Advertisement

ஓராயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் முடியாது!

''ஒரு தினகரன் அல்ல; ஓராயிரம் தினகரன் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க., பொதுக் குழுவில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பொதுக்குழு நடை பெறாது என, சிலர் எதிர்பார்த்தனர். நீதிமன்றம், நமக்கு நீதி வழங்கியது; நமக்கு கிடைத்த முதல் வெற்றி. எம்.ஜி.ஆர்., மறைந்த போது, உடைந்த கட்சியை ஜெ., மீண்டும் இணைத்து, ஆட்சியை பிடித்தார்.

அவர் மறைந்ததும், கட்சியை அழித்து விடலாம்; ஆட்சியை கவிழ்த்து விடலாம் என, நினைத்தனர். தி.மு.க., எவ்வளவோ பிரச்னைகளை துாண்டியது. அதை எல்லாம், உங்கள் ஆதரவால் தவிடுபொடியாக்கி உள்ளோம்.

ஜெ.,வால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், நம்மை துரோகி என்கிறார். அவரை போல, துரோகிகள் யாரும் இல்லை. ஜெ.,க்கு, எவ்வளவோ சிரமத்தை கொடுத்தனர். அதை
எல்லாம் தாங்கிக் கொண்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தினார்.
கட்சியில் இருக்கக் கூடாது என, ஜெ.,வால் நீக்கி வைக்கபட்டவர்கள், கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். அதை, எப்படி ஏற்க முடியும்; இன்றைக்கு ஆட்சியை கவிழ்ப்போம் என, கூறுகின்றனர். ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ, அசைக்கவோ, ஆட்டவோ முடியாது.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், எப்போது பார்த்தாலும், 'இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும்' என்கிறார். இந்த ஆட்சி,முறைப்படி தேர்தலில் வென்ற ஆட்சி; சட்டசபையில் நிரூபிக்கப்பட்ட ஆட்சி. ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்டாலின், முதல்வராகி விடலாம் என, நினைக்கிறார்; அவரால், கட்சிக்கே தலைவராக முடியவில்லை. முதலில், கட்சி தலைவராகட்டும். அப்புறம், முதல்வர் பதவியை நினைத்து பார்க்கலாம்.அவரது அப்பாவாலேயே, அ.தி.மு.க., வை வெல்ல முடியவில்லை. அவர், எங்கே இந்த கட்சியை வெல்ல முடியும்?இவ்வாறு முதல்வர் பேசினார்.

துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., மறைவுக்கு பின், தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றும் பெரும் பொறுப்பை, நம்மிடம் கொடுத்து சென்றிருக்கிறார். 'எனக்கு பின்னாலும், அ.தி.மு.க., 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்' என, ஜெ., கூறினார்.நம் மீதுள்ள நம்பிக்கையில் தான், அவ்வாறு கூறினார்.
அவர் கொடுத்தவாக்குறுதியை, நாம் காப்பாற்ற வேண்டும். சாதாரண அடிமட்ட தொண்டர்களுக்கு, கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புகள் வழங்கியவர் ஜெ., அது, இனிமேலும் தொடரும். உண்மையாக, கட்சிக்கு உழைப்பவர்களுக்கு உயர்வு கொடுப்பது, இனிமேலும் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.

'சதிகார கூட்டத்தை விரட்டி அடிப்போம்!':
அ.தி.மு.க., பொது குழுவில், முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது: அதிகாரத்திற்கு வர முடியாது என்பது தெரிந்ததும், 'ஆட்சியை கலைப்பேன்' என, கூறுகிறார் தினகரன். இதை பார்க்கும் போது, இவர்கள், ஜெ.,வை என்ன பாடுபடுத்தி இருப்பர் என, எண்ணி பார்க்க முடிகிறது. ஜெ., வீதி வீதியாக சென்று, உடல் நலத்தையும் பாராமல், மக்களை சந்தித்து, ஆட்சியை பெற்று தந்தார். 'அந்த ஆட்சியை கலைப்போம்; கட்சியை கைப்பற்றுவோம்' என்கின்றனர்.

அ.தி.மு.க., என்பது, எக்கு கோட்டை; அதை யாராலும் அசைக்க முடியாது. முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும், இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவர். சதிகார கூட்டத்தை விரட்டி அடித்து, அவர்களுக்கு பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (34)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அப்பப்போ டெல்ல்லி க்கு போய் சார்ஜ் ஏத்திட்டு வரீங்க இல்ல... அந்த தைரியம் பேசுது... விரைவில் பேட்டரியை பிடுங்கிட்டா சரியாகிடும்....

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அட போங்கப்பா.. நீங்களே கவிழ்ந்து விடுவீர்கள்... அந்த நாளை தான் எல்லோரும் எதிர் நோக்குகிறார்கள்..

 • anvar - paramakudi,இந்தியா

  உங்க சபதமெல்லாம் தான் பார்த்து தானே வருகிறோம். ஓ.பி.எஸ் ..ம் ஈ.பி. எஸ்ஸும் சேர்ந்து விட்டால் மக்கள் உங்கள் பக்கம் இல்லை. அது தினகரன் பரவாயில்லை என்று தோணுகிறது.

 • senthilkumar - tamilnadu,இந்தியா

  ஒரு ஆள சமாளிக்க முடில ..ஓராயிரம் பேர சமாளிக்க போறானுங்களாம்.பிஜேபி-ய சமாளியா முதல்ல

 • ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா

  நைனா கவலையே படாத .அடுத்த போராட்டம் எதாவது வரும். நம்மூரு சனங்க எல்லாத்தையும் விட்டு போட்டு, அத்த பாக்க பூடுவானுங்க.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  முதலில் இவர்கள் சின்னத்தை வாங்கவேண்டும் அது தான் முதல் வெற்றி இது அல்ல

 • bal - chennai,இந்தியா

  எல்லோருமே நாடு மாறிகள். ஒருத்தருக்கும் ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. நேற்று காலில் சாஷ்டாங்கமாக அடிமை போல் விழுந்தார்கள், இன்று தூக்கி எறிந்தார்கள். இதே தினகரனை தோழன் என்றவர் பழனிசாமி. ஆனால் ஒன்று. ஒரு ஏரி பால் இருந்தாலும் ஒரு துளி விஷம் போதும், அத்தனை பாலும் விஷமாக மாறும். அது போல தன இன்றைய ADMK கட்சி.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  அம்மா வளர்மதி, உன் வாயில ஈயத்தை காய்ச்சித்தான் ஊத்தணும். பச்சோந்தி. மக்களே நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். முழித்திருக்கும்போதே முழியை திருடும் இவர்கள், திரைமறைவில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த அரசியலில் சம்பாதிக்க முடியாது என்று தெரிந்தால், இந்த திருட்டு ... எல்லாம் இந்த பக்கமே வராது. அந்த மாற்றம் என்றைக்கு வருமோ தெரியவில்லை. ஆனால், மக்கள் நினைத்தால் நிச்சயம் முடியும்.

 • Balaji - Bangalore,இந்தியா

  பழனிசாமி வளர்மதியை தூரத்தில் வைக்கவும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  சிக்கல் தீர்ந்து விட்டது. கட்சி மற்றும் ஆட்சி தற்போது உங்கள் கையில். நிர்வாகத்தை சீர்படுத்துங்கள். இது தரம் கெட்ட அரசு இல்லை என்பதை நிர்வாகத்தை சீர்படுத்தி காட்டுங்கள். ஊழல் என்ற கறையை ஒழியுங்கள். நடந்தவைகள் நடந்தைவைகளாகவே இருக்கட்டும். அதிமுக தலைவர்கள் ஊழலுக்கு இனி எந்த இடமும் கொடுக்காமல் நேர்மையான திறமையான நிர்வாகத்தை தாருங்கள்..விரைவான நிர்வாகத்தை கொடுங்கள்..கல்வி திட்டத்தை உடனே மேம்படுத்த ஆவண செய்யுங்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி திட்டத்தை உருவாக்கி தமிழக மாணவ செல்வங்கள் இந்தியாவின் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெரும் வகையில் மிக சிறந்த கல்வியை கொண்டு வாருங்கள். மத்திய அரசின் ஆதரவு உங்களுக்கு மிகுந்த பக்க பலமாக இருப்பதால் அதிக நிதி பெற்று வளர்ச்சி திட்டங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படுத்தி, அதை துரிதப்படுத்தி மக்களின் மனங்களை கொள்ளை கொள்ளுங்கள்..தமிழம் வாழ வேண்டும்..தமிழன் உயர்வு பெற வேண்டும்..அடுத்த தேர்தலில் பிஜேபி - அதிமுக கூட்டணி 70 சதவீத இடங்களை பெற வேண்டும்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  ம்ம் பேச்சி என்னவோ நல்லாத்தான் இருக்கு இதையே NOVEMBER/DECEMBER 2016 காலகட்டங்களில் சசிகலாவை தலைமையேற்க வரும்படி காலில் நீங்கள் இருவரும்(OPS+எடுபுடி) விழுந்து கதறும்போது எங்கே போனது இந்த வீரம்?

 • Sampath Kumar - chennai,இந்தியா

  ஆக இந்த ரெண்டு பேரும் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டு உள்ளார்கள் சசி இதுவரை பொது செயலர் என்று இதுவே தினகரனுக்கு கிடைத்த வெற்றி சாயல் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பின் எப்படி முதல்வர் ஆக முடியும் ?? ஓபிஸ் உம நீங்க பட்டவர்தான் பின்னு எப்படி இவர்கள் முதல்வர்கள் ??? எங்கோ இடிக்குது

 • krishna - cbe,இந்தியா

  தேர்தல் வரட்டும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆயிரம் பேர் எதிர்த்தாலும் தினகரன் அவர் செய்வதை செய்து கொண்டுதான் இருப்பார்... காரணம் சசி சேர்த்து வைத்த பொன்னும் பொருளும்...

 • ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா

  மொதல்ல மதியே வளராத சில ஆயாக்கள் கட்சியில் அங்கும் இங்கும் மாரி மாரி பேசி கூவுகின்றனர் .அவங்கள வெளியேத்திடுங்கப்பா

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Mr.OPS and EPS are "Erattai Kuzhal Thuppakki" is a best Joke of the day.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது. தொண்டர்கள் பலம் மட்டுமே போதாது. மக்கள் ஆதரவும் வேணும். ஜெ இருக்கும் போதே இவங்க வெற்றி அப்படி இப்படின்னுதான் இருந்தது. இனிமேல் எப்படி இருக்கும் என்பதை உள்ளாட்சி தேர்தல் மூலம் மக்கள் புரிய வைப்பார்கள். மோடி பஜனை ஒண்ணே போதும் இவர்களின் தோல்விக்கு.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஊழல், முறைகேடுகள் இல்லாமல் ஓரளவுக்கு செயல்பட்டால் அடுத்த முறை ஸ்டாலினை வெல்ல வாய்ப்பு உள்ளது...

 • marichamy - mdu,இந்தியா

  ஒரு மோடி இருந்தா போதும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  //ஓராயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் முடியாது /// எங்கள் அழிவு எங்கள் கையில் எவ்வளளோ சாதிச்சிட்டோம் இதையும் சாதிக்க மாட்டோமா?

 • rajan - kerala,இந்தியா

  போதுமடா சாமிகளா இனியாச்சும் இந்த ஊழல் கைதி சின்னங்களான சின்னத்தாயி ஆயாம்மா புராணங்களை பாடுறதை விட்டு ஒழுங்கு மரியாதையா ஊழல் இல்லா அரசு நிர்வாகம் மக்கள் நலனை கவனிக்க தொடங்குங்கள். மறுபடியும் கழிந்த கால காசு பார்க்கிற ஆட்டைய போடுற ஊழல் ஆட்சிமுறையை பண்ணினீங்கன்னு வை நம்ம வடிவேலன் சொன்ன மாதிரி எல்லாவனும் சின்னா பின்னமாகிடுவீங்கடோய். திரியுறானுங்க கோர்ட் தீர்ப்பு சொன்ன ஊழல் நாயகிகளுக்கு மக்கள் பணத்தில் சிலைவடிக்க.

 • Patriot - Chennai,இந்தியா

  கருத்துக்கள் வரவில்லை என்ன காரணம் ?

 • rajan - kerala,இந்தியா

  மதி அக்கா அப்போ உன் சின்னத்தாயி மூணு தபா ஆயாம்மா சமாதியை டன் கணக்கு வேகத்தில அறைஞ்சு எடுத்த சபதம் கிழிஞ்சு போச்சுதோ. இவர் என்னமா பேசுறார் பாரு. சமய சந்தர்ப்பம் பார்த்து நல்லா சிங்கி அடிக்கிறே. சதிகாரி, துரோகிகள் துரோகத்தால் தான் அழிக்க படுவார்கள் என்பதை தானே மஹாபாரதம் சொல்லுது. பாரு இப்போ உன் பழைய கூவத்தூர் மன்னன் சின்னத்தாயி பரம்பரை என்னெல்லாம் பேசி புலம்புறான். இது தான் உங்க எல்லோருக்கும் வரப்போகும் கதிகேடு தெருத்தெருவா அலைய போறீங்க.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  சூரசம்காரம் செய்வதற்கு தங்களிடம் வேல் உண்டு. இப்படியான கேடுசெய்பவர்களுக்கு பயப்படாதீர்கள்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இப்போதைய அதிமுக தலைவர்கள் யாருக்குமே மக்கள் செல்வாக்கு கிடையாது. பழனியின் ஆட்சி தொடர்வது தமிழகத்திற்கு நல்லதே. ஆனால், மத்திய அரசிற்கு தலையாட்டிக்கொண்டு, ஆட்சி நடத்தினால், அதிமுக அழிந்துவிடும். தமிழக நலன்களை புறக்கணிக்க கூடாது. மத்திய அரசை எதிர்க்க வேண்டிய தருணம் வரும்போது, எதிர்க்க துணிவின்றி ஆமாம் சாமி போட்டால், இது அதிமுகவின் கடைசி ஆட்சியாக மாறிவிடும். இதுநாள் வரை, மத்திய அரசிற்கு இணக்கமாக தமிழகத்தை காவு கொடுத்து விட்டார்கள். இனியாவது, தமிழர்களின் நலனிற்காக ஆட்சி செய்ய வேண்டும். இல்லையெனில், கடைசியாக ஒருமுறை கொள்ளை அடித்துவிட்டு, ஓய்ந்து விடுங்கள். அனைத்து கட்சிகளும் கொள்ளைக்கூட்டங்களே. ஆனால், ஆட்சி செய்வதில், குறைந்தபட்சம் தமிழர்களின் நலன் காக்க வேண்டும் என்று பெரும்பாலான தமிழர்கள் எண்ணுகிறார்கள்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  கவர்னர், பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி, நீதிபதிகள் எல்லோருமே எடப்பாடி அணிதான் அப்புறம் என்ன யார்வந்தாலும் இந்த ஆட்சியை ஆசைக்கு முடியாது

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  நம்பி வந்த செம்மலை, மனோஜ் பாண்டியன், சண்முகநாதன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஏராளமான தொண்டர்களுக்கு ஒரு கவுன்சிலர் பதவியை கூட பன்னீரால் வாங்கி தர முடியாது. உள்ளாட்சி தேர்தல் வரும்போது இவர்கள் ஒற்றுமை எப்படி பட்டது என்று உலகத்திற்கு தெரியும். ஒரு மேயர் வேட்பாளரை கூட இவர்களில் சண்டையில்லாமல் தேர்ந்து எடுக்க முடியாது. கட்சி சுக்கு நூறாக உடைந்து விடும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement