Advertisement

உலகின் நீண்ட கால்கள் : ரஷ்ய பெண் சாதனை

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த, 29 வயது மாடல் அழகி, உலகின், நீண்ட கால்கள் உடைய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி, எகதேரினா லிஸினா, 29; இவர், 2008ல், சீனத் தலைநகர், பீஜிங்கில் நடந்த, ஒலிம்பிக் போட்டியில், கூடைப்பந்து விளையாட்டு போட்டியில், ரஷ்யா சார்பில் பங்கேற்று, வெண்கலம் வென்றவர். கடந்த ஒரு ஆண்டாக, மாடலிங் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.எகதேரினா, உலகின், நீண்ட கால்கள் உடைய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். 6 அடி, 8.77 அங்குல உயரமுள்ள, எகதேரினாவின், வலது கால், 132.8 செ.மீ., இடது கால், 132.2 செ.மீ., நீளம் உடையது. இவர், உலகின், மீக உயரமான, பெண் மாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.எகதேரினாவுக்கு முன், ரஷ்யாவை சேர்ந்த, ஸ்வெட்லனா பாங்க்ரடோவா, உலகின், நீளமான கால்கள் உடைய பெண் என் சாதனையை பெற்றிருந்தார். அவரது கால்கள், 132 செ.மீ., நீளம் உடையவை.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    இவற்றை சாதனையாக எடுத்துக்கொள்ள முடியாது. அவருடைய கால்கள் வளர அவருக்கு ஏதாவது பங்கிருந்தால் சாதனை என்பதற்கு பொருள் படும். மேலும் இது போன்றதற்க்கெல்லாம் தேவை இல்லாமல் வணிக விளம்பரம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement