Advertisement

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனிப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., பழனியப்பனை சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான ஒப்பந்தக்காரர் சுப்ரமணியனின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ., பழனியப்பன், விசாரணை வளையத்திற்குள் இருந்து வந்தார். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பழனியப்பனும் தங்கி இருந்தார். இதனால் குடகு விரைந்த சிபிசிஐடி போலீசார்,பழனியப்பனை நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.
ஒப்பந்தக்காரர் சுப்ரமணியன் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் ஓரிரு நாளில் பழனியப்பன் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் ரகசிய இடம் ஒன்றில் வைத்து பழனியப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (19)

 • TamilReader - Dindigul,இந்தியா

  The main culprit is Vijay Bhaskar... Why he is not arrested in-spite of tons of evidence from various agencies including IT, ECI, etc... This clearly shows how OPS/EPS government is functioning..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இங்கே இவரை பிராடு என்று கருத்து எழுதும் கோவிந்தாக்களே , எந்த அரசியல்வாதி மீது குற்றசாட்டு இல்லை ??.. பழிவாங்கும் நோக்கில் தான் இவரை கைது பண்ண துடிக்கிறார்கள்... இவரே எடப்பாடிக்கு ஆதரவா இருந்தா, இந்நேரம் , இந்த கேசு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும்.. அதுமட்டும் அல்ல முதல்வராக இருந்தவர்கள் மீது மட்டும் அல்ல இப்போது இணை துணை அன்று அந்த பதவியில் இருப்பவர்கள் மீதெல்லாம் இதனை விட பெரிய கேஸுகள் எல்லாம் உள்ளன... இந்தியா எங்கும் இதே நிலை தான்... ஆக பழனியப்பன் , தினகரன் , சசி மட்டும் தான் குற்றவாளிகள் மற்றவர்கள் எல்லாம் சொக்கத்தங்கங்கள் என்ற மனோநிலையை மாற்றுங்கள்...

 • balaji -

  contractor oda friend ah yen inum kaidu Panala inaiku kuda arasu vizaha la kalandukitaru avar friend vijayabhaskar

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  திருடனை பிடித்தால் திருடனுக்கு வலிக்கத்தானே செய்யும்

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  எதுக்குங்க பேச்சு அப்பிடியே புடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போடுங்க

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  ஏன்டா நேத்துதான் இவரை கைது செய்யபடார்னு போட்டீங்க அதுக்குள்ள விசாரணையா.. இவர் அடுத்து மோடி அணிக்கு வலுக்கட்டாயமாக சேர்க்க படுவார்..

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இந்த மாதிரி பிராடு பயலுகளையெல்லாம் உள்ளே போட வேண்டும். மூஞ்சியும் முழியுமே சரியில்லை.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  துக்கத்தில் கண்ணையே காணோம் நடிக்கிறான்

 • Indhuindian - Chennai,இந்தியா

  Birds of the same flock fly together ஓரினத்து பறவைகள் ஒன்றாய் parakkindrana

 • Appu - Madurai,இந்தியா

  எல்லாம் அரசியல்..இவர்கள் சிறை செல்ல மாட்டார்கள் அணிமாற்றம் ஆட்சி கவிழ்ப்பில் சில மாற்றங்கள் வரலாம் அவ்வளவு தான்...எல்லாம் மஸ்தான் மயம்..

 • Narayanan Muthuraman - Mumbai,ஐக்கிய அரபு நாடுகள்

  அடுத்து யாரு ?????

 • narayanan iyer - chennai,இந்தியா

  Let all Dinakaram support MLA resign from the post. Pukazhenthi says that let palanisamy remove this 20 MLA from the party. Why? let all resign and start new party and face the election.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  குரூப்பு மாறிட்டா சும்மா தகத்தன்னு மின்னும் பியூர் கோல்ட் ஆயிடுவார்.

 • anvar - paramakudi,இந்தியா

  இன்னும் 20 பேர் இருக்கின்றனர். அவர்களை பயமுறுத்ததும் வேலை ஆரம்பம்.சூப்பர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement