Advertisement

வேளச்சேரி ரயில் நிலையத்தில் திறந்தவெளியில் வீணாகும் வாகனங்கள்

வேளச்சேரி;வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், பார்க்கிங் பகுதிக்கு கூரை இல்லாததால், வாகனங்கள் வெயிலில் கிடந்து வீணாகும் நிலை ஏற்படுகிறது.வேளச்சேரி பிரதான சாலையில், வேளச்சேரி ரயில் நிலையம் உள்ளது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், சென்னையின் பிற பகுதிகளுக்கு சென்று வர, இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
வசிப்பிடங்களில் இருந்து, ரயில் நிலையத்திற்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள், இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் செலுத்தி, வாகனங்களை நிறுத்துகின்றனர்.அன்றாடம் இதுபோல், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்படுகின்றன.ஆனால், பார்க்கிங் பகுதியில் கூரை இல்லாததால், வெயிலிலும், மழையிலும் கிடந்து வாகனங்கள் வீணாகின்றன. இதுகுறித்து, மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
ரயில் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதால், தினசரி அங்கு வாகனங்களை நிறுத்திச் செல்லும் மக்கள், ரயில்வே துறையின் அலட்சிய போக்கை எண்ணி வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    It is true.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement