Advertisement

மெட்ரோ ரயில் நிலையத்தில் மேம்பாலம் ஒப்பந்ததாரர்களை தேடும் நிர்வாகம்

சென்னை;ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் - ஜி.எஸ்.டி., சாலை இடையே நடைமேம்பாலம் அமைக்க, மெட்ரோ நிர்வாகம் மூன்றாவது முறையாக ஒப்பந்ததாரர்களை சந்திக்க உள்ளது.சென்னையில், மெட்ரோ ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தாம்பரம் பகுதியில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் வருவோர், ஆசர்கானாவில், இருந்து ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு, ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்ல வேண்டும்.இதனால், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்ல ஏதுவாக, 6.8 கோடி ரூபாய் செலவில், நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில், லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன், நடைமேம்பாலம் அமைக்க திட்டமிட்டது.இதற்காக, ஆறு மாதங்களாக, ஒப்பந்ததாரருக்கு இரு முறை அழைப்பு விடுத்தும் யாரும் வரவில்லை. தற்போது, மூன்றாவது முறையாக, ஒப்பந்ததாரருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி கூறும்போது, 'இம்முறை, அதிகமான ஒப்பந்ததாரர் வருவார்கள் என, எதிர்பார்க்கிறோம். 'வரும், 21ம் தேதி, ஒப்பந்ததாரர்கள் - அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும், அக்., 12ம் தேதிக்குள் ஒப்பந்தங்கள் பெறப்பட்டு, முடிவு செய்யப்பட்டு, எட்டு மாதங்களுக்குள், இந்த திட்டப் பணிகள் முடிக்கப்படும்' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement