Advertisement

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு

கள்ளக்குறிச்சி : வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதற்கு பதிலாக, "மொபைல் ஆப்" பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின், விழுப்புரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் சுப்பிரமணியனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் எனும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வாகனம் வைத்திருப்போருக்கு அதிகப்படியான சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பல்வேறு நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மொபைல் ஆப் வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், பேரவைத் தலைவர் நல்லியப்பன், தலைமை நிலைய செயலாளர் வேலு, இளைஞரணி செயலாளர் சங்கர், தொண்டரணி செயலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement