Advertisement

பிரம்மபுத்ரா நதி நீர் தகவல்களை இந்தியாவுடன் பகிர முடியாது

பீஜிங்: 'பிரம்மபுத்ரா நதி நீர் குறித்த தகவல்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முடியாது; நாதுலா கணவாயை திறப்பது தொடர்பாக பேச்சு நடத்த தயாராக உள்ளோம்' என, சீனா
கூறியுள்ளது.

சீனத் தலைநகர் பீஜிங்கில், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், கெங் சுவாங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பிரம்மபுத்ரா நதி நீர் குறித்த தகவல்களை திரட்ட, திபெத்தில் அமைக்கப்பட்டுள்ள, தகவல் சேகரிப்பு மையத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இப்போதைக்கு, பிரம்மபுத்ரா நதி நீர் தொடர்பான தகவல்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இயலாது.இருப்பினும், கைலாஷ், மானசரோவர் உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வோருக்கு, சிக்கிமில் உள்ள, நாதுலா கணவாயை
திறப்பது தொடர்பாக, இந்தியாவுடன் பேச்சு நடத்த, சீன அரசு தயாராக உள்ளது.
நதிநீர் தகவல்கள் தொடர்பாக, இந்திய அரசுடன், நீண்ட காலமாக ஒத்துழைப்புடன், சீனா செயல்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் இந்தியாவுக்கு அளிக்கப்படும்
தேதி குறித்து, பின், ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement