Advertisement

'பிரெக்சிட்' மசோதா: பிரிட்டனில் நிறைவேறியது

லண்டன்: ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான, 'பிரெக்சிட்' மசோதா, அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேறியது.

ஐரோப்பாவைச் சேர்ந்த, 28 நாடுகளின் கூட்டமைப்பு, ஐரோப்பிய யூனியன். இதன் முடிவுக்கு ஏற்பவே, உறுப்பு நாடுகள் செயல்படும். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கும் ஓட்டெடுப்பிலும், வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மேற்கொண்டார். அதன் முதல்கட்டமாக, இதற்காக பார்லிமென்ட்டின் ஒப்புதல் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு, 326 எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர், 290 எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement