Advertisement

மாஜி திமுக எம்.எல்.ஏ.,மகன் கைது

திருநெல்வேலி : நெல்லையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செசல்வம் ஆகியோரது உருவபொம்மையை எரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்கியதை கண்டித்து நெல்லையில் தினகரன் ஆதரவாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உருவபொம்மைகளை எரித்தனர். தினகரன் ஆதரவாளர்கள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் அறிந்தும் ஜங்ஷன் போலீசார் அவர்களை கைது செய்யாமல் கோட்டைவிட்டனர். பின்னர் அவர்கள் வீடுகளுக்கு சென்ற பின்னர் தேடிச்சென்று, முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியனின் மகன் சங்கர் மற்றும் 4 பேரை கைது செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement