Advertisement

விக்கிரவாண்டி அ.தி.மு.க.,(அம்மா) இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றிய அ.தி.மு.க., (அம்மா) அணி ஒன்றிய செயலாளர் குமாரராஜா, இனிப்பு வழங்கினார்.
விக்கிரவாண்டி ஒன்றிய அ.தி.மு.க., (அம்மா) அணி செயலாளராக அய்யூர் அகரத்தைச் சேர்ந்த குமாரராஜா நியமனம் செய்யப்பட்டார்.
இவரை, வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் பரிந்துரையின் பேரில், துணை பொதுச் செயலாளர் தினகரன், நேற்று அறிவித்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில், நேற்று மாலை ஒன்றிய செயலாளர் குமாரராஜா, கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் .
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி முருகன், பாசறை செயலாளர் புவியரசன், நிர்வாகிகள் முனுஆதி, சுதாகர், மோகன், ஆறுமுகம், ஆனந்த், சங்கர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர் .

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement