Advertisement

வட கொரியாவுக்கு பெட்ரோல் இல்லை: ஐ.நா.,வில் தீர்மானம்

வாஷிங்டன்: அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கு, பெட்ரோல் வினியோகத்தை குறைக்கும் தீர்மானத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியா, அணுகுண்டு சோதனைகளையும், அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்கு, பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் மீது பொருளாதார தடை விதித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி, வட கொரியாவுக்கு பல்வேறு பொருட்களின் வினியோகம் தடுக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், வட கொரியா மீது கூடுதல் பொருளாதார தடை நடவடிக்கைகள் எடுக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது;

இது குறித்து, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே கூறியதாவது: ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுடன், கூடுதல் தடைகளையும் விதிக்க, இந்தத் தீர்மானம் கொண்டு வரப்
படுகிறது. வட
கொரியாவுக்கான பெட்ரோல் பொருட்களின் வினியோகம், 30 சதவீதம் குறைக்கப்படுகிறது. அணு ஆயுத உற்பத்திக்கு இவை பயன்படுத்தப்படுவதால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட கொரியாவில் உற்பத்தியாகும், ஜவுளி பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. அங்கு உற்பத்தியாகும் பொருட்களை, எந்த நாட்டிலும் விற்கக் கூடாது. இந்த தடைக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர்
கூறினார்.
அதன் பிறகு, இந்தத் தீர்மானம் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement