Advertisement

மது வாங்க மகனை விற்ற தந்தை

புவனேஸ்வர்: தனது 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்று, மது மற்றும் மொபைல் போன் வாங்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

3 குழந்தைகள்:ஒடிசா மாநிலம் பட்ராக் மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம் முகி. இவரது மனைவி சுக்டி. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை, 7 வயதில் பெண் குழந்தை, 11 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சாலை விபத்தில் தனது மகனை பறிகொடுத்த சோகத்தில் இருந்த மனைவிக்கு ஆறுதல் கூறும் வகையில், சோம்நாத் என்பவர் குழந்தை ஒன்றை தத்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார். இதனையறிந்த சுக்டியின் சகோதரர் பாலியா என்பவர், பலராமின் ஒப்புதலோடு 11 மாத குழந்தையை சோம்நாத்திடம் விற்பனை செய்துள்ளார்.

மனைவியிடம் விசாரணை:இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பலராம் ரூ.25 ஆயிரத்திற்கு குழந்தையை விற்பனை செய்துள்ளார். அதில் தனது மகளுக்கு ரூ.1,500 மதிப்பில் வெள்ளித்தோடு, ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன், மனைவிக்கு ஒரு சேலை வாங்கியுள்ளார். மிச்சமுள்ள பணம் அனைத்தையும் மதுவாங்க செலவழித்துவிட்டார். இதனையறிந்த நாங்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் அவரது மனைவிக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தில் பலராமின் மைத்துனர் பாலியாவுக்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.பத்ராக் மாவட்ட எஸ்பி கூறுகையில், கைதான பலராமுக்கு நிரந்தரமான வேலை என எதுவுமில்லை. அவ்வபோது கிடைக்கும் துப்புரவு பணியை செய்துவந்த அவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்ப்பை மீறிசுக்டி கூறுகையில், எனது கணவர் குடிக்கு அடிமையானவர். குழந்தையை விற்க வேண்டும் என்பதற்காக, இந்த குழந்தை தவறான நடத்தையால் பிறந்தது. இதனால் எங்களுடன் வைத்துக் கொள்ளவில்லை எனக்கூறினார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால், என்னால், ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. வலுக்கட்டாயமாக குழந்தையை விற்று ரூ.25 ஆயிரம் பணம் வாங்கினார். அதில் வெள்ளிக்கொலுசு, சேலை, மொபைல் போன் வாங்கினார் எனக் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (15)

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  சாராயம் ஆறாக ஓடும் தமிழகத்தில் இந்த சம்பவத்திற்கு கருத்து சொல்லும் உரிமை உள்ளதா

 • ManiS -

  North Indians are extreme fools and thieves.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அடப்பாவிகளா நன்னாயிருப்பீங்களா நாசமாப்போக குடியால் எவ்ளோ குடும்பங்கள் நாசமாரது பிள்ளை இல்லே என்று பலர் தவமிருக்கு இவர் வித்து சாராயம் வாங்கிருக்கானே என்னானு சொல்றது கண்ராவி

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? (பாலகுமார் - மத்திய, மாநில அரசுகள்).

 • அப்பாவி -

  இதுல எல்லாரும் ஒரு அடி எடுத்து வச்சா இந்தியா எங்கேயோ போயிரும்னு சிலர் பேத்திக்கிட்டு அலயறாங்க....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  வேலைக்கு முக்கியம் முதலில், பின்பு தேவைக்கான சிறிது மது, என்று இப்படி இருந்தால் கூட தப்பில்லை தான். ஆனால் நாள் முமுக்க மது குடியே வேலை என இருந்தால், அந்த குடும்பம் எப்படி உருப்படும்?. தனி நபருக்கும் தன் குடும்பத்தின் மேல் அக்கறை வந்தால் தான், இப்படிப்பட்ட நிகழ்வுகள் குறையும் எனலாம்.

 • Murugan - Mumbai

  வட மாநிலங்களில் ஒழுக்கக்கேடுகள் மிக அதிகமுண்டு

 • Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்த குழந்தையை விலைக்கு வாங்கியவர்கள் நல்லபடியாக வளர்ப்பார்கள் அதையும் இந்த சட்டம் தடுத்து பெற்றவருக்கும் வாங்கியவருக்கும் மற்றும் அந்த குழந்தைக்கும் கச்டப்படுங்கடா என்று நீதி வழங்குது. வாழ்க சட்டம்

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  படுபாவி டபுள் G திருடனால் இத்தனையும் .... திருடன் தன் குடும்பம் சம்பாதிக்க சாராயத்தை திரிந்துவிட்டான் ....நல்லவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் .... படுபாவி .....இன்னும் இந்த பாவி பலநாட்கள் இந்த உலகத்தில் இருந்து அனுபவிக்க வேண்டும் ...

 • Shriram - Chennai,இந்தியா

  குடியை ரசித்து அனுபவிக்கும் மாணவர்களே , அல்லது இப்போது புதிதாய் ஆரம்பித்தவர்கள்,, தயவு செய்து அதை விட்டு விடவும்,, குடி நமது கலாச்சாரம், இல்லை,, ஜல்லி கட்டுக்கு அத்துணை போராடிய மாணவர்களே இந்தக்குடியும் தமிழனுக்கு சொந்தமானது அல்ல , இது கேடினும் பெரும் கேட்டைத்தரும்,, அறிவுரை சொல்லும் வயது இல்லைதான்,, ஆனாலும் நல்லது சொன்னா கேட்டுக்கணும்,, ஓகே ?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  திராவிட ஆட்சிகளில் தமிழக மக்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர் என்று கூவும் அல்லக்கைகள், இதுபோன்ற வடநாட்டு சமாசாரங்களுக்கு பதில் சொல்ல வருவார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement