டத்தை கொடுத்த பேராசிரியர், திரு ஏ.சி.காமராஜ் ஐயா அவர்களுக்கு மிக்க நின்றி.

  • Manian - Chennai,இந்தியா

    1900 ங்களில் சர் சி பி ராம சாமி அய்யர் இந்த நதி இணைபற்றி முதலில் சொன்னார். அப்போது யாரும் கேட்கவில்லை. தற்போதாவது இந்த சிந்தை வந்தது நல்லதே. ஆனால், இது 2, 3 மாகாணங்களிலேதான் முதலில் நடக்கும். அரசியல் வியாதிகள் மற்ற இடங்களில் வர விட மாட்டார்கள். பி ஜேபியை குறை சொல்லுபவர்கள் இதற்கு வழி சொல்ல மாடடார்கள். நாமும் நீர் சேகரிப்பில் முதலை ஈடுபடவேண்டும். ஆனால் அதை நாம் செய்ய மாட்டோம். திரு உமாபதி சொல்வதும் உண்மை. அமெரிக்காவில் தற்போது இது நடை முறையில் உள்ளது. வசந்த சுவாமிதான் எதிர்மறை பேச்சை ராமச்சந்திரன் பதில் சரி செய்கிறது.திரு ஜெகன் சொல்லுவதில் ஒருவித நியாயம் உள்ளது. ஆனால் நம் அவர்களுக்கு பதிலுக்கு என்ன கொடுக்க முடியும் என்பதையும் சொல்லலாம். ஓசி, இலவசமே வாழக்கை என்ற தமிழ் நாடு வெறுப்பை மட்டுமே தர முடியும். நாம் திராவிடர்கள், அவர்கள் ஆரியர்கள்.

  • Swaminathan Krishnaswami - Chennai,இந்தியா

    Thiru kamaraj அவர்கள் அவருடைய இந்த எண்ணங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டால், என்னைப்போன்ற இந்த சப்ஜெக்ட்டில் ஆர்வம் உள்ளவர்கள் படித்து பயன் அடைய முடியும்.

  • jagan - Chennai,இந்தியா

    நீர் மிகு மாநிலங்கள் ஏன் தண்ணீரை இலவசமாக குடுக்க வேண்டும்....கோதாவரி நதியில் இருந்து 2000 TMC தண்ணீரை சேமிக்க ஆந்திர செலவு செய்து அணை கட்டி சேமிக்கிறார்கள்....வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும்...எனவே குடிநீருக்கு நல்ல விலை கிடைக்கும்.....இலவச நதி இணைப்பு நடக்காது....... நாம வெறும் 205 TMC க்கு கர்நாடகத்துடன் நாயா பேயா அடிச்சுகிறோம், தவிர நம்மிடம் எந்த திட்டமும் இல்ல என்பது வேறு விஷயம்

  • ராமன் -

    இது புல்லட் ட்ரைனை விட நல்லது. ஆனா இதுக்கு கடன் தர மாட்டாங்க. ஜப்பான் காரனும் கூட.

  • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

    போக்கு காட்டிட்டே இருக்கீங்க. இதுதான் உண்மையான வளர்ச்சி. அப்போதுதான் உண்மையான புதிய இந்தியா பிறக்கும்.

  • Shree Ramachandran - chennai,இந்தியா

    முதலில் நாம் மழை நீரை குளம் ஏரிகளை நிரப்ப வேண்டும்.கூடுமானவரையில் எல்லா வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு வேண்டும். தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கி நம் குடிநீர் பற்றா குறையை தீர்க்க வேண்டும். பழந்தமிழகத்தில் மழை நீர் சேகரிக்காமலேயே செழிப்பாக இருக்க வில்லையா. மாடு கட்டி போரடித்து மாளாத செந்நெல் என்று ஆனைக்கட்டி போரடித்தது தமிழகம். நாம் நாள்தோறும் நீர்நிலைகளுக்கு விளக்கேற்றி நன்றி சொல்லி வந்தாலே போதுமானது.முதலில் நமக்கு கண்டலேறு அணையில் இருந்து நமக்குரிய நீரை தரட்டும். அதுவே தப்பு தாளம்.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    தமிழகத்தின் தற்கால சிந்தனையாளர்களாக டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அப்துல்கலாம் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது இதைத்தான். வாஜ்பாய் காலத்தில் இதை ஆராய கமிட்டி அமைக்கப்பட்டு மன்மோகன் காலத்தில் மூடப்பட்டுவிட்டது. மோடி காலத்திலாவது இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறட்டும் ஒரு பக்கம் புல்லெட் ரெயில் மறுபக்கம் நீர்வழி கப்பல் என போக்குவரத்தோடு விவசாயமும் மேம்படும் சுற்றுலாவும் மேம்படும் எரிபொருள் சேமிப்போடு பல வேலைவாய்ப்பும் உருவாகும். சாலை போக்குவரத்தில் சாதிக்கும் கடகரி இதையும் சிறப்பை செய்வார் என நம்புவோம் . அனால் எதிர்க்கட்சிகள் நிலஅபகரிப்பு ஏழைகள் வயிற்றிலடைப்பு என ஆர்பாட்டம் செய்து மக்களை தூண்டி விட்டு நீதிமன்றம் சென்று தற்காலிக தடை உத்தரவுகள் வாங்கி திட்டங்களை தாமதிக்காமல் இருக்க வேண்டும் .

  • umapathy - vellore,தாய்லாந்து

    நீர் வழி போக்குவரத்துக்கு ஒரு நாட்டின் முன்னற்றத்துக்கு உரு துணை யாக இருக்கும் என்பது உறுதி. தாய்லாந்து மன்னர் ஏற்படுத்திய நீர் வழி சாலை வழியாக பெரு வாரியான மக்கள் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் அதன் தலைநகர் பாங்காக் உடன் பிற மாநிலங்கள் மேற் கொள்ள லகுவாக உள்ளது. இது நான் நேரில் கண்டு அறிந்த உண்மை. எதிர் வாதம் செய்பவர்கள் கொஞ்சம் இணைதளத்தில் தேடி பாருங்கள். புரியும்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    அந்த காமராஜருக்கு பிறகு இந்த காமராஜ் அவர்களின் நீண்டகால திட்டம் அமைந்தால் மகிழ்வடைவோம். நீர்ப்பாசனம், நீர்வழி போக்குவரத்து இவற்றையெல்லாம் விட நாட்டு மக்கள் குடிதண்ணீருக்கு அல்லல்படாமல் இருக்க இத்திட்டம் பயன்படுமானால் அதைவிட மகிழ்வான செய்தி வேறெதுவுமில்லை.

  • Indhuindian - Chennai,இந்தியா

    In land water transportation is the cheapest and faster way of moving men and material with enormous savings in transportation costs and also pollution free. Buckingham canal was used till mid fitees for transportation and existed till Marakkanam. The popular landing point was தன்னித்துரை market. By restoring inland canal transportation we could also to some extent restore ecological imbalances that crept in the last 50 years

  • Murali - DOHA ,கத்தார்

    காதில் தேனாக வந்து விழும் செய்தி. நிறைவேற்றப்பட வேண்டுமே. நல்ல திட்டத்தை ஒரு 100 வருடம் கழித்து தான் இந்த அரசியல்வியாதிகள் செயல்படுத்துவார்கள். இந்த திட்டம் இப்போது உள்ள தலைமுறை காலத்துக்குள் நிறைவேற்றப்பட்டால் ஒரு நல்ல இந்தியா உருவானது என்ற மகிழ்ச்சியில் இறப்போம். இந்த திட்டம் நல்ல முறையில் செயல் படவேண்டும் என் ஆண்டவனை பிராத்திக்கிறேன். சீக்கிரம் இணைங்கப்பா, நம் நாட்டு விவசாயிகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பல பிரச்சினைகளுக்கு 95 சதவீத தீர்வாக இருக்கும்

  • senthilkumar - bangalore,இந்தியா

    நதி நீர் இணைப்பில் எப்படி கடல் வால் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகிறது? கடல் வால் உயிரினங்கள் வாழ நீர் கடலில் கலப்பது அவசியம்.

    • rravi - coimbatore,இந்தியா

      முட்டாள் தனமா பேசாதே உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மீன்களை பிடித்து சாப்பிடுறீங்க இதுல போய் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கிறாங்களாம் முதலில் மீன் சாப்பிடுறத நிறுத்து

  • K.Sugavanam - Salem,இந்தியா

    நீர்வழிப்போக்குவரது, இணைக்கப்பட்ட நதிகளை மாசு படுத்தாதா? கப்பல்களின் எண்ணெய் மற்றும் பிற கழிவுகள்?

  • balakrishnan - coimbatore,இந்தியா

    பல்வேறு நதிகளில் வருடத்தில் பாதி நாட்கள் தண்ணீரே இருப்பதில்லை, படகு போக்குவரத்துவிட குறைந்த பட்ச தண்ணீர் அளவு நிச்சயம் இருக்க வேண்டும், எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை, முதலில் நதிகளை இணைப்பதே பெரிய விஷயம், அது நடந்தால் தான் இதை பற்றி யோசிக்க முடியும், நதிகள் இணைப்பே இன்று கேள்விக்குறியாக இருக்கிறது, அது தேவையும் அன்று, சுற்று சூழல் புதிய வடிவில் கெடும் வாய்ப்பு அதிகம் உள்ளது

    • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

      காமராஜின் நதி நீர் இணைப்பைப் பற்றி முழுவதும் படித்துப் பார்த்தால்தான் புரியும்.வெறுமனே வயலுக்கு நீர் பாய்ச்சுவதைப் போன்றது அல்ல இது .

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    காதில் தேனாக வந்து விழும் செய்தி... நிறைவேற்றப்படவேண்டுமே.

  • ilicha vaayan - chennai,இந்தியா

    துக்ளக் இதழில் இது குறித்து காமராஜ் ஐயா அவர்கள் விரிவாக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் முன்னாள் தலைமைப் பொறியாளர் .இப்போ இருக்கும் முக்கிய தடங்கல்கள் யார் என்றால் கேரளா கர்நாடக ஆந்திர அரசுகள் மற்றும் மெத்த பட்கர் அருந்ததிராய் போன்ற போல் அதிமேதாவிகள் தான். தமிழ் நாடு நல்ல நீர்வளம் பெற்றுவிட்டால், அவர்களின் விளைச்சலை இங்கு அதிக விலைக்கு விற்க முடியாது. இது தான் கர்நாடகா இப்போது செய்யும் செயல். முதலில் நதி நீரை தேசிய மாயம் ஆக்கினால்தான் இது போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்த முடியும். அரசியல் நோக்கம் இருப்பதால் பா ஜ க இதை செய்யுமா என்பது சந்தேகமே. நம்மை சுற்றி இருக்கும் மாநிலங்களை மிரட்டினால் ஒழிய நமக்கு உதவ மாட்டார்கள் . தண்ணீர் கடலுக்குப் போகட்டும் நமக்கு வரக்கூடாது என்ற நல்ல உள்ளம் படைத்த கம்யூனிஸ்ட் கயவர்களும், கான்+ க்ராஸ் ஆளும் மாநிலங்களும் நம்மை ஒரு போதும் நல்ல வழியில் வாழ விடமாட்டார்கள்

    • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

      தமிழ் நாட்டிலே ஓடி சென்று கடலில் சேரும் மழை நீரை சேமிக்க வேண்டும். அதற்கு பிறகு கர்நாடக, கேரளா என்று யோசிக்கலாம்........

  • R Sanjay - Chennai,இந்தியா

    நல்ல திட்டத்தை ஒரு 100 வருடம் கழித்து தான் இந்த அரசியல்வியாதிகள் செயல்படுத்துவார்கள்.

  • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

    நீரின்றி அமையாது உலகுவள்ளுவன் வாக்கு தேசிய அதி- திறன் நீர்வழி திட்டம் (National Smart Waterways Grid Mission ) என்ற நமது அய்யா Dr. APJ அப்துல் கலாம் சில வருடங்களுக்கு முன் சொன்ன திட்டத்தை எவ்வளவு விரைவில் கொண்டு வருகிறோமோ அவ்வளவு நல்லது. நிச்சயம் இது மிகுந்த செலவு பிடிக்கும் திட்டம் தான் சந்தேகமில்லை. ஆனால் நம்மால் முடியாதது அல்ல. 2000 வருடங்களுக்கு முன் கரிகால் சோழன் கட்டிய கல்லணை இன்றும் நமக்கு பயன் தருகிறது. நாம் செய்யப்போகும் இந்த நீர்வழி திட்டமும் நம் பிற்கால சந்ததிகளுக்கு பேருபகாரமாக இருக்கும். அரசாங்கம் GST வரியில் ஆண்டுக்கு 2% இந்த திட்டத்திற்கு ஒதுக்கியும், 100 நாள் வேலை திட்டத்தின் பயனாளர்களின் உழைப்பை பயன் படுத்தியும் இதை நம்மால் செய்ய முடியும். நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவு கொடுக்கலாம். திருப்பதி, பத்மநாபஸ்வாமி, சித்தி விநாயகர் போன்ற கோவில்களும், கிறிஸ்துவ, இஸ்லாயமிய அமைப்புகளும் இந்த பணிக்கு தங்களிடமுள்ள செல்வத்தை வாரி வழங்கலாம், மக்களின் நலனுக்கு செலவிடும் பணிக்கு ஆண்டவன் தடை சொல்ல மாட்டான். ஒரு IPL போட்டித்தொடரில் பல்லாயிரம் கோடி வசூலாகும் நாட்டில், இது போன்ற நற்காரியத்துக்காக சில பல போட்டித்தொடர் நடத்தி அதன் வசூலையும் பயன்படுத்தலாம். ஆக பணம் ஒரு பிரச்சினை அல்ல, நாம் முயற்சி எடுத்து செய்ய வேண்டும். இது போன்ற ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்கி விட்டால் வறட்சி, வெள்ளம் முதலிய இயற்கை சீற்றங்கள் வெகுவாக குறையும், நம் விவசாய வருமானம் பெருகும். இனி செய்ய வேண்டியது மத்திய அரசாங்கம் தான். இந்த திட்டத்துக்கு தனி அமைச்சரவை, தனி பட்ஜெட், தனி துறையை ஏற்படுத்தி நாடு முழுதும் உள்ள மாநிலங்களின் பொதுப்பணி துறையுடன் இடிந்து செயல் பட்டால் நிச்சயம் முடியும். இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக தலைமுறைகளுக்கும் நிலைக்கும்..

    • K.Sugavanam - Salem,இந்தியா

      வழிபாட்டு தளங்களின் தலையில் கையை வைக்க ஆலோசனை சொல்கிறீர்கள்..சூப்பர் ஜி..

    • K.Sugavanam - Salem,இந்தியா

      வள்ளுவன் சொன்ன "நீரின்றி அமையாது உலகு" க்கும் இந்த திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

    • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

      சுகவனத்துக்கும் சேலத்துக்கு என்ன சம்பந்தமோ அது..வழிபாட்டு தலங்களின் தலையில் கையை வைக்க சொல்லவில்லை..அங்கே பல நூறு ஆண்டுகளாக குவிந்திருக்கும் செல்வத்தை நல்ல வழியில் உபயோகப்படுத்த சொல்கிறேன்..

    • soundararajan - Udumalaipettai,இந்தியா

      நீர் நமக்கு இன்றியமையாத ஒன்று. நீர் இல்லாவிட்டால் உலகம் இயங்காது என்பதே வள்ளுவனின் வாக்கு. வறட்சி இருக்காமல் இருந்தால் உலகம் செழிப்பாக இருக்கும் என்பது தான் இது போன்ற திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

    • soundararajan - Udumalaipettai,இந்தியா

      இந்த பகுதியில் நிறையப்பேர் சொல்லியது போல pollution பற்றியும் முன்கூட்டியே திட்டமிடப்படல் வேண்டும். நீர் வழி போக்குவரத்து என்பது இந்தியா வில் இப்போதுதான் பேசவே துவங்கி இருக்கிறோம். மேலை நாடுகளில் பல ஆண்டுகளாக இது சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஹாலந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி என்று எண்ணிக்கையில் அடங்காத நாடுகள் இந்த போக்குவரத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இதில் மக்களின் பங்களிப்பும் முக்கியமானது. உதாரணமாக, நம் அண்டை மாநிலமான கேரளாவில், நதிகளை தூய்மையாக வைத்திருக்க பல சட்டதிட்டங்கள் உண்டு. நதிகளை பாழாக்க கூடாதென்று ஒரு அடிப்படை அறிவை அங்கே வளர்த்துள்ளார்கள். (அவர்களது கழிவுகளை, தமிழ் நாட்டில், (லஞ்சம் கொடுத்து ) வந்து கொட்டிவிட்டு போகிறார்கள் என்பது வேறு விஷயம். எல்லையை கடக்கும்போதே, தடுத்து நிறுத்த நம் தமிழ் நாட்டு அதிகாரிகள் முற்பட வேண்டும். ) ஆக, திட்டம் உருவாகி செயல்பாட்டிற்கு வந்தாலும் அதை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க, மாசுபடுத்தாமல் இருக்க மக்களது ஒத்துழைப்பும் இங்கே அவசியம் ஆகிறது. கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறையை பராமரிக்க , ஏற்கனேவே இந்த திட்டங்களை பின்பற்றும் நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை சரியான முறையில் பின்பற்றினாலே போதுமானது.

  • Velu Karuppiah - Chennai,இந்தியா

    இந்த திட்டம் இப்போது உள்ள தலைமுறை காலத்துக்குள் நிறைவேற்றப்பட்டால் ஒரு நல்ல இந்தியா உருவானது என்ற மகிழ்ச்சியில் இறப்போம். இந்த திட்டம் நல்ல முறையில் செயல் படவேண்டும் என் ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

  • Valluvan - கோயம்புத்தூர்,இந்தியா

    சீக்கிரம் இணைங்கப்பா, நம் நாட்டு விவசாயிகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பல பிரச்சினைகளுக்கு 95 சதவீத தீர்வாக இருக்கும்.

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

    This scheme should have been started long back.We are late by 70 years. Atlas now wisdom is dawning on this new govt. This govt also wasted 3 years already.Uma Bharati madam did not do anything. While thousands of crores of rupees are invested in cleaning Ganga, nothing solid is done for the South. Now also the minister plans to concentrate on Northern states. The plan should be such that north and south are equally treated and projects are initiated so that all states get equal share at the same time in the project expenditure .It is not only northern state people who pay tax. Then why one section alone should get the benefits first and others should wait for getting the benefits. If BJP wants to win Southern states people, it should carry out projects which benefit these state people, not in back door method by flexing its muscle towards one party.

  • jagan - Chennai,இந்தியா

    சந்திர பாபு அசத்துகிறார்... போலவரம் அணை கட்டு சட்டலைட் (கூகிள்) செய்து பார்க்கவும் , அதன் மூலம் கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைக்கும் கால்வாயும் ரெடி...இனி அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீரை விற்கலாம் (அவர்கள் தண்ணிக்கு 1000 இல்ல 2000 கோடி ஆண்டுக்கு நம்மிடம் இருந்து வசூலிக்கலாம்)... நமது திராபை தலைகளும் இருக்குகளே ...

    • balakrishnan - coimbatore,இந்தியா

      சந்திரபாபு செய்தது ஒரு பெரிய சாதனையே இல்லை, ஆனால் ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றன, இப்போது அவர் குழாய் மூலம் தண்ணீரை பம்ப் பண்ணுகிறார், இந்த திட்டமே தோல்வி என்று அந்த ஊர் சமூக ஆர்வலர்கள் தற்போது குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளார்கள், தண்ணீரை தமிழகத்திற்கு விற்கும் நிலையெல்லாம் இல்லை,

    • jagan - Chennai,இந்தியா

      அணை இன்னும் முடியவே இல்ல (2019 இல் வரும்) அதுவரை குழாய் மூலம் இணைப்பு... இன்னும் 10 வருஷத்தில் தமிழகம் ஆந்திராவிடம் தண்ணீருக்கு கையேந்தும்.....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நிறைய முதலீடுகள் வேண்டும்... முதலீடுகள் இல்லை என்றால் சாத்தியம் இல்லை... அரசுக்கு அவ்வளவு பணம் வேண்டும் என்றால் அரசுத்துறை நிறுவனங்களை மக்களுக்கு விற்க வேண்டும் அல்லது அதிகமாக வரியை போடவேண்டும்... மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதிக சந்தர்ப்பம் இருக்கிறது...

    • K.Sugavanam - Salem,இந்தியா

      Pollution ?

  • sambathkumar - kumbakonam,இந்தியா

    அருமையான திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் ஜி எஸ் டி வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும்.ஒரு சில வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய முதலாளிகளிடம் மட்டும் பணத்தை பெற்று இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற அந்தந்த மாநிலங்களும் அவர்களால் முடிந்த தொகையினை கொடுத்தால் விரைவில் நிறைவேற்றப்படும். இதன் மூலம் நிறைய நண்மைகளும் வருமானம் மற்றும் வெள்ள நிவாரண தொகை எல்லாமே நமக்கு மிச்சமாகும்.இந்த திட்டத்தை முன்வைத்த மதுரையை சேர்ந்த, பேராசிரியர், ஏ.சி.காமராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திட்ட மாதிரியை மறைந்த திரு டாக்டர் அப்துல்கலாம் அவர்களும் முன்பே வரவேற்றுள்ளார்.

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    இவர்கள் ஆலோசனை நடத்தி முடிப்பதற்குள் தேர்தல் வந்துவிடும். முந்திரி மாறிவிடுவார். அடுத்த முந்திரி மறுபடியும் முதலில் இருந்து தொடங்குவார். இப்படி ஒரு நூற்றாண்டு போனாலும் இந்த திட்டம் நடக்காது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement