Advertisement

தினகரன் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார் : சென்னையில் நடந்த அ.தி.மு.க.‚ பொதுக்குழு கூட்டத்தை கண்டித்து, தினகரன் அணியினர் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் நடந்த அ.தி.மு.க.‚ செயற்குழு கூட்டம் செல்லாது எனவும்‚ முதல்வர் பழனிசாமியை கண்டித்தும், தினகரன் ஆதரவாளர்கள், திருக்கோவிலுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினகரன் அணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருக்கோவிலுார் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி‚ ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் துரை‚ நகர செயலாளர் இளவரசன் மற்றும் கட்சியினர், திருக்கோவிலுார் எம்.ஜி.ஆர்.‚ சிலை முன்பாக, நேற்று மதியம் 2:00 மணியளவில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவசர அவசரமாக ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, கலைந்து சென்றதால் பொதுமக்கள் எதற்காக ஆர்ப்பாட்டம் என தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement