Advertisement

இந்திய அமெரிக்கருக்கு முக்கிய பொறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதார துறைக்கான துாதரக பொறுப்பாளராக, இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த, மனிஷா சிங்கை நியமிக்க, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல், அந்நாட்டு அரசுத் துறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலருக்கு முக்கிய பொறுப்பு
வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய, பெண் வழக்கறிஞர், மனிஷா சிங், 45, பொருளாதார துறைக்கான துாதரக பொறுப்பாளராக, அதிபர் டிரம்ப்பால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச
மாநிலத்தை சேர்ந்த, மனிஷா, சிறு
வயதிலேயே, தன் பெற்றோருடன், அமெரிக்கா சென்றார்; மியாமி பல்கலையில், பி.ஏ., பட்டம், புளோரிடா பல்கலையில், சட்டப் படிப்பு மற்றும் வாஷிங்டனில், சட்ட மேற்படிப்பு படித்தார்.
நெதர்லாந்திலும்,
சட்டம் படித்துள்ள இவர், பல தனியார் நிறுவனங்களுக்கு, பொருளாதார ஆலோசகராகவும்
பணியாற்றியுள்ளார். அமெரிக்க செனட் ஒப்புதல் கிடைத்த பின்,
மனிஷா, முறைப்படி பொறுப்பேற்பார் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement