Advertisement

திண்டுக்கல்லில் பால் உற்பத்தி அதிகரிப்பு:தீவன தட்டுப்பாடு நீங்கியதால்

திண்டுக்கல்:தமிழகத்தில் மழை ஓரளவு பெய்து வருவதால் கால்நடை தீவனம் பெருகி, பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாததால், கடும் வறட்சி ஏற்பட்டது. கண்மாய், குளங்கள், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வற்றியது. பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையும், கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறையும் ஏற்பட்டது.
கால்நடைகளுக்கு பசுமை தீவனம் கிடைக்காமல் பால் உற்பத்தி வெகுவாக குறைந்தது. பல விவசாயிகள் கால்நடைகளை வளர்க்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு அவற்றை விற்றனர்.கூடுதல் உற்பத்தி: தற்போது சில வாரங்களாக ஓரளவு மழை பெய்து வருவதால், குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் உள்ளது. இதனால் வயல்வெளிகளிலும் புற்கள் அதிகளவில் உருவாகி பசுமை தீவனம் அதிகரித்துள்ளது. இதனால், பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் திண்டுக்கல்லில் 22 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி, தற்போது 30 லட்சமாக உயர்ந்துள்ளது. தீவனம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர்ந்து மழை பெய்து வருவதால் புல், பூண்டுகள் முளைத்துள்ளன. இதனால் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 200 மாடுகள் உள்ளன. இவை கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். தீவனம் பற்றாக்குறை இல்லாமல் கிடைப்பதால் பால்உற்பத்தியும் அதிகரித்துள்ளது, என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement