Advertisement

சின்ட் மார்ட்டினிலிருந்து 170 இந்தியர்கள் மீட்பு

புதுடில்லி: இர்மா புயல் பாதித்த, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சின்ட் மார்ட்டீன் பகுதியிலிருந்து, இருந்து 170 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.கடந்த வாரம் அமெரிக்கா, கியூபா உள்ளிட்ட நாடுகளை இர்மா புயல் தாக்கியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள சின்ட் மார்ட்டீன் என்ற பகுதியையும் தாக்கியது. அங்கிருந்து 170 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, குராகோவ் என்ற தீவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார்.

சிறப்பு விமானம்:



டில்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் 110 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர், சின்ட் மா்ட்டினிலிருந்து குராகோவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று 2வது சிறப்பு விமானம் மூலம் 60 இந்தியர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த விமானத்தில் மற்ற நாடுகளை சேர்ந்த 30 பேரும் உள்ளதாக கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement