Advertisement

ரூ.50,000 கோடி மோசடி: இருவருக்கு ஆயுள்

பீஜிங்: சீனாவில், இணையதளத்தில், போலி நிதி நிறுவனம் மூலம், 50 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சீனாவில், கடன் தருவோரையும், கடன் வாங்குவோரையும் இணைக்கும் பாலமாக, சில இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அன்ஹுய் யுசெங், யுசெங் குளோபல் ஆகிய நிறுவனங்கள், 'இசுபாவ்' என்ற பெயரில் போலி நிதி திட்டத்தை துவக்கின.இந்த திட்டத்தில் சேர்ந்த ஒன்பது லட்சம் பேரிடம், 50 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகின.

இது தொடர்பாக, போலி நிறுவனங்களின் தலைவர், டிங் நிங், அவரது சகோதரர் டிங் டியாங் உட்பட, 26 பேரை, சீன போலீஸ் கைது செய்தது.இந்த வழக்கில், டிங் நிங், டிங் டியாங் ஆகிய இருவருக்கும், ஆயுள் தண்டனை விதித்து, சீன நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீதமுள்ள, 24 பேருக்கு, மூன்று முதல், 15 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளிடம் இருந்து, மோசடி பணத்தை மீட்க, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மோசடி என்பது உலகத்தின் பொதுவான மறை போல் உள்ளது...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    வழக்கமாக மரண தண்டனை கொடுப்பார்கள் - இந்த தருதலைகள் ஒருவேளை கம்ம்யூனிஸ்ட் கட்சியில் சக்தி வாய்ந்த திருடனின் பெனாமியாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது...

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஏதோ நம் நாட்டில்தானோ என்று நினைத்துவிட்டேன் நம் ஊர் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி முதல் 400 ,500 கோடிவரை எல்லாம் வெகு சுதந்திரமாக வளைய வருகிறதே இவர்களை அணுகக்கூட முடியாத அரசுகள், துறைகள் இவற்றை எண்ணி நொந்துகொள்ளத்தான் இங்கு இயலும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement