Advertisement

'டவுட்' தனபாலு

காங்., துணைத் தலைவர் ராகுல்: சட்டத்தை உருவாக்கும் வகையில், எம்.பி.,க்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும். தற்போது, பிரதமர் அலுவலகத்திற்கு மட்டுமே அதிகாரம் குவிந்து கிடக்கிறது.


டவுட் தனபாலு: 'நல்லதோ, கெட்டதோ, அனைத்துக்கும் பொறுப்பேற்கும் வகையில், பிரதமர் அலுவலகம் செயல்படுவது உங்களுக்கு உறுத்துதா... கடந்த, காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததுபோல, பிரதமர் அலுவலகம் என்பது பெயருக்கு இருக்கணும்; எம்.பி.,க்கள் அதிகாரத்தை கையில் எடுத்து ஆடணும்னு நினைக்குறீங்களா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!


சசிகலா அக்கா மகன் தினகரன்:
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டும் அதிகாரம், எனக்கும், சசிகலாவுக்கும் மட்டுமே உள்ளது. பழனிசாமி- பன்னீர்செல்வம் கூட்டியது, பொதுக்குழு அல்ல; பொதுக்கூட்டம்.



டவுட் தனபாலு: உங்களிடம் அதிகாரம் இருப்பது உண்மைன்னா, நீங்க பொதுக்குழு கூட்ட வேண்டியது தானே... யாரு தடுத்தா... 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள், அவர்கள் பக்கம் இருப்பது, மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதமாகிடும் என்பதால் தான், அந்த விஷப்பரீட்சையில் ஈடுபடாமல் இருக்கீங்களா என்ற, 'டவுட்' வருதே...!



அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்:
ஜெ., நியமித்த நிர்வாகிகள், அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட, இப்பொதுக் குழு ஒப்புதல் அளிக்கிறது.



டவுட் தனபாலு: 'முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும், முகம் கொடுத்துப் பேசிக் கொள்வதில்லை... ஜெ., நியமித்த நிர்வாகிகள், அந்தந்த பொறுப்புகளில் தொடர்வது மாதிரி, ஜெ., மூன்று முறை முதல்வரா நியமித்த பன்னீரே, அந்தப் பதவிக்கு வரணும்'னு, யாரும், 'டவுட்'டை எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement