Advertisement

கடத்தப்பட்ட கேரள பாதிரியார் மீட்பு

ஏடன்: ஏமன் நாட்டிலிருந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, கேரளாவை சேர்ந்த, கிறிஸ்தவ பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சர்,
சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர், டாம் உழுன்னாளில். கிறிஸ்தவ பாதிரியாரான இவர், அரபு நாடான, ஏமனில் உள்ள, ஏடன் நகரில்
இயங்கி வரும், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான, முதியோர் இல்லத்தின் பொறுப்பாளராக, 2010ல் பணி நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு,
மார்ச்சில், முதியோர் இல்லத்தில் தாக்குதல் நடத்திய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அங்கிருந்த, பாதிரியார் டாமை கடத்திச் சென்றனர். தான் கடத்தப்பட்டது குறித்து, பேஸ்புக் சமூக வலைதளத்தில், டாம் தகவல் தெரிவித்தார்.
இதைப் பார்த்த,
அவரது உறவினர்கள்,
மத்திய அரசுக்கு
தகவல் தெரிவித்தனர். இது குறித்து, ஏமன் நாட்டு அரசுக்கு தகவல் தரப்பட்டது. இரு நாட்டு
அரசு அதிகாரிகளின் தீவிர முயற்சியால், டாம்
பத்திரமாக மீட்கப்
பட்டார். டாமை,
கேரளாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டுவிட்டரில், 'பாதிரியார் டாம், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் நாடு திரும்புவார்' என,
பதிவிட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • SINGAM - chennai,இந்தியா

    அங்கெல்லாம் போய் எதாவுது சாக்கு சொல்லி மதத்தை பரப்பமுடியுமா? - இந்தியா தான் இளிச்சவாய் இந்துக்கள் வாழும் நாடு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement