Advertisement

சபாநாயகருடன் அட்வகேட் ஜெனரல் ஆலோசனை

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து செப்.14க்குள் பதிலளிக்க அவர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், சபாநாயகர் அறையில், தனபால், அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். எம்எல்ஏக்கள் மீது உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், நடவடிக்கை எடுப்பது குறித்தும், உரிமைக்குழு நோட்டீஸ் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவு குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்த திமுக வழக்கு தொடர்பாகவும் ஆலோசனை நடடத்தி வருவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement