Advertisement

ஜப்பான் பிரதமருக்கு குஜராத் சைவ உணவு

ஆமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ேஷா அபே மற்றும் அவரது மனைவி அகி அபே ஆகியோருக்காக குஜராத் வகை சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

'ஷபா' அணிந்த ஊழியர்கள்குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் மங்கல்தாஸ் ஹெரிடேஜ் ஓட்டல் உள்ளது. அங்குள்ள அகாஷியி என்ற பிரபலமான உணவகத்தில் தான் ஜப்பான் பிரதமருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. உணவுகளை பரிமாற வேட்டி, குர்தா மற்றும், 'ஷபா' என்று அழைக்கப்படும் விசேஷமான தலைப்பாகை அணிந்த ஓட்டல் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


விருந்திற்காக, 30 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இட்லியை போல, குஜராத்தில் கடலை மாவில் செய்யப்படும் காமன் டோக்லா என்ற உணவு வகை பிரபலமானது. இது, இந்த விருந்தில் இடம் பெற்றுள்ளது. சேப்பங்கிழங்கில் செய்யப்பட்ட, 'ராஸ்பட்ரா', கொண்டகடலையில் செய்யப்பட்ட, 'கோடா பிரிட்டர்ஸ்', கிச்சடி, கொண்ட கடலை கிரேவி, பூசணி வகை உணவு, குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி, ரொட்டி வகைகள், பூரி,

இத்துடன் தொட்டு கொள்வதற்காக சேமியா தூவி தக்காளி போட்டு செய்யப்பட்ட, 'உந்தியூ', பூண்டு மற்றும் உருளைகிழக்கு போட்டு செய்யப்பட்ட, ' லாசானியா பாடிடா', பருப்பு வகைகள், தயிரில் வெங்காயம் போட்ட' ரைதா' தயிரில் செய்யப்பட்ட இனிப்பு வகையான, 'ஸ்ரீகந்த்', மசாலா மோர் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

2 தலைமை சமையல்காரர்கள்ஓட்டல் ஊழியர்களை கண்காணிக்க, அரசு மூலம் நியமிக்கப்பட்ட இரண்டு தலைமை சமையல்காரர்கள் அந்த ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஜப்பானை சேர்ந்தவர்.மற்றொருவர் குஜராத்தை சேர்ந்தவர். என்னென்ன உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.


ஜப்பான் மக்கள் மீன் வகைகள் மற்றும் இறைச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே நேரத்தில், பவுத்த மத வழக்கப்படி, சைவ உணவு வகைகளையும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். எனவே, குஜராத் மாநிலம் வரும் ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு குஜராத் வகை சைவ உணவு வகைகளே சமைக்கப்பட்டுள்ளன.Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (22)

 • vivek -

  How shame this bjp guys changed gujarat as the capital of India.

  • yaaro - chennai

   தானும் படுக்காம தள்ளியும் படுக்காம ..அவனாவது முன்னேறிட்டு போறான் ..நாம திராவிடம், சமூக நீதி, ஆரிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, திட்டங்கள் எதிர்ப்பு, எதிர்ப்பு எதிர்ப்பு போராட்டம் போராட்டம் அப்படின்னே திரிவோம் . என்ன நம்பிக்கைல இப்படி ஒரு திட்டத்தை தமிழ்நாட்டிலே கொண்டு வர முடியும். இன்னைக்கு கையெழுத்து போட்டுட்டு சில வருஷம் கழிச்சு வெக்கமே இல்லாம அத எதிர்த்து போராடுவோம் .

 • Kailash - Chennai,இந்தியா

  வாழ்ந்தால் ஒரு நாட்டின் அதிபராக வாழ வேண்டும். மக்களாக வாழக்கூடாது.

 • SRH - Mumbai ,இந்தியா

  இல்லே ஜப்பான்ல அவங்க மக்கள் இந்த பிரதமர் ஊர் சுத்திடுறார்ன்னு கிண்டல் செய்வார்களா ? இல்ல போயிட்டு நாட்டுக்கு ஏதாவது நல்லது செஞ்சுட்டு வாங்கன்னு சந்தோசம்மா அனுப்பி வெப்பங்களா ?

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  இந்த உணவு வகைகளை படிக்கும் போது எனக்கே எச்சில் ஊறுது ...இப்படி பட்ட உணவுகள் சாப்பிட கூடாது மட்டன் சிக்கன் தான் சாப்பிட்டாகணும் என்றெல்லாம் இல்லை .யாருக்கு என்ன பிடிக்குமோ அதை சாப்பிடட்டும் ..இதில் போயி மதத்தை நுழைப்பதுதான் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று .,,,

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  என்னப்பா இது பூரி, கடலை மாவு, சேப்பங்கிழங்கு, உருளை கிழங்கு, கொண்டைக்கடலைன்னு ஒரே வாயு பண்டமாக இருக்கே. அவரு வயத்துக்குள்ளே புல்லட் ட்ரெயின் ஓடுறாமாதிரி பண்ணிட போறீங்க.. அடிக்கல் நாட்ட வந்தவரை அடிவயிறை பிடித்துக்கொண்டு ஓடாம பார்த்துக்கோங்க.

 • T.Ramanathan - Colombo,இலங்கை

  We must proudly present our cuisine and show the visiting dignitaries the spread of our delicacies.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இட்லிக்கும் காமன் டோக்ளா விற்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது. சப்பானிய பிரதமர் விருந்தை ரசிப்பார் என நம்பலாம்..

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   உங்களுக்கு தெரியும் அவருக்கு தெரியாதே...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒரு விருந்தினர் நமது நாட்டுக்கு வருகிறார் என்றால், அவருக்கு பிடித்த அசைவ உணவை தான் நாம் வழங்கவேண்டும்.... அசைவ உணவு வழங்குவது ஒன்றும் தப்பில்லை... இந்தியாவின் உணவு அசைவம் தான்.... 90 % இந்திய மக்கள் உண்ணும் உணவு அசைவம் தான்... இந்தியாவின் பாரம்பரிய அசைவ உணவை வழங்காமல் சிறு பகுதியினர் [ இதிலும் பலர் மறைந்து ஒழிந்து அசைவ உணவை உண்பதுண்டு என்பது தனிக்கதை ] , உண்ணும் சைவ உணவை தான் இந்தியாவின் பாரம்பரிய உணவு என்று உலகுக்கு உணர்த்த நினைக்கிறார்களா?.. மோடி , சப்பான் சென்றால் மோடிக்கு சைவ உணவு தான் வழங்குகிறார்கள்... அவர்களுக்கு பிடித்த பாம்பு கறியை கொடுத்தால் மோடி உண்பாரா?... விருந்தினரிடமும் உணவு பழக்கத்தை திணிக்கும் இவர்கள், மக்களிடம் இனி என்னவெல்லாம் திணிக்க போகிறார்களோ ?

 • Hafees Ali - ooty,இந்தியா

  இதில் பெருமைப்பட என்ன இருக்கு? ஒரு நட்டு தலைவர் வேறுநாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டின் பாரம்பரிய உணவை உண்ணுவது சகஜம்தானே?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  கனடாவாசி அவர்களே, ஜப்பான் காரருக்கு தெரியும் சாப்பிட்டபின் செரிமானம் செய்ய, நம்மவர்கள் தான் extra item களுக்கு நாடுவார்கள். Lol.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  எல்லோரும் கேட்கிறார்கள், ஆமதாபாத் தான் இந்தியாவின் தலைநகரா என்று.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  சீனாக்காரனை வெறுப்பேத்த இவரும் என்னென்னவோ செய்கிறார்...

 • VIJAIANC -

  MODI is forcing hindutva on Japan pm, this is RSS agenda Common the usual MODI opposers can post comments

 • Appu - Madurai,இந்தியா

  குஜராத் உணவு வகைகளை அபப்டியே சாப்பிட்டது போல உணர்வை ஏற்படுத்துகிறது உங்கள் பொழிப்புரை...

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சென்ற தடவை நெற்றி நிறைய சிவப்பழமாய் திலகமணிந்து வாரணாசியில் நமது பிரதமரோடு கங்கா ஆரத்தி செய்த ஜப்பான் பிரதமர் இம்முறை குஜராத்திய சைவ உணவு விருந்து பெறுகிறார் அடுத்த தடவை தமிழக சைவ கோயிலுக்கு தமிழக சைவ உணவோடு அழைப்போம்

  • Appu - Madurai,இந்தியா

   அதென்னகோ சைவ கோயில்? கோயில்ல சைவம் அசைவம் உண்டா? தெரியாம தானுங்கோ கேக்குறேன்? அசைவ கோயிலுக்கு போனா செட்டிநாட்டு கறிக்குழம்பும் மீன் வறுவலும் சாப்பிட மாட்டாங்களா?

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   இங்க வந்தாலே கறுப்புக்கொடி காட்ட ஏதாவது ஒரு லெட்டர் பேட் கட்சி உட்கார்ந்திருக்கும்...

  • ganapati sb - coimbatore,இந்தியா

   இங்கே நான்குறிப்பிட்ட முதல் சைவம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனக்கூறும் சைவ சமயம் அதன் தலைமை மையம் சிதம்பரம் மற்றும் அண்ணாமலை காஞ்சி ஆனைக்கா காளஹஸ்தி போன்ற பஞ்சபூத ஸ்தலங்கள் மற்றும் ராமேஸ்வரம் மதுரை திருவாரூர் நெல்லை போன்ற பல்லாயிரம் ஆண்டு கம்பிரமாக நிற்கும் ஆலயங்கள் மற்றொரு சைவம் என்பது குஜராத்தி சைவம் போல சங்ககால வள்ளுவரும் சமகால வள்ளலாரும் நம் தமிழர்க்கு அருளிய ஜீவகாருண்யம் என்ற சைவ உணவு.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  30 வகை சாப்பாடு பரிமாறுகிறார்கள் , இவர்களுக்கு எத்தனை சான் வயிறு ? வரும்போது சாக்கா வயிற்றுக்குள் வைத்துள்ளார்கள். பட்டினி பட்டாளங்கள் போல் உணவு விடயத்தில் பெருமை கூறாதீர்கள். போஜனத்துக்கு வயிறும், வயிற்றுக்கு போசனமும் உண்டு .

  • Hafees Ali - ooty,இந்தியா

   சூப்பர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement