Advertisement

சமையல் கூடமான தாசில்தார் அலுவலகம்

திருநெல்வேலி : நெல்லையில் தாலுகா அலுவலகத்திற்கு மூன்றாவது நாளாக பூட்டு போட்டு போராடும் அரசு ஊழியர்களுக்காக அங்கு சமையல் பணி நடந்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சிலர் கழுத்தில் மண்டைஓட்டு மாலையணிந்து கையில் திருவோடுகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளை தாலுகா அலுவலகத்திற்கு இன்று மூன்றாவது நாளாக பூட்டு போட்டு பூட்டினர். மாவட்டத்தில் 15 தாலுகா அலுவலகங்கள், மூன்று கோட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படவில்லை. மக்களுக்கு சான்றிதழ்கள், ரேஷன் கார்டு வழங்கல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் நடக்கவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபடுவோருக்காக பூட்டிய தாலுகா அலுவலகத்திற்குள் அண்டாக்களில் சமையல் பணி நடந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    These people are doing this porattam only to take food on free of cost that is why they are preparing in in Big Andas inside the locked taluk office.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement