Advertisement

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்

வந்தவாசி: வந்தவாசி டவுன் பகுதியில், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததால், பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன், காதர் ஜண்டா தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, கடந்த ஏப்., மாதம் மூடப்பட்டது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டடனர். தகவலறிந்து வந்த வந்தவாசி தெற்கு போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள், 'மது குடித்துவிட்டு வருபவர்கள், இந்த வழியாக வரும் பெண்களிடமும், பொதுமக்களிடமும் போதையில் தகராறு செய்கின்றனர். மேலும், காலி மது பாட்டில்களை தெருவில் உடைத்துவிட்டு செல்கின்றனர். எனவே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்' என்றனர். அப்போது போலீசார், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement