Advertisement

போலீஸ்காரரை அடித்து உதைத்த பெண் நீதிபதி

டேராடூன் : உத்திரகாண்ட் மாநிலத்தில் தன்னை பெண் நீதிபதி என கூறி கொண்ட பெண் ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டேராடூனில் உள்ள தனியார் பல்கலை., மாணவர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார், பெற்றோர்களை அழைத்து வரும்படி கூறி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டேராடூன் பல்கலை.,யில் படிக்கும் மகனுடன் பேசுவதற்காக ஜெயா பதக் என்ற பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். தன்னை உ..பி.,யில் மாவட்ட கூடுதல் நீதிபதி என கூறிக் கொண்ட அவர், போசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த நரேஷ் ரத்தோர் என்ற போலீஸ்காரர் அப்பெண்ணை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த போலீஸ்காரரை சரமாரியாக அறைந்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அப்பெண் தன்னைப் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் பெண் நீதிபதி என்பது உண்மையாகும் பட்சத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அலகாபாத் ஐகோர்ட்டிடம் அனுமதி கேட்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (35)

 • appaavi - aandipatti,இந்தியா

  நியாயமா பேசுனா படம் பிடிப்பானுக...இதையே அஞ்சுக்கும் பத்துக்கும் இவன் கூட்டாளி கைநீட்டும் போது பிடிப்பானா?

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ரௌடிகள் எல்லாம் நீதிபதிகளா? விளங்கிடும் இந்தியா? ஜெய் ஹிந்த்.

 • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

  திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் போராட்டத்தின் போது அமைதியாக போராடிய பெண்ணை ஒரு மாவீர போலீஸ் கன்னத்தில் அறைந்தான் - அது தமிழ்நாடு ஸ்டைல் இது உ/பி ஸ்டைல்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இவர் பெண் நீதிபதி என்பது உண்மை என்றால் இவர் தான் கவிஞர் பாரதி கனவு கண்ட புரட்சி பெண் எனலாம்?. காரணம் போலீஸ்காரர் இவரை வீடியோ எடுத்ததால்?.

 • Only Real No politics - Chennai,இந்தியா

  போலீஸாவது நீதிபதியாவது தவறு யார் செய்தாலும் வெளுக்க வேண்டியது தான், ஆனால் தவறு யார் மீது என்பது தெளிவாக தெரியவில்லை தெரிந்தால் தான் நாம் உறுதியாக சொல்ல முடியும், இவர் வீடியோ எடுத்தார் ஆனால் அந்த பெண் என்ன பேசினார் தான் பேசியது மீடியாவின் மூலம் மக்களுக்கு தெரிந்து விட கூடாது என்பதற்காக கோவப்பட்டாரா, பொறுத்திருந்து பாப்போம்.........

 • Marshal Thampi - Nagercoil,இந்தியா

  அவர் நீதிபதியாக இருக்காது...ஏதோ ஒரு ஆளும் கட்சி பெண் குண்டர் ஆக இருக்கலாம் ...நீதிபதி சட்டம் தெரிந்தவர்... தரக்குறைவாக நடந்து கொள்ளமாட்டார்.

 • mukundan - chennai,இந்தியா

  இந்த புல்டோசர் ஒரு நீதிபதியா? கருமம்....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நமது நாட்டில் இது தான் பிரச்சினை ... மாட்டிகிட்டவர்களை நொங்கு எடுப்பது ...இந்தம்மா வீடியோவில் மாட்டிக்கொண்டார்... ஆதலால் இங்கு விழும் கருத்துக்கள் இந்தம்மாவுக்கு பாதகமா வருது.... எல்லா ஊரிலும் நீதித்துறையில் உள்ளவர்கள் , காவல்துறையை அடிப்பது சர்வ சாதாரணம்... நானே பொதுவெளியில் இதனை பார்த்துள்ளேன்... சட்ட கல்லூரி மாணவர்களே, அல்லது வக்கீல்களே, கான்ஸ்டபிள்களை அடிப்பதை... ஆனால் காவல் உயரதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்வார்கள்... அவ்வளவு எதுக்கு ஒரு அரசு பேருந்து டிரைவரே, ஒரு போலீஸ் காரரரை அடித்ததாகவும் அந்த செய்தி அப்புறம் மழுங்கடிக்கப்பட்டதையும் ஏற்கனவே செய்திகளில் படித்துள்ளேன்...[ காவல்துறையினர் இளிச்சவாயன்கள், மற்றும் பணம் அதிகாரம் இல்லாதவர்களை தான் மொத்துவார்கள்... ]

 • K.Sugavanam - Salem,இந்தியா

  உண்மைவெளிவரும் வரை பொறுத்திருப்போம்.. செல்போனில் படம் பிடித்தது தவறு... அந்த போலீசால் நியமிக்கப்பட்ட போட்டோகிராஃபரா?

 • Siva - Chennai,இந்தியா

  பெண்கள் முன்னேற்றம் சுதந்திரம் அலப்பறை கொடுத்தவங்களா, இப்போ பாருங்கடா.. பொம்பளைங்க கிட்ட செருப்படி வாங்கிட்டு ... நாளைக்கு இது உங்களுக்கும் நடக்கலாம், உங்க அப்பாக்கு நடக்கலாம், உங்க அண்ணன் தம்பி மகன் யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம் ... ஆம்பளைங்க ஆம்பளைக்கு சப்போர்ட் பண்ணுங்க ... எந்த பொம்பளைங்களும் ஆம்பளைக்கு சப்போர்ட் பண்ண மாட்டாளுங்க ....

  • Gayathriparameswaran - ,

   I think u r in the middle history of vedic period. if u r a girl u can realize it. but how can u. dont scold all the women for this. u dont know what happened there. then u r also the responsible men for all illegal activities on women.

  • Amarendiran - ,

   well said...

 • Venkatapathy Perumalsamy - New Delhi,இந்தியா

  தான் ஒரு மாவட்ட கூடுதல் நீதிபதி, நீதிபதி என்று சொன்னதற்கு பின்னால் புரோட்டோ கால் படி சலூட் அடிக்க வேண்டிய போலீஸ்காரன் வீடியோ எடுத்தால் அது திமிர் ,அவர் உண்மையான நீதிபதியா என்பதை உயிர் அதிகாரிகளை கொண்டு அப் பெண்ணை அடையாள அட்டை அல்லது அவர் சொல்லும் நீதி மன்றத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு உறுதி படுத்தி இருக்கலாம் உண்மையிலேயே நீதிபதியாய் இருக்கும் பட்சத்தில் ஹை கோர்ட் போலீஸ்காரனை வேலை நீக்கம் செய்ய வாய்ப்புண்டு ,குனிய வைத்து குத்துவார்கள் ,விடியோ போட்டோ எடுக்க அவர் என்ன இவன் காதலியா ??? முட்டாள் போலீஸ் காரன் 2 அறை விட்டதால் தப்பில்லை.......

  • Gayathriparameswaran - ,

   correct bro

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  முதலில் அவர் பெண் போலீசா இல்ல நீதிபதியான்னு பார்ப்பதற்கு முன், அவர் ஆணா இல்ல பெண்ணா என்று கண்டுபுடியுங்க.... இன்னிக்கு எதுவும் நடக்கலாம்...

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

   பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் ..நீ அடிக்கும் நக்கல் எப்போதும் உனக்கு சாதகமாக இருக்காது..... நீ நக்கல் அடித்திருப்பது வேறு யாரையும் அல்ல... ஒரு பெண் நீதிபதியை ... ஒரு வேளை, அவர் பெண் நீதிபதியாக இருந்துவிட்டால், உனது இந்த கருத்து , பெண்களுக்கு எதிரானது மட்டும் அல்ல,,,,நீதிமன்ற அவமதிப்புக்கும் உள்ளாகும்... ஆகையால் இனிமேலாவது நக்கல் அடிக்கும்போது, பத்தும் தெரிந்து நக்கல் அடி, திரு . நக்கல் நாதமுனி அவர்களே

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   தமிழன், நான் சொன்னதுல பெண்ணை கேவலப்படுத்தற மாதிரி எதுவும் இல்ல... எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்க கூடாது... நீ ஒரு நீதிபதின்னு எனக்கு இப்பத்தான் தெரியும்... தண்டனையை பாத்து கொடு ...

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  அந்த பொறம்போக்கு போலீஸ் ஏன் வீடியோ எடுத்தான்?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அவ உருவத்தை பார்த்தா வேறே மாதிரி தெரியுதே?????

 • மணி மாறன் - chennai,இந்தியா

  ஐயா..கர்ணன் அவர்களே ....எங்கே இருக்கிறீர்கள் ????

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  நீதிபதிகளை பார்த்தால் நீதிக்கு நீதி மன்றத்தை நாடும் மக்கள் நிலை பரிதாபம் தான்...

 • சுரேஷ் -

  நன்றாக விசாரித்து தக்க தண்டனை வாங்கி தர வேண்டும்

 • kskmet - bangalore,இந்தியா

  ஆணென்ன பெண்ணென்ன. வரம்பு மீறினால் எல்லோரையும் ஒன்றாகவே பாவிக்க வேண்டும்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  தன்னுடைய அழுக்கை தெருவில் கழுவுகிறார் இந்த பெண்.

  • sethu - Chennai,இந்தியா

   முட்டாள் போலீசு வீடியோ எடுத்தது தப்பு அதை எவனும் சொல்லல பெண்களை குறை சொல்லவேண்டாம். அடித்தது தவறே அல்ல துணிந்து செய்ததுதான் சரி

 • thiru - Chennai,இந்தியா

  அவங்க வீட்ல புருஷன் நிலைமையை நினச்சு பார்த்த பரிதமா இருக்கு...

 • Anand - chennai,இந்தியா

  SUMO பயில்வான் ......................

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The "Kali Kaalam" has started as a woman was be like a Dhada and Rowdy in this way in public place with the uniformed policeman is not good,correct and accep. This woman must be identified and disciplinary action should be initiated against this woman as per the law of the land without fail.

 • kundalakesi - VANCOUVER,கனடா

  நீதிபதி வேஷமோ , மோசமோ, தண்டனையை நேரடியாக தருவது ஷேம் ஷேம் தான்.

 • Appu - Madurai,இந்தியா

  ஏண்டா நாட்டுல மக்களோ மாணவர்களோ போராட உரிமை இல்லையா?என்ன சர்வாதிர்காரம் பண்றீங்கடா நீங்க?இப்ப பாரு தேவையா பொம்பள கையாள அடி..தேவையா?தமிழ்நாட்டுல இது போல நிகழனும்,பழனிசாமிகளுக்கு எப்போவாவது அறிவு வரும்.கேட்பார் பேச்சு கேட்டு ஆடும் தொடைநடுங்கிகளே உங்களுக்கு ஒரு நாள் மக்கள் வைப்பார்கள் பெருசா ஆப்பு....

 • Appu - Madurai,இந்தியா

  ரெண்டுபேருக்கும் பெரிய அவமானம்...எந்த பொறுப்பில் இருந்தாலும் ஆணை பெண் அடிப்பதும்,பெண்ணை ஆண் அடிப்பதும் தவறு..அதுவும் சட்டம் மற்றும் காவல் துறை இது போல பொறுப்பில்லாமல் பொது இடங்களில் நடந்து கொள்வது மாபெரும் தவறு . இது நம் நாட்டின் மதிப்பை கெடுக்கும் ஒரு செய்கை.....படித்தவர்கள் தான் பொறுப்பில் இருக்கிறார்களா என்று நினைக்க வைக்கும் சம்பவம் இது....

 • SRH - Mumbai ,இந்தியா

  வீடியோ ஏன் எடுத்தான் அந்த போலீஸ் காரன், வாங்க வேண்டியவன் தான் ம்,,

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

   உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா??

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  பெண் நீதி பதி ஏஞ்சல் என்ன இரண்டு கொம்பா முளைத்திருக்கிறது , தவறு இருந்தால் ஓகே , தவறு இல்லாத பட்சத்தில் போலீஸ் காரர் திருப்பி தாக்க வேண்டும்

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அவர் பெண் இனத்துக்கு மரியாதை கொடுத்தார். ஆம்பளையாய் இருந்திருந்தால் டிரௌசர் கிழிந்திருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement