Advertisement

கூலி, போனஸ் உயர்த்தப்படுமா:நைஸ் ரக கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பு

மதுரை;'இந்தாண்டு 40 சதவீத கூலி உயர்வுடன், 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்,' என, மதுரை நைஸ் ரக கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.மதுரையில் கைத்தறி நகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எல்.கே.டி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள், பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இவை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது நிலவும் கடும் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு போன்ற காரணங்களால் நெசவாளர்கள் கஷ்டப்படுகின்றனர். மாற்று வேலைவாய்ப்பும் இன்றி வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்வு,
போனஸ் உயர்வு
சம்பந்தமான ஒப்பந்தம் அக்., 17ம் தேதியுடன் காலாவதியாகிறது. எனவே கூலி மற்றும் போனஸ் உயர்வு கோரி போராடி வருகின்றனர்.அனைத்து நைஸ்ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கிய குழு துணை தலைவர் ரவீந்திரன் கூறியதாவது: கூலி மறறும் போனஸ் உயர்வு ஒப்பந்தம் காலாவதியாவதால் 18.10.2017 முதல் நெசவாளர்களுக்கு தற்போதைய கூலியை விட 40 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும். இந்தாண்டு தீபாவளி போனசாக 20 சதவீதம் வழங்க வேண்டும். இதுகுறித்து அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள் கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் மனு வழங்கியுள்ளோம். விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement