Advertisement

'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'

போபால்: மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்கு பள்ளிகளில், மாணவர் வருகையை பதிவேட்டில் குறிக்கும் போது, மாணவர்கள், 'உள்ளேன் ஐயா' என, கூறுவது வழக்கம். இனி, உள்ளேன் ஐயாவுக்கு பதிலாக, 'ஜெய்ஹிந்த்' என, கூறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.வரும், நவ., 1 முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதற்கு முன், சத்னா மாவட்டத்தில், அக். 1 முதல் இது சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.''ஜெய்ஹிந்த் என்று கூறுவதன் மூலம், மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தை,'' என, ம.பி., பள்ளிக்கல்வி அமைச்சர் விஜய் ஜா தெரிவித்தார்.அதே நேரத்தில், அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விமர்சித்து வருகின்றன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (12)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாம் தமிழகத்தில் வாழ்க பசுமை பாரதம் என்று சொல்லலாமே..

 • Meenu - Chennai,இந்தியா

  இப்படி சொல்வதானால் மக்களின் வாழ்கை தரம் அல்லது இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்திடுமா...ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லாத, உப்புக்கு சப்பில்லாத செயலை தான் நம் தலைவர்கள் செய்து சாதித்து காட்டுகின்றனர். இதற்கு தான் அந்த பதவியில் ஓட்டு போட்டு அமர வைக்கிறோம்..

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இப்படியெல்லாம் செய்வது தான் தேசபக்தி என்று கிடையாது, ஜெய் ஹிந்த் எங்கே பயன்படுத்தணுமோ அங்கே தான் பயன்படுத்தவேண்டும், உள்ளேன் ஐயா என்பது பள்ளி மாணவன் வகுப்பறையில் ஆசிரியர் வருகைப்பதிவேடு குறிக்கும் நேரத்தில் சொல்வது, எது எது எங்கே சொல்லவேண்டுமா, அங்கே சொல்வதில் தான் மரியாதை, இதெல்லாம் ஒரு விளம்பரம், மற்றும் தேவையற்றது, மாணவர்களின் தரத்தை எப்படி உயர்த்துவது என்று சிந்திக்க இங்கே யாரும் இல்லை, கல்வி உயர்ந்தால் எல்லா உயர்வும் தானாகவே வரும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஜெய் ஹிந்த் சொல்லச்சொல்வதை எதிர்க்கி. மாணவர்களுக்கு தண்டனையாக நூறு முறை வந்தே.மாதரம்   சொல்லவைய்யுங்கள்.அப்போதுதான் புத்திவரும் .(இலங்கையில் உள்ளேன் அய்யாவுக்கு பதில் ஓம் என சொல்கிறார்கள்)

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  அரபி அடிமைகளுக்கு ஜெய் ஹிந்த் சொல்ல புடிக்காது. சும்மா சகட்டு மேனிக்கு அடிச்சு பாகிஸ்தானுக்கு தொரத்தணும் பய புள்ளைகள. ஏன்னா அழிச்சாட்டியம் அதுக்கு ஒத்து உத்தர காங்கிரசையும் கம்யூனிஸ்ட்டையும் சேத்து தொரத்தணும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அருமை..

 • vns - Delhi,இந்தியா

  முஸ்லிம்களுக்கு ஜெய் ஹிந்த் கூற முடியாதே

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இவர்களின் (பாஜக) அராஜகத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. வரும் காலங்களில் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பெயர்களை மட்டுமே வைக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள். வந்தே மாதரம்.

 • appaavi - aandipatti,இந்தியா

  ஜெய்ஹிந்த் சொன்ன பற்று வரும், திரையரங்கில் தேசிய கீதம் போட்ட பற்று வரும்...என்னடா கலர் கலரா ரீல் விடுறீங்க...இந்த 'ஜெய்ஹிந்த்' வார்த்தையும் இனி பள்ளிகளில் கேலி கூத்தாக போகிறது...

 • Tamilpaiyan -

  after some time, they will insist to say Jai Modi

 • Tamilan -

  naasama pouchu.. 😂😁😊

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement