Advertisement

டீ கடை பெஞ்ச்

பங்களாவாக மாறும் எம்.எல்.ஏ.,வின் ஓட்டு வீடு!

''கூட்டங்களை அறிவிச்சவர், பெயர்களை அறிவிக்கலை ஓய்...'' என, முதல் ஆளாக பேச ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.''அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள், வர்ற, 15ல துவங்கி, 22ம் தேதி வரை நடக்கும்னு, அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை அறிவிச்சிருக்கார் ஓய்...
''இதுல, கூட்டம்
நடக்குற இடங்கள், பங்கேற்கிற அமைச்சர்கள், நிர்வாகிகள் பெயர்களையும் வெளியிட்டிருக்கார்...''இதுக்கு பதிலடியா, தினகரனும், அண்ணாதுரை பிறந்த நாள்
விழா பொதுக் கூட்டங்கள், மூணு நாளுக்கு நடக்கும்னு அறிவிச்சார்... ஆனா, யார் யார் கலந்துக்கறாங்கற பட்டியலை
வெளியிடலை ஓய்...''கட்சி முழுக்க, பழனிசாமி, பன்னீர் கைகளுக்கு போயிடுத்து... அதான், அவரால நிர்வாகிகள் பெயர்களை அறிவிக்க முடியலைன்னு சொல்றா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.
''கோவிலுக்கு வர்ற மாடுகளை, அடிமாட்டுக்கு வித்துடுதாவ வே...'' என்ற, 'பகீர்' தகவலுடன், அடுத்த விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.
''எங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''அரியலுார் மாவட்டம், கல்லங்குறிச்சியில, கலியுக வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு... இதுக்கு பரம்பரை அறங்காவலர் இருக்காரு...
''உண்டியல் வருமானம் நிறைய கிடைக்கிறதால, அறநிலையத் துறை சார்புல, நான்காம் நிலை செயல் அலுவலர் நியமிக்கலாம்... ஆனாலும், கூடுதல் செயல் அலுவலர் மட்டும் தான் போட்டிருக்காவ வே...
''கோவிலுக்கு நிறைய பக்தர்கள், மாடுகளை தானமா தர்றாவ... இந்த மாடுகளை, பூசாரிகளுக்கு குடுக்கணும்கிறது, அரசு உத்தரவு... ஆனா, ஒரு சில மாடுகளை மட்டும் குடுத்துட்டு, மத்த மாடுகளை, அடிமாடா வித்துடுதாவ...
''வர்ற புரட்டாசி மாதம், 1,௦௦௦ மாடுகளுக்கு மேல தானமா வரும்... அதையாவது, முறையா பூசாரிகளுக்கு குடுக்கணும்னு பக்தர்கள் சொல்லுதாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.
''ஓட்டு வீடு, பங்களாவா மாறிட்டு இருக்குங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.''யார் வீட்டை சொல்றீங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''சேலம் மாவட்டத்துல இருக்கிற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை தான் சொல்றேன்... ௨௦௧௬ தேர்தல்ல தான் முதல் முறையா, எம்.எல்.ஏ., ஆனார்... வேட்பு மனுவுல, மளிகை கடை வச்சிருக்கிறதாவும், 25 லட்சம் ரூபாய்க்கு சொத்து இருக்கிறதாவும் கணக்கு காட்டியிருந்தாருங்க...
''கூவத்துார் விடுதியில இவரும் தங்கியிருந்தார்... அப்ப, தொகுதியில இவருக்கு எதிர்ப்பு கிளம்புனதால, இவரோட ஓட்டு வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போட்டிருந்தாங்க... இப்ப, ஓட்டு வீட்டை இடிச்சிட்டு, ௬௦ லட்சம் ரூபாய்ல மாடி வீடு கட்டிட்டு இருக்காருங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.''எல்லாம் கூவத்துார் மகிமைன்னு சேர்த்து சொல்லும் வே...'' என அண்ணாச்சி, 'கமென்ட்' அடிக்கவும், டீக்கடை ரேடியோவில்,
சின்னதம்பி படத்தின் பாடல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. பாடலை, பெரியவர்கள் ரசிக்க ஆரம்பித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement