Advertisement

கேரள பாதிரியாரை மீட்க பிணைத்தொகை ஏதும் வழங்கவில்லை : மத்திய அரசு

திருவனந்தபுரம் : பாதிரியார் டாம் உலுனாலிலை மீட்க கடத்தல்காரர்களுக்கு எந்த ஒரு பிணைத்தொகையும் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சத்தமில்லாமல், அதே சமயம் வேகமாக பாதிரியாரை மீட்கும் பணிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏமனில் 2016 ஆண்டு மார்ச் மாதம் முதியோர் இல்லம் ஒன்றின் மீது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்த கேரள பாதிரியார் டாம் உலுனாலிலை ஐஎஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், தான் உயிருடன் இருப்பதாகவும், தன்னை மீட்கும்படியும் பாதிரியார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக ரீதியான நடவடிக்கை மேற்கொண்டது. இந்த தொடர் முயற்சியால் பாதிரியால், நேற்று பயங்கரவாதிகளால் விடுவிக்கப்பட்டார். செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்த மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், பாதிரியாரை மீட்க பிணைத்தொகை ஏதும் அளிக்கவில்லை. பாதிரியால் காணாமல் போனது முதல் இது போன்ற விமர்சனங்கள் வந்து கொண்டு தான் உள்ளன.
பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நேரடியாக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் மறைமுகமாக கையாண்ட வழிகளால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. பாதிரியார் தற்போது வாடிகன் சென்றுள்ளார். எப்போது இந்தியா திரும்ப வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (31)

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  பிணைத்தொகை கொடுத்திருந்தாலும் தவறில்லை. ஒரு உயிரை காப்பற்றதான் அது கொடுக்க பட்டிருக்கிறது. அதை வெளியில் சொல்வதை வேண்டாமா என்று அரசு முடிவு செய்துகொள்ள வேண்டும். பத்திரமாக மீட்க பட்டிருப்பதுதான் முக்கியம்.

 • Murugan - Mumbai

  ஐயா உங்கள் மதவெறியைச் சகிக்கமுடியாமல் அவர் வெளிநாடு போயிருக்கக் கூடும்

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  பாதிரியார் இனி மோடிக்கு எதிராக அனைத்து வேலைகளையும் செய்வார்

 • அப்பாவி -

  அங்கேருந்து அப்பிடியே வாடிகனா? நல்லாருக்கு.

 • john - chennai,இந்தியா

  நேரடியாக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் மறைமுகமாக கையாண்ட வழிகளால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. How cheap

 • sridhar - Chennai,இந்தியா

  தினமும் ஏசுவிடம் பேசும் , டஜன் கணக்கில் அற்புதம் நிகழ்த்தும் தமிழக , கேரளா மத போதகர்கள் ஏன் ஒரு சின்ன அற்புதம் மூலம் இவரை வெளியே கொண்டு வர முடியவில்லை?.

  • Rakesh Kumar - Trichy,இந்தியா

   அற்புதம் தான் நடந்திருக்கு. வத்திக்கான் சொல்லி, இஸ்லாமிய நாடான ஓமான் முயற்சி பண்ணி அவரை விடுவிச்சிருக்காங்க இன்னும் மதம் மண்ணாங்கட்டினு சொல்றதுக்கு வெக்கபடுங்க.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  தொண்டுசெய்ய இந்த நாட்டிலேயே ஏழைகள் பலர் இருக்கிறார்களே ? இந்த நாட்டில் பிறந்த இவருக்கு இந்த சமூகத்தின் மேல் அக்கறை இல்லையா ? இதுதான் வெளிநாட்டு மதமாற்றத்தின் தாக்கமா ? நாட்டுப்பற்று இல்லாமல் போய்விடுமா ? எங்கோ ஒரு நாட்டில் யாருக்கோ தொண்டுசெய்வாரா ?

  • Hi123 - Salem,இந்தியா

   அப்படி அவர்கள் நினைத்திருந்தால், நம் நாட்டிற்கு இந்த அளவு கல்வியோ, மருத்துவமோ, நாகரீகமோ கிடைத்திருக்காது, இன்னும் அறிவு இல்லாம் தான் இருந்திருபோம், நம் முன்னோர்கள் அனைவரும் (98 %) கிருஸ்த்துவ பள்ளி கல்லுரிகள் தான் படித்திருப்பார்கள், நமக்கு ஒரு அன்னை தெரசா வோ அல்லது வீரமாமுனிவர் அல்லது William Carey கிடைத்திருக்காது, இன்னும் மூட நம்பிக்கையில் இருந்திருப்போம் (உடன் கட்டை, குழந்தை திருமணம்,)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

   ஆத்திசூடியும், திருக்குறளையும் சத்தமா படி

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வாடிகன் தெளிவாக திட்டமிட்டிருக்கிறது. உலகிலேயே குறைந்த செலவில் மூளை சலவை செய்யப்பட்ட ஆட்களை தயார்படுத்துவதற்கு சிறந்த இடம் இந்தியாதான். அதனால் இங்கிருந்து ஆட்களை அனுப்பினால் செலவு குறைவு , மேலும் அவர்கள் மாட்டிக்கொண்டாலும் அதற்கு இந்திய அரசாங்கத்தை பொறுப்பாக்கிவிடலாம். ஆனால் இதே ஒரு அமெரிக்கனோ , இங்கிலாந்துக்காரனோ அங்கு மதமாற்றம் செய்ய வருவானா ? இங்குள்ள முட்டாள்கள் சிந்திக்க வேண்டும்.

  • Hi123 - Salem,இந்தியா

   கொஞ்ச மாசம் முன்னாடி தான் சேவை செய்ய போன அமெரிக்காக்காரனா மீட்டாங்க,

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அந்தாள் வாடிகனிலேயே இருக்கலாம். இங்கே வரவேண்டிய அவசியமில்லை. இங்கே வந்து ஆங்கிலத்தில் பேசி சிலரை மதம் மாற்ற முயற்சிப்பார். இந்த நாட்டிற்கு தீங்கு.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  எப்படி விஷயம் போகிறது என்பதை பார்த்தீர்களா? இந்திய ராசு மறைமுகமாக முயற்சி செய்து விடுதலை ஆன ரோமானிய அடிமை, முதலில் ரோமிற்கு சென்று தன் விசுவாசத்தை காண்பிக்கிறது. முயற்சி செய்த இந்திய பிரதமருக்கோ, சுஷிமா ஸ்வராஜ்ஜிற்கோ ஒரு நன்றி சொல்லாமல் இவர்களை முதலில் பார்க்காமல், தனது விசுவாசத்தை கட்ட ரோம் சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி மத்திய அரசிற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அடுத்த முறை கிறிஸ்த பிள்ளைபிடி காரர்கள் கடத்தப்பட்டால் அவர்களை மீட்கும் முயற்சியை எடுக்க கூடாது. இதை அறிந்து தான் அன்றே சுவாமி விவேகானந்தர் சொன்னார்-" எப்போது ஒருவன் ஹிந்துமத்தில் இருந்து வெளியேறுகிறானோ அப்போது பாரதத்திற்கு ஒரு எதிரி முளைத்து விட்டான் என்று அர்த்தம்"

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   காலம் காலமாக எதிரிகளைத்தான் வளர்ந்துள்ளது கான் + கிராஸ் அரசுகள்.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  பாதிரியாரை விடுவிக்க வத்திக்கான் ஏமன் நாட்டின் இளவரசர் மூலமாக ஒரு கோடி டாலர் தீவிரவாதிகளுக்கு கொடுத்த பின்னரே அவர் விடுதலை செய்ய பட்டார் , அவர் விடுதலை அடைந்ததை ஏமன் நாட்டின் இந்தியா தூதரகம் கூட அறியவில்லை , அங்குள்ள லோக்கல் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்ட பின் தான் இந்தியா தூதரகமும் இந்தியா அரசும் அறிந்தது , அதனால் நன்றி தெரிவிக்க தான் பாதிரியார் நேரடியாக வத்திக்கான் புறப்பட்டு சென்றார் .... கதை விடுவதில் நம் அரசுகளும் , நம் ஊடகங்களும் வல்லவர்கள் .....

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   ஒரு கோடி டாலர் என்றால் அதன் மதிப்பு என்னவென்று தெரியுமா ? அந்த பணத்தில் இதுபோல பல மூளை சலவை செய்யப்பட்ட ஆட்களை தயார் செய்து விடுவார்கள். சும்மா கதை விட வேண்டாம்.

  • Melkey - Mumbai,இந்தியா

   டேய் மாட்டு மண்டை சும்மா ஒளறிட்டு இருக்காத

 • Sivasubramanian - chennai,இந்தியா

  பிரதமர் மோடி, இதுவரையில் 4 பாதிரியார்களை மீட்டு வந்துள்ளார்கள். ஆனால், இந்த இந்துக்கள் மீது எரிச்சல் கொண்ட கிறித்தவர்களோ கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் மோடிக்கு எதிராக கோஷம் போடுவார்கள். அவர்களுக்கு மோடியை பாராட்டத்தெரியாது. ஒரு வார்த்தை பாராட்டவும் மனசு வராது. நல்லது செய்தாலும் ஏசுவார்கள். ஏசி யேசியே பழக்கம்.

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   அவர்களின் தேவன் சொல்லி கொடுத்த வழியோ என்னமோ ? இதுதான் பாவாடையிசம்

 • SRH - Mumbai ,இந்தியா

  பாதிரியார் தற்போது வாடிகன் சென்றுள்ளார். எப்போது இந்தியா திரும்ப வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்./,, அது அவரு இஷ்டம்,, என்ன நம்ம ஊருக்கு வந்து அவங்க குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வாடிகன் போயிருக்கலாம்,,

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  என் மதமா... உன் மதமா... ஆண்டவர் எந்த மதம்... தற்போது அவருக்கு எல்லா மதமும் ஒன்றே......

 • Sudha umapathy - Vellore,இந்தியா

  I express my deep sense of gratitude to The central government employees who rescued the priest from the abductors

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  இதுதான் பாரதத்தின் பண்பாடு. மோதி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அமெரிக்காவின் அழுத்தம் மறைமுகமாக இருந்து இவர் வாடிகன் முயற்சியாலும் மீட்க பட்டிருக்கலாம். உலகில் பிரச்சினைகள் மிகுந்து இருக்கும் நாடுகளில் குறிப்பாக யுத்த பூமிகளில் இவர்களை போன்றோர்களுக்கு சில அசைன்மென்ட் கொடுக்கப் பட்டிருக்கும். அதை அவர்களின் சங்கங்கள் மூலமாக அறிவித்து யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் சேரலாம் என்று அழைப்பு விடுக்கப் பட அதில் இவர் இணைந்து சென்றிருப்பார். ஆர் சி கிறிஸ்துவ அமைப்புகள் கேரளாவில் அதிகம். வாடிகன் ஊக்கம் அளிக்கிறது என்று அறிய முடிகிறது. நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்று அனைவராலும் ஊகிக்க முடிகிற நோக்கம் தான். அனைவராலும் அன்னை தெரேசாவாகவோ அல்லது நைக்ஹ்டிங்கேள் ஆகவோ முடியாது. உண்மையான பரிசுத்த நோக்கம் மனித சேவை நோக்கம் மட்டுமே இருந்திருக்க வேண்டும் அதற்கு. மற்ற மறைமுக காரணிகள் இருந்தால் இது போன்று தான் நடக்கும். வாழ்வை அர்பணிப்பவர்கள் மனித குல வறியவர்களுக்கு என்று அர்பணிக்கவேண்டும். வேறு நோக்கம் சரியல்ல.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பாராட்டுக்கள்..

 • anand - Chennai,இந்தியா

  அரசுக்கு தேவை இல்லாத வேலை.. எல்லாம் தெரிந்து தான் மத மற்றம் செய்ய செல்லுகின்றனர்.. நல்லதோ கெட்டதோ அவர்கள் தான் அனுபவிக்க வேண்டும்.. அவர் இது வரை மத்திய அரசுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.. தெரிவிக்க விட மாட்டார்கள்.. எதோ வாடிகன் தான் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது போல் பேசுவார்கள்..

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   அதுதான் பாவாடையிசம்

 • ilicha vaayan - chennai,இந்தியா

  கடத்தியது மூர்க்கர் , கடத்தப்பட்டவர் மத மாற்ற மதத்தினர் , ஆனால் விமர்சனம் மற்றும் பழி மட்டும் மோடி அரசின் மீது . நல்லா இருக்கு நியாயம் .கொஞ்ச நாளைக்கு வாடிகன்லயே பாதுகாப்பா இருந்து வேண்டிய பணம் எல்லாம் வாங்கிட்டு வாங்க . இங்க வந்து மத மாற்றம் செய்ய வசதியா இருக்கும்

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  Welcome back Fr. Tom its okey, something of our master and Lord's life for your experience we know its not easy but the endurance and survival and final release shows your Master and Lord wants something more from you in this earthly life. Live For Jesus - Live for Others.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  ஓமான் அரசின் முழு முயற்சியால் தான் பாதிரியார் மீட்கப்பட்டார் என்பதையும், அவர் ஓமான் அரசர்க்கு நன்றி தெரிவித்ததையும் இங்கு தெளிவுபடுத்த விழைகிறேன் ..முன்னதாக பாதிரியார் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓமான் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, பின் வாடிகன் புறப்பட்டு சென்றார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement