Advertisement

குஜராத் கலவர வழக்கில் அமித் ஷாவுக்கு சம்மன்

ஆமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் சாட்சி என்ற முறையில் அமித் ஷாவுக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. வரும் 18ம் தேதி(செப்., 18) நேரில் ஆஜராக வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கலவரம் நடந்த போது சிறுபான்மையினத்தை சேர்ந்த 11 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் பா.ஜ., வை சேர்ந்த மாயா கோட்னானி என்பவரது சாட்சி அடிப்படையில் அப்போது எம்.எல்.ஏ.,வாக இருந்த அமித் ஷா சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

    இது போன்ற தவறுகள் தான் சாதாரண இந்துக்களை கூட இவர்களுக்கு எதிராக திருப்புகிறது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள எதுவும் செய்யும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement