Advertisement

இயற்கை சிகிச்சைக்கு வீடுகளில் மூலிகை... தோட்டம்! தோட்டக்கலைத்துறை தீவிர நடவடிக்கை

விருத்தாசலம்: இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் வீட்டு தோட்டங்களில் மூலிகைச் செடிகள் வளர்க்கத் தேவையான மூலிகைகள் உற்பத்தி செய்யும் பணியை தோட்டக்கலைத்துறை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் 'ஆயுஷ்' ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி என்றழைக்கப்படும் பாரம்பரிய முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளடைவில் விரைவில் குணமாக ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவ முறைக்கு மாறினர். உணவுப் பழக்கம், ஆங்கில மருத்துவ பக்க விளைவு உள்ளிட்ட காரணங்களால் புதிய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், மக்களிடம் மீண்டும் இயற்கை உணவு மற்றும் மருத்துவம் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து வேளாண்துறை மாடி வீட்டு தோட்டங்களில் இயற்கை முறையில் காய்கறி, கீரை உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கிறது. இந்நிலையில், சாதாரண காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் வீட்டு தோட்டங்களில் மூலிகை செடிகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ஸ்ரீதுளசி, கிருஷ்ணா துளசி, திருநீற்று பச்சிலை, கற்பூரவல்லி, பிரண்டை, துாதுவலை, கீழாநெல்லி, திப்பிலி, தவசி கீரை ஆகிய 10 வகையான மூலிகைச் செடிகள் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதில், மாவட்டத்தில் 4,160 பயனாளிகளுக்கு இந்த மூலிகை 'கிட்' வழங்குவதற்காக, நெய்வேலியில் மூலிகைச் செடிகள் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. 9 வகையான மூலிகைச் செடிகள் அடங்கிய ஒரு கிட் மானிய விலையில் 40 ரூபாய்க்கு வழங்கப்படும். மேலும், தேசிய 'ஆயுஷ்' இயக்கம் மூலம் மாவட்டத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் சோற்றுக்கற்றாழை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த பணி வரும் நவம்பர் மாதத்தில் துவங்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement