Advertisement

முதல்வர் எடப்பாடி அரசை கவிழ்க்கலாம்: சிறையில் இருந்து சசிகலா பச்சை கொடி

சென்னை:முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் பொதுக் குழுவைக் கூட்டி, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரனையும் நீக்கி விட்டனர்.இப்படி நடக்கப் போகிறது என்பதை ஒரு வார காலத்துக்கு முன்பே, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, கட்சியின் கர்நாடக மாநில செயலர் புகழேந்தி சொன்னபோது, அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என சொல்லி, புகழேந்தியை சமாதானப்படுத்தி அனுப்பினார் சசிகலா. கூடவே, பொதுக்குழு நாளில் என்ன நடக்கிறது என்பதை தனக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் சசிகலா கேட்டுக் கொண்டார்.அதே போல், சசிகலாவுக்கு, பொதுக்குழு தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டன. தன்னை கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர் என்ற தகவல் அறிந்ததும், சசிகலா அப்செட் ஆகி விட்டார்.இப்போது என்னை, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கியிருப்பவர்கள் அனைவருக்குமே, ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா இருந்த போது, நான் தான் பொறுப்புகள் தந்தேன். ஜெயலலிதா பெயரில் அறிவிப்புகள் வந்தாலும், அதை பின்னணியில் இருந்து செய்தது நான் தான். அவர்கள்தான் இப்போது என்னை பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கின்றனர். இது தான் உலகம் என்று சொல்லி புலம்பித் தீர்த்திருக்கிறார்.பதவியில் இருந்து இறக்க வேண்டும்:உச்சபட்சமாக முதல்வர் பழனிச்சாமி, எனக்கும் அவரை நம்பிய எனது குடும்பத்தாருக்கும் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார். அதனால், இனிமேலும், அவரை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்க விடக் கூடாது. அவரை எப்படியாவது ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறக்கி ஆக வேண்டும். அதை நோக்கி அரசியல் செய்வதுதான், இனி, தினகரனின் முழு நேரப் பணியாக இருக்க வேண்டும். எதை செய்தால், முதல்வர் பழனிச்சாமி அரசு கவிழுமோ, அதைச் செய்ய வேண்டும். இதை எனது உத்தரவாக, கட்டளையாகவே, தினகரனிடம் சொல்லி விடுங்கள். அவர் இனிமேல், ஆட்சியை கவிழ்த்து விட்டு, அந்த செய்தியோடு என்னை வந்து சந்தித்தால் போதும் என, தன்னை சந்திக்க வந்தவர்கள் மூலம் சசிகலா சொல்லி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.அதை வைத்துத்தான், இனியும், என் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள், அரசை நீடிக்க விடுவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக்கூடும் என்று, தினகரன் தெரிவித்து, ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (74)

 • உஷாதேவன் -

  நல்ல மனம் வாழ்க நாடு தூற்ற வாழ்க

 • Bala -

  பாவங்ளும் துரோகங்களும் சும்மாவிடாது துரத்திக்கொண்டேயிருக்கும்

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  எங்கோ இலவசமாக வந்த ஒரு பச்சை புடவைய தூக்கி எறிந்தால் அது கொடி ஆட்டுறதா..ஆட்டு தாயே ஆட்டு..வேட்டு வக்கர வரைதான் ஆட்டமுடியும்

 • N. Sridhar - Kanchipuram

  திருந்தாத பிறவிகள் இருந்தென்ன லாபம்.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  செய்த பாவம் ..மோசடிகள் தான் ஆயாவின் மணவாளன் இப்பொது மருத்துவ மனையில் ,,,நுரை ஈரல் ..கிட்னி ...இதயம் ..ஈரல் எல்லாம் பழுதாகி விட்டதாம் ..

 • dandy - vienna,ஆஸ்திரியா

  ஜெயா மரண விசாரணையை உடனே தொடங்கவும்

 • Jagadeeskumar - Salem,இந்தியா

  கெட்ட எண்ணம் புடிச்சவர்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This woman's revenge mentality has come out automatically through her mouth.She is like a beaten snake and wounded lioness and she won't sleep herself and also allow others to sleep unless her goal is achieved.On her advise and commands only Dhinakaran is giving angry and meaningless statements daily to unseat Mr.EPS in CM chair.She and Dhinakaran may go any extend to remove Mr.EPS from CM post and can choose any one as per their choice in coming days.

 • Muruganandam - karaikal,இந்தியா

  எடப்பாடிக்கு மானம் இருந்தால் சசிகலா காலில் விழுந்து பெற்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,

 • Jagadeeskumar - Salem,இந்தியா

  இந்த ஆட்சியை ஆட்டவும் முடியாது அசைக்கவும் mudiyathu

 • Mani Pangan - Obajana,நைஜீரியா

  சிறையில் நடந்த தவறுகள் பிக் பாஸ் கண்காணிப்பிலேயே நடந்திருக்கும். தவறுகளை நடக்க விட்டு ஆதாரம் சேர்த்திருப்பார். சமயம் வரும்போது ஒரே கல்லில் 4 மாங்காய் அடிப்பார்.1. கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஒரு செக்...2. சசிக்கு சிறை நீட்டிப்பு...3. TTVD கு சிறை, 4. TTVD அணி MLA கள் அனைவரையும் மிரட்டி OPS-EPS ஆட்சிக்கு ஆதரவு

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  கட்சிக்கு உண்மையாக உழைக்கும் தொண்டpf என்றும் தொண்டpf தான். அடுப்படி ஆயாவும் மூளையில்லா வெக்கங்கெட்ட தினகரனும் தலைவன்தான். தமிழனை நினைத்தால்....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ".....ஜெயலலிதா பெயரில் அறிவிப்புகள் வந்தாலும், அதை பின்னணியில் இருந்து செய்தது நான் தான்.........". ஆகவே, யுவர் ஹானர், எமது கட்சிக்காரர் (ஜெஜெ) செய்ததாக கூறப்படும் ஊழல்கள் மற்றும் இன்ன பிறவும், எமது கட்சிக்காரருக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று நிரூபணம் ஆவதால், யுவர் ஹானர், எமது கட்சிக்காரரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்குமாறு, மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  ஊரு ரெண்டுபட்டால்....

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  மன்னிப்புக் கடிதம் கொடுத்ததுடன் கெஞ்சிக் கேட்டு போயஸ் தோட்டத்தில் நுழைந்த அந்தச் சசிகலாவா இப்படிப் பேசுவது? கபட நாடகம் எப்படி இவருடன் ஒட்டிக்கொண்டது? ஜெயலலிதா அவர்கள் எப்போதும் "கபட நாடகம்" என்பதற்கு எதிரி என்பது எல்லோருக்கும் தெரியும்.

 • kalyan - CHENNAI,இந்தியா

  ஏனுங்க.. சுமார் ஒரு நாலு கண்டெய்னர் துட்டு காலி பண்ணினா போதுமா இல்லே இன்னும் ரெண்டு மூணு வேணுமா/ சீக்கிரமா சொன்னா எங்க கன்டைனருங்களை காலி பண்ணிட்டு வேறே வேலை பார்க்கப் போவோமுங்க..

 • Ramesh.viralipatty -

  இந்த ரணகளத்திலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது... ஜெயிலில் உனக்கு 4 வருஷம் கஞ்சி தான்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  டங்குவாரே அந்து போச்சு... எங்க டிநாகரன் கவுக்கறது.. கவுந்தடிச்சு படுத்துக்க வேண்டியதுதான்.. ஆலோசகர் சூணா சானா இன்னும் சவுண்டு விடல்லையே

 • saro - Thiruvallur,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  good decision by sasikala, and she should backup seeman in next state election

 • Mal - Madurai,இந்தியா

  Mr. Jeyam Tamilan... U take those words which comes to your convenience... "Modi, lady" was just for an election ... Otherwise Amma and modi have been good friends right from start... Even if you don't support, JJ supported ram temple in ayodhya...(if not in ayodhya where can we build ram temple was her stand) How can you be so idiotic I don't know... (Really sorry but couldn't help that word) JJ was always opposing DMK and if Dina took a stand in favour of DMK...only he will be a "drohi".... About 90% + people don't want Stalin and his dynast rule... Except a few (don't wanna repeat that word) like you...

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  எல்லாரு வீடுகளில் ரெயிடு நடத்தும் பிஜேபி மன்னார்குடி குடும்பத்தில் மட்டும் ஏன் ரெயிடு செய்வதில்லை?

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  இனி திராவிட அல்லக்கைகளுக்கு செம கொண்டாட்டம்..... சொடல உனக்கு மேலிடத்திலயிருந்து உத்தரவு வந்திடுச்சு.... இந்த முறையாவது சாியா செயல் செய்யனும் செயலு..... வழக்கம் போல சொதப்பக்கூடாது..... புள்ளபிடிக்கிற வேலையை உடனே ஸ்டாா்ட் பண்ணு.... 1.72 லட்சம் கோடி இருக்கதுல்ல ஜமாய்..... அடிக்கடி சொல்லுவியே என்னது அது.... ஆங் குதிரை பேரம்.... ஸ்டாா்ட் மூஜிக்.....

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  சிறையில் ட்ரெயின் எல்லாம் இருக்குதா என்ன? அங்கேயும் கொடி காட்ற வேலை தானா? இவருக்கு ஜெயிலுக்கு போயும் அறிவு வந்தமாதிரி தெரியல? எல்லாம் தமிழ் நாட்டை சொரண்டிய பணம் கொடுக்கும் திமிர் மமதை.

 • venkatesh - coimbatore,இந்தியா

  ஆட்சியை கவிழ்த்தி செய்த பாவத்திற்கு கொஞ்சம் புண்ணியம் சேருங்கள். இந்த கயவர்கள் கூட்டம் ஒழிந்தால் தான் தமிழ்நாடு கொஞ்சம் முன்னேறும் இல்லை என்றால் ஸ்வாகா தான்.

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  வீருகொண்டு எழு சின்னம்மா விடாத... அம்மாடா சின்னம்மாடா கவிழ்ப்புடா ஆட்சி கவிழ்ப்புடா... எங்க போய் முடியும்னு ஆவலா காத்திருக்கேன்

 • Diravida.cinema - Bennau,அன்டோரா

  Dinakaran has removed eps, ops etc from AIADMK. He will appoint T.Nadu governor tomorrow. Then Dinakaran will on his own go to same jail as Sasikala. The jail will be remodelled like Poes Garden and then Sasikala and dinakaran will change the names of Parpana Agraharam to Chennai and rename Bangalore to Tamilnadu. Then dinakaran will rule Chennai and Sasikala will rule all of India.

 • Appu - Madurai,இந்தியா

  தி(ருட்டு)முகவோட டீலிங் பேசியாச்சா?

 • Anand - chennai,இந்தியா

  விதி வலியது............ பொறுத்திருந்து பார்ப்போம்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  அப்போ ஜெயாவை டோட்டலாக ஆட்டிப்படைத்தவர் இந்த சதிகாரி தானா ஜெயா வெறும் டம்மி பீசா, சுயநினைவே இல்லாமல் இந்த சதிகார கும்பல் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்திட்டாரா? நினைத்தாலே தலை சுற்றுகிறதே

 • Appu - Madurai,இந்தியா

  கச்சி பெயர் இனிமேல் பஜாதிமுக, கொடி காவி கருப்பு வெள்ள சிவப்பு தாமரைக்கு கீழ் அண்ணா படம்.. சின்னம் இரட்டை இலையில் தாமரை...

 • Appu - Madurai,இந்தியா

  பின்வாசல் பாதசாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு என்ன தூண்டல் விட போகிறார்கள் எடுபிடி பழனிசாமிகளிடம்?

 • Appu - Madurai,இந்தியா

  கயவர்கள் வெற்றிக்களிப்பில் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.. கொல்லைப்புறம் இன்னும் திறந்து உள்ளது..விரைவில் கொல்லைப்புற கதவு நீக்கப்பட்டு இறுக்கமான பிளாஸ்ட ப்ரூப் சுவர் தமிழ் மக்களால் எழுப்பப்படும்....

 • Appu - Madurai,இந்தியா

  அம்மாவிற்கு பின் தமிழ்நாடு நாறி நாசமாகிவிட்டது... அம்மாவின் மறைவிற்கு பின்னால் உள்ள திரைகள் மெது மெதுவாக நீங்குகிறது..

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  எங்கே நம்ம அடியாளுங்க மன்னார்குடியில் இருந்து தீட்டிய கத்திகளுடன் சென்னைக்கு வரவும்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஜெயலலிதா பெயரில் பொறுப்புக்கள் தந்தாலும் அவை அனைத்தையும் நானே பின்னணியில் இருந்தே செய்தேன், இதனால் நான் சொல்வதெல்லாம், ஜெயலலிதா செய்த ஊழல்களுக்கு நானே பின்னணியில் இருந்து செய்தேன் என்று சொல்லாமல் சொல்கிறார். உடனே வழக்கை மீளாய்வு செய்து ஒரு மாநில முதல்வரையே கைப்பாவை ஆக வைத்துக்கொண்டு அவரை மிரட்டி நானே எல்லா ஊழல்களையும் செய்து, சொத்து சேர்த்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் சசிகலா. இதைத்தான் நான் என்று இந்த சசிகலா என்ற சதிகாரி தனது வாயாலே சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன், அது சீக்கிரமே நடந்து விட்டது. சீக்கிரம் ஜெயலலிதாவின் கொலைக்கும் நாமே பொறுப்பு என்று சொல்லும் காலம் விரைவில் வரும்.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் சரி உனக்கு ஒரு கண்ணாவது போகணும் . ரெம்ப நல்ல எண்ணம் .சிறையில் வைத்தும் திமிர் அடங்கவில்லை .கூடிய விரைவில் தின குறையும் திகார் செல்வார் அப்போ பார்க்கலாம் . ஒரு வேளை பழனி ஆச்சு இழந்து அதிமுக ஆட்சியை விட்டால் அதற்கு சசி தான் பொறுப்பு ஆனால் இப்போ இருக்குற பதவி கிறுக்கர்கள் அப்படி நடக்க விட மாட்டார்கள் . மன்னார் குடி கும்பல் புலம்ப வேண்டியது தான்

 • Anand T S V - Frankfart,ஜெர்மனி

  சரியான முடிவு

 • TamilReader - Dindigul,இந்தியா

  எங்களுக்கு யாராவது ஒருத்தரோட காலில் விழுந்து கொண்டே பழக்கமாய் விட்டது எங்களுக்கு சுய புத்தியே கிடையாது இப்போது நீங்களும் சிறைக்கு போய்ட்டிங்க அதனால் நங்கள் மோடி மஸ்தான் காலில் விழுந்து கொண்டு இருக்கிறோம்

 • ravisankar K - chennai,இந்தியா

  இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஜெயலலிதா பின்னணியில் இருந்து அவருக்கே தெரியாமல் திருட்டுத்தனம் செய்து அவரை சாவின் விளிம்பிற்கு மன்னார்குடி மாபியா இட்டுச்சென்றது என்பதை அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் .

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  உன் சதி வேலைகளை எல்லாம் சகித்துக்கொண்டு உனக்கு ஆதரவு கொடுக்க இப்ப அம்மா இல்லை ...இப்ப இருக்குறவங்க எல்லாம் பக்கா அரசியல் வாதிகள் .எம் ஜி ஆர் காலத்தில் இருந்து பாடம் படித்தவர்கள் உன் ஜம்பம் பலிக்குதா இல்லையா என்பதை பார்க்க தானே போறோம் .

 • V.Vedagiri -

  அடடடடா! அருமையான கட்சி! மிக அருமையான தலைவர்கள்!! காசுக்கு ஓட்டு போடாதீங்கப்பா!

 • rajan - kerala,இந்தியா

  கையில் கறுப்பு பணம் இருக்கும் வரை எல்லா தான்தோன்றி தனமும் காட்டுவார். தனக்கு துரோகமிழைத்ததால் ஆட்சிய கவிழ்க சின்னதாயீ கர்ச்சிகிறா. அத்தனை மக்களுக்கும் காலங்காலமாய் ஆயாம்மாவோட இருந்து துரோகம் இழைத்த. மன்னார்குடி மாபியா சின்னதாயீ ய பாதிக்க பட்ட மக்களாகிய நாம் என்னமா தண்டிக்கணும்??? சிந்தியுங்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  19 பத்தாக குறைந்துள்ளது... எப்படி கவிழ்க்க முடியும்? தினகரன் உள்ளே சென்றால் மீதி இருக்கும் தறுதலை MLA க்கள் திரும்பவும் OPS EPS கூட்டணியில் ஐக்கியமாகி விடுவார்கள்... ஸ்டாலின் வெளியாட்களை வைத்துத்தான் கவிழ்க்க முடியும்...

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  நாசமா போச்சி

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  90 % மக்கள் இந்த பாஜக பினாமி மக்கள் விரோத ஆடிட்டர் அரசு கலைக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்...ஆளுநரால் புளோர் டெஸ்ட் கூட்டப்பட வில்லையென்றால், 21 MLA க்களும் , உடனேயே ராஜினாமா செய்ய வேண்டும்... அதன் பின்னர் திமுக -காங் MLA க்கள் 98 பேரும் நீட் விவகாரத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்யவேண்டும் .ஆக 98 பிளஸ் 21 மொத்தம் 119 ஆகிறது.... 119 MLA க்கள் ராஜினாமா பண்ணிவிட்டால் சட்டப்படி ஆட்சி தானாகவே கழிந்துவிடும்... இது தான் EPS OPS மற்றும் ஆடிட்டருக்கு தினகரன் மற்றும் ஸ்டாலின் வைக்கவிருக்கும் செக்... காவல்துறை, CBI , வருமானவரி துறை ஆகியவற்றை வைத்து அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் மத்திய மாநில அரசுகள் செய்யும்... அதனை முறியடிக்க வேண்டும்... அப்போது தான் மோடியா லேடியா என்று அறைகூவல் விடுத்த அம்மையாரின் ஆன்மா சாந்தியடையும்... [ அதன் பின்னர் தேர்தல் வந்தால் திமுக தான் வெற்றி பெறும்... சென்ற முறையே ஜெ இருக்கும்போதே மக்கள் , ஸ்டாலின் க்கு 98 சீட்டுக்கள் வழங்கி ஆதரவு தெரிவித்து விட்டனர்... ஆக ஸ்டாலின் வெற்றி பெறட்டும்... அதிமுக தினகரன் வசம் செல்லட்டும்... பாஜக தில்லு இருந்தா OPS EPS மற்றும் ரஜினியை வைத்து ஆட்சியை பிடிக்க முயலட்டும் ]

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  பாஞ்சாலி சபதம் தோற்றது போங்கோள்.... அடிப் போடி பைத்தியக்காரி...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  Good .. so it is time to send this Govt out

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  This govt. deserve to kick out.

 • Sivasubramanian - chennai,இந்தியா

  இந்த ஆட்சியை கவிழ்த்தால், தினகரன் ஆதரவு எம். எல்.ஏக்கள் தொலைந்தார்கள்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  கவிழ்ப்பது என்பதை விட, சில ரகசியங்களை வெளி தந்து அவர்களையும் தனது சிறைக்குள்ளேயே உள்ளே தள்ளுவதற்கு முயன்றால் முடியும் என்று சொல்கிறாள் எனது தோழி அர்ச்சனா ஸ்வாமிநாதன் வாட்சப்பில். அதை செய்யலாமே.

 • Arun.Point.blank -

  jailerndhu kudhikaadha ... unnaaala oru aaniyum pudunga mudiyaathu..koodiya seekiram neenga ellaam kudumbathoda kambi ennuveenga..

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஒரே ஒரு சந்தேகம் இடைத்தேர்தலில், எதற்காக கைவிரல் ரேகை வைத்தார்கள் வேட்பாளர் அறிவிப்பை தேர்தல் கமிஷனுக்கு.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஆமாம் இவரை பற்றிதானே, அம்மாவின் கல்லறையில் மடார் மடார், பொளேர் பொளேர் என்று உதைத்து சபதம் செய்தவர் என்று செய்தி வந்தது? .

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  முதலில் இந்த அம்மையாரின் சொத்துக்கள் அனைத்தையும் பறி முதல் செய்து விட்டு. மீதி வழக்குகளை தொடர வேண்டும். அப்போதுதான் இவர்களின் ஆணவம் அடங்கும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அரசியலில் சாதி என்பது சகஜம். முன்னர் சிலர் செய்து அவரை ஏமாற்றினார், இன்று அவருக்கே வந்திருக்கிறது. சிறைக்குள் சென்றவர் உள்ளேயே சும்மா கம்முன்னு கிடக்க வேண்டும். அப்போது தான் மன அழுத்தம் குறையும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது சரிதான் போல

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பிறர்கின்னா முற்பகல் என்ற குறள் இங்கு எ.கா ஆக கொள்ளலாமா?

 • nanban - mumbai,இந்தியா

  எதிர் பார்த்தது தான். அடுத்து சசிகலாவும் ஸ்டாலினும் ஒன்று சேர்வார்கள். தமிழ் மக்கள் அவர்களுக்கு ஓட்டளித்து சதோஷத்துடன் வெற்றி பெற செய்வார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement