Advertisement

போலீஸ் மூலம் எம்எல்ஏக்களுக்கு மிரட்டல்: தினகரன்

சென்னை: போலீசாரை அனுப்பி தனது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் விடுப்பதாக தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி: எம்எல்ஏக்கள் தங்கியுள்ள குடகு ரிசார்ட்டிற்கு தமிழக போலீசார் சென்று மிரட்டுகின்றனர். எடப்பாடிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். 20 கோடி ரூபாய் வரை பணம் தருகிறோம் என பேரம் பேசுகின்றனர். இல்லையென்றால், உங்கள் மீது வழக்கு போடுவோம் என மிரட்டல் விடுப்பதாக எம்எல்ஏக்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

கெஞ்சல்:தமிழகத்தை ஆட்சி செய்யும் துரோக ஆட்சி, பொய் வழக்கு போடுவேன் என போலீசாரை அனுப்பி எம்.எல்.ஏ.,க்களை மிரட்ட பார்க்கிறது. கோர்ட்டை நாடி போலீசார், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளேன். என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். எந்தளவிற்கு தரம் தாழ்ந்து ஆட்சியை காப்பாற்ற தரங்கெட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்பதை தெரிவிக்க வந்துள்ளேன்.
சம்மனுக்கு ஆஜராகவில்லை எனக்கூறி, பழனியப்பனை கைது செய்ய முயற்சி செய்கின்றனர். அதிகார திமிரில் மிரட்டியவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என இடம் தெரியாமல் உள்ளனர். எடப்பாடிக்கு 117 எம்எல்ஏக்கள் இல்லை என தெரிந்தாலும் அறுதி பெரும்பான்மைக்காக கெஞ்சி கொண்டிருக்கிறார். கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடர்ந்து கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளேன். ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றி கூற முடியாது.

பயமில்லை:பழனியப்பன் ரிசார்ட்டில் இருந்து கிளம்பிவிட்டார். அவர் கோர்ட்டை நாட உள்ளார். யாருக்கும் பயப்பட மாட்டோம். உண்மைக்கு மட்டும் பயப்படுவேன். ஆட்சி முடிய போவது அவர்களுக்கு தெரியும்.கிடைப்பது வரை லாபம் என நினைக்கின்றனர். நேற்று நடந்தது பொதுக்குழு அல்ல. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களே இல்லை. எடப்பாடி, பன்னீர்செல்வம் கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜெயலலிதா இருந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி அமர்வதை மக்கள், தொண்டர்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  நேற்றைய தினம் மின்கட்டணம் செலுத்துவதற்கு சென்னை ஓ எம் ஆர் ஆஃபீசுக்குச் சென்றிருந்தேன். நான் போய்ச்சேர்ந்த நேரம் பவர் இல்லை. கரண்ட் வந்தால்தான் பில் போடமுடியும் என்று கிளார்க் சொல்லிவிட்டார். 10 நிமிடங்கள் கழித்து எப்போது கரண்ட் வரும் என்று கேட்டேன். மேலே எழுதியுள்ள நம்பருக்கு போன்போடச்சொன்னார். பதில் இல்லை. பில் மேட்டர்தானே ஒரு UPS வைத்துக்கொண்டால் என்ன? 2008 இல் ஒன்று வாங்கி கொடுத்தார்கள். அதுக்கப்புரம் இன்றுவரை எதுவுமில்லை. கார்பன் பேப்பர்கூட நாங்கள்தான் கைக்காசு போட்டு வாங்கறோம். எல்லா கழகங்களிலும் கட்சியின் செல்வாக்கு படைத்தவர்கள் அமர்ந்துகொண்டு வாங்காத பொருளுக்கு வாங்கினதாக பில்போட்டு சுரண்டி சாப்பிடுகிறார்கள் என்கிறார். அரைமணி நேரம் தேவுடு காத்திருந்து சும்மா திரும்பி வந்தேன்.

 • kurinjikilan - Madurai,இந்தியா

  MLA க்களை மிரட்டி கடத்தி கொண்டுபோய் ஊர் ஊரா ஓட்டலில் தங்கவைத்து தினமும் மந்திரிகள் மற்றும் MLA க்களை திட்டி வசைபாடி கவர்னரை மிரட்டி காலம் தள்ளும் நீங்கள் போலீஸ் MLA க்களை மிரட்டுகிறது என்று சொல்வது உங்களுக்கே ஓவரா தெரியலையா ?

 • mugesh - chennai,இந்தியா

  Yevalavo accident nadakuthu, yen ivanunga poravandilam accident aaka maatengutho...

 • க.துரைராஜ் -

  உங்கள் அணி MLA விற்கு20கோடி ரூபாய் நேரம் பேசுவதாக தெரிவித்ததோடு , நீங்கள் எவ்வளவு பேரம் பேசி குடகு சொகுசுவிடுதியில் தங்க வைத்துள்ளீர்கள் என தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் சந்தை ஆடுகளாகத்தான் அவர்களை எங்களைப் போன்ற வாக்காளர்களால் பார்க்கப்படுகிறார்கள்.

 • MaRan - chennai,இந்தியா

  உண்மைக்கு மட்டும் பயப்படுவேன் நல்ல சிரிச்சேன் பா,

 • Anand T S V - Frankfart,ஜெர்மனி

  நல்ல மனிதர். இவரு கருத்து சரியே.

 • Indhuindian - Chennai,இந்தியா

  ஏலத்தை வுயர்த்திவிடும் தந்திரம்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This man is unnecessarily talking and he don't know what he is talking and the Two slaves who were like cashew nuts used to give give statements now and then on his behalf are silent now.It clearly shows that Dhinakaran's fall and declines already started.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement