Advertisement

சசிக்காக சிறை விதிகள் மீண்டும் வளைப்பு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக, சிறை விதிகள் மீண்டும் மீறப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டம்சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டன என சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா தெரிவித்தார். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதன் பிறகும் சசிகலாவுக்கு சிறையில் தனி சலுகைகள் காட்டப்படுகின்றன என்றே கூறப்படுகிறது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பெறப்பட்ட தகவல்கள் வருமாறு:

சிறையில் உள்ள தண்டனை கைதியை, ஒரு நாளில் நான்கு அல்லது ஆறு பார்வையாளர்கள் சந்திக்கலாம். அவர்கள் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்பது சிறை விதிகளில் ஒன்று. ஆனால், ஜூலை, 11ம் தேதி சசிகலாவை, ஏழு பேர் சந்தித்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே உறவினர்கள். ஷகிலா, விவேக், கீர்த்தனா, ஜெயா, வெற்றிவேல், தாமரைசெல்வன் மற்றும் நாகராஜன் ஆகியோர் சசிகலாவை சந்தித்துள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் உறவினர்கள் அல்ல. அதற்கு முன், ஜூலை, 5ம் தேதி, சசிகலாவை ஆறு பேர் சந்தித்துள்ளனர். வெங்கடேஷ், தினகரன், பழனிவேல், ராமலிங்கம், உசேன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் அவரை சந்தித்துள்ளனர். சிறை விதிகளின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்டனை கைதியை சந்திக்க முடியும். ஆனால், சசிகலாவை, ஒரு வார இடைவெளியில் இவர்கள் சந்தித்துள்ளனர்.

விதியை மீறிய புகழேந்திஅ.தி.மு.க.,வின் கர்நாடக மாநில செயலாளரும், தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி ஆக., 2ம் தேதி மாலை, 4.30 மணி முதல், 5.15 மணி வரை சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். சிறையில் உள்ள கைதியை, மாலை, 5 மணி வரை தான் சந்திக்க முடியும். ஆனால், புகழேந்தி கூடுதலாக, 15 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார்.

எல்லாமே இலவசம்சிறை விதிகளின்படி, ஒரு கைதிக்கு உணவு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை சிறைக்குள் வாங்கி கொள்ள வேண்டும். ஆனால், இதுநாள் வரை சசிகலா எந்த பொருளையும் பணம் கொடுத்து வாங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம், அவருக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • kalyan - CHENNAI,இந்தியா

  ஒரு நாளைக்கி ஒரு கோடி.. சும்மாவா வரும்?

 • Jeeva - virudhunagar,இந்தியா

  தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . சசிகலா குடும்பம் வெளியேற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி .

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  //// இதுநாள் வரை சசிகலா எந்த பொருளையும் பணம் கொடுத்து வாங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது/// அதுதான் வெளிவந்த வீடியோவில் கைநிறைய பையை வைத்து ஷாப்பிங் செய்து விட்டு தானே வந்திருக்கிறார். அது போதாதா? வெளியே வாங்கினால் அதுவே போதும். உள்ளேயும் வேறு வாங்க வேண்டுமா? இது என்ன தலை எழுத்தா?

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  நாட்ல எந்த மந்திரி எந்த உறுதிமொழியை சட்டத்தை விதியை மதித்து நடக்கின்றனர். அவர்கள் நினைப்பது எல்லாம் எப்படி கோடி கோடியாய் கணக்கு காட்டாமல் சம்பாதிப்பது .எப்படி பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது என்ற வியூகமே வேறொன்றும் அவர்கள் சாதிக்க நினைப்பதே இல்லை. இப்போ பாருங்களேன் .பதவி ஆசை ஆட்டி படைக்கிறது.கவர்னரே >>>>>>

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் சட்டமும் நீதித்துறையும் வேலை செய்யாது

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  டூத் பேஸ்ட் வாங்கவில்லையா, ஏற்கனேவே நாறல் வாய்தானே. சோப்பாவது வாங்கினாங்களா குளிக்க.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  காந்தி தேசம் (கர்நாடகம் ) பணத்துக்காக என்ன வேணா செய்யும்

 • shekaran - thiruchi,இந்தியா

  அப்படியா சொல்லவே இல்ல

 • USHA.DEVAN -

  சசிக்காக சிறை விதிகள் வளைப்பு, இப்பதான் நினைத்தேன் உங்கள் கணவரை மருத்துவ மனை சென்று பார்க்க வேண்டிய கட்டாயம்.ஜெயலிதா அவர்கள் மருத்துவ மனையில் இருந்த போது அவருக்கு வேண்டியவர்களை தீபா உட்பட யாரையுமே பார்க்க விடாமல் செய்து விட்டோமே என்று feel பண்ணுவீர்கள் என்று. சான்ஸே இல்லை. மீண்டும் விதி மீறல்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  பரப்பன அக்ராஹார 5 ஸ்டார் ஹோட்டல் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது. சசிகலா மற்றும் அவருக்கு துணையாக ராம் ரஹீம் சிங்கும் இந்த ஹோட்டலுக்கு மாற்றப்படுவார் 8 .2 கோடி + 5 .8 + 3 .6 கோடி டாஸ்மாக்நாடு+ பஞ்சாப் + ஹரியான மக்களின் விருப்பப்படி

 • shekaran - thiruchi,இந்தியா

  அடுத்து என்ன செய்ய போகிறாய் சசி ???

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  ரொம்ப முக்கியமான செய்தி

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இந்த புகழேந்தி வீட்ல ஒரு ரைடு உட்டா எல்லா உண்மையும் தெரியவரும்...

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  சசி என்ன சசி? கையில் காசு உள்ளவன் எந்த பரதேசிப் பயலாக இருந்தாலும் சட்டம் வளைந்தென்ன நெளிந்து நிற்கும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  காங்கிரசோடு கூட்டணிக்கு சசி தயார், காங்கிரஸும் தான்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  //ஆனால், இதுநாள் வரை சசிகலா எந்த பொருளையும் பணம் கொடுத்து வாங்கவில்லை // ஏற்கனவே கொடுத்துவெச்சவர்

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  அதுக்கு தானே ரெட்டி வந்து பார்த்துட்டு போயிருக்கார்

 • RajuBanglore -

  Superb..

 • ramana -

  super jail

 • s t rajan - chennai,இந்தியா

  தினகரன் திமுக வின் கைக்கூலி. காங்கிரஸ் திமுகவின் கூட்டுக் களவாணி. பின் தினகரன் சின்னம்மா தானே இவங்க எல்லாருக்கும் பெரியம்மா. இல்லேன்னா கர்நாடக அமைச்சரே விஜயம் செய்து வண்ங்குவாரா ?

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  அங்கிருக்கும் அரசு திருட்டு காங்கிரஸ் அரசு. அது திருட்டு கூட்டத்துடன்தான் சேரும். தி.மு.கவின் கூட்டாளி இப்படிதான் இருக்கும்...

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  It seems that congress party is backing Dinakaran group.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  காங்கிரஸினா ஊழல் ஊழலினா காங்கிரஸ்......

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  மிகவும் சிறிய காரணத்துக்கெல்லாம் குற்றம் கண்டு பிடித்தால் சரி வருவா ...ஒரு பேஸ்ட் வாங்க கூடவா பணம் இல்லாதவங்க அவங்க ...விதிகளை சொல்லி வாங்கி கொள்ளலாம் ,,,அல்லது காண வருபவர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் ...சந்திக்கும் விஷயம் அனுமதிப்பதால் தானே நடக்குது ....சில சிறைச்சாலைகளில் மொபைல் கஞ்சா போன்றவை எல்லாம் தாராளமா பணம் கொடுத்தால் கிடைக்கும் என்றும் செய்தி முன்பு படித்து இருக்கேன் ....

 • Venky - Pune India - Chennai,இந்தியா

  இத விட மொள்ளமாரி தனம் செஞ்ச ஒபிஸ் ஏப்ஸ் எஸ்கார்டு ஓட ஜம்முனு இருக்கும் போது .....அம்மாவை வளர்த்த சின்னமா (வளர்ப்பு தாய்) சொகுசா இருந்த தப்பா ?

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  அண்மையில் கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் சிறை i ஆய்வு என்ற பெயரில் நலம் விசாரித்ததாக செய்திகள் வந்தது குறிப்பிட தக்கது.கூட்டி கழித்து பார்த்த்தால் கணக்கு சரிதான்

 • Karun Muruga - banglore,இந்தியா

  ஜெயில வித்துட்டு காசாக்கிடும் ஜாக்கிரதை ......

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இத்தனை சிரமப்படுவதற்கு மொத்தமாக ஒரு தொகையை பெற்றுக்கொண்டு அவரை பரோலில் விட்டுவிடலாம். காங்கிரஸ் ஆட்சியில் அதுவும் நடக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement