Advertisement

ஐபோன் 8, ஐபோன் எக்ஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்

கியூபர்டினோ: ஆப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், வாட்ச்-3, 4கே டிவி உள்ளிட்ட தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


உலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை நேற்று(செப்.,12) வெளியிட்டது.

இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போனை வெளியிட்டன. மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்டவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐபோன்களை வெளியிட்டு அதன் சி.இ.ஒ., டிம் குக் பேசினார்.

சிறப்பம்சங்கள்:ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ்:* இரண்டு கேமராக்கள் (duel camera) (8 பிளஸ் போனிற்கு மட்டும்)

* 8 அடுக்கு பிராசஸர் (hexa-core processer)
* தண்ணீர் மற்றும் தூசுக்கான பாதுகாப்பு வசதி ( water and dust resistant)
* ஐபோன் 8: 4.7 இன்ச் திரை (4.5'' Screen) ; ஐபோன் 8 ப்ளஸ்: 5.5 இன்ச் திரை( (5.5'' Screen)
* வயர் இல்லாமல் இயங்கும் சார்ஜர் (wireless Charger)
* 60 பிரேம்களில் 4k வீடியோ எடுக்கும் வசதி (60 fps 4k Video)
* ஐபோன் 7ஐ விட மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் வசதி (Faster GPU than Iphone7)
* 240 பிரேம்களில் எச். டி. வீடியோ எடுக்கும் வசதி (240 Fps HD Video)
* இதன் விலை இந்தியாவில் ரூ.64,000 முதல்

ஐபோன் எக்ஸ்:* முக அங்கிகரிப்பு பாதுகாப்பு அம்சம் (Face ID )
* ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே (OLED Display)
* 5.8 இன்ச் திரை (5.8'' screen- 458 ppi)
* அனிமேசன் ஆகும் இமோஜிக்கள் (Animated Emojis)
* வயர் இல்லாமல் இயங்கும் சார்ஜர் (Wireless charger)
* போன் லாக்கில் இருக்கும் போது திரையை தொட்டால் விழித்துக்கொள்ளும் வசதி
* 'ஹேய் சிரி' (hey Siri) என்ற குரல் மூலம் சிரி(Siri) யை ஆக்டிவேட் செய்யும் வசதி
* ஹோம் பட்டன் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஐபோன், திரை தட்டினாலே போன் ஆன் ஆகும்.
* முக அங்கிகரிப்பிற்காக துல்லிய கேமரா (True Depth Camera System For Face ID )
* முக அங்கிகரிப்பிற்காக ஏ-11 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது (A-11 Bionic Chip For Face ID )
* முக அங்கிகரிப்பு மூலம் 'ஆப்பிள் பே' பயன்படுத்தும் வசதி (Face ID Used For Apple Pay)
* ஐபோன் எக்ஸ்-க்கான புக்கிங் அக்.,27ம் தேதியிலும், விற்பனைக்கு நவ.,3ம் தேதியிலும் வருகிறது.
* இதன் விலை இந்தியாவில் ரூ.89,000 (64 ஜி.பி), ரூ.1,02,000 (256 ஜி.பி.)

ஆப்பிள் 4கே டிவி* 4கே துல்லிய வீடியோ வசதி (4k Video)
* எச்.டி.ஆர்.,10 மற்றும் டால்பி விஷன் வசதிகள் (HDR-10, Dolby VIsion Support)
* ஏ.10 எக்ஸ் பிராசஸர் வசதி (A-10x Processer)
* விளையாட்டு மற்றும் செய்திகளை நேரலையில் காணும் வசதி (தற்போது அமெரிக்காவில் மட்டும்; விரைவில் மேலும் 8 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டம்)

ஆப்பிள் வாட்ச்:* ஆப்பிள் வாட்ச் எல்.டி.இ.,(4ஜி) வசதி கொண்டது (LTE Smart Watches)
* ஆப்பிள் ஓ.எஸ்., 4 இயங்குதளம் (Apple OS4 )
*செப்.,19-ம் தேதி வெளியாகிறது
* இதில் 40 மில்லியன் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  முப்பரிமாண காமிரா என்றார்கள் அது இல்லை போலும். தொடர்ந்து ஆப்பிளை வாங்கி வருகிறேன். இருந்தாலும் பெரியளவில் ஒன்றும் இல்லை. மொபைல் சேவை தருவோர் மேம்படுத்தப் பட்ட கோபுரங்களை வைத்து சிக்னல் கூட்ட வேண்டும். இந்தியாவில் நாம் எவ்வளவோ அடிப்படையிலேயே இருக்கிறோம். எந்த வகையிலும் சீனாவின் தயாரிக்கப் படுவதாக இருக்க கூடாது. சாம்சங் பெரியளவில் சீனாவில் தனது தயாரிப்புகளை மேற்கொள்கிறது. வியட்நாம் மற்றும் கொரியாவில் அவ்வளவு இல்லை. ஐ போன் எக்ஸ் வாங்க வேண்டும். OLED திரையை ஆப்பிள் தயாரிக்கவில்லை என்றும் அது சம்சுங்கின் தயாரிப்பு அவர்களிடமிருந்து வாங்கி அதை பயன்படுத்துவதாக செய்தி வருகிறது. அந்த திரை சீனாவில் தயாரிக்க பட்டதா என்று அறிந்து அப்படி இல்லை என்று முழுதும் அறிந்தால் தான் ஐ போன் வாங்குவேன். இது வரை வாங்கிய ஐ போன்கல் இன்னும் சில வருடத்திற்கு பயனாகும். இருந்தாலும் சீனா தயரிப்பு இல்லாத பட்சத்தில் வாங்குவேன். கடந்த சில வாரங்கள் முதல் எதை வாங்கினாலும் அது சீனாவில் தயாரிக்கப் படவில்லை என்று அறிந்து தான் வாங்குகிறேன். ''NOT MANUFACTURED IN CHINA'' என்ற வாசகம் இறுக்கப் போவதில்லை தான். அதை நம் நாட்டில் அறிமுக படுத்தலாம்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  கொஞ்ச நாள் பொறுத்தீர்களானால் (அதாவது அடுத்த செப்டெம்பர் மாதம் வரை) தற்போதைய ஐபோன் கருவிகள் இன்றைய விலையைவிட பாதிவிலையில் குறைவாக கிடைக்கும் அப்போது வாங்கினால் நீங்கள் புத்திசாலிகள். மற்றவர்கள் மத்தியில் பெருமை வரவேண்டும் என்ற காரணத்திற்க்காக தற்போது லட்சம் ருபாய் கொடுத்து இந்த புதிய ஐபோனை வாங்கினால் பிறகு பல ஆயிரம் ருபாய் நஷ்டம் உங்களுக்குத்தான். வாங்கும் முன் சற்று யோசியுங்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எவ்வளவுக்கு எவ்வளவு நுட்பங்கள் அதிகமாக ஆகிறதோ... அவ்வளவுக்கு அவ்வளவு சமூக சீர்கேடுகள் அதிகமாகிறது...

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  விஞ்ஞான அதீத வளர்ச்சியை பாராட்டணும். அதேநேரத்தில் புதிய தலைமுறையைக்காண தயாரிப்பு என்று சொல்லி, வயர் லேஸ் charger, விரலா தொடும்போது வரும் லேசர் தாக்கங்கள் இன்னும் பக்கவிளைவுகளை கொண்டுவரும். மொத்தத்தில் கான்சரின் தாக்கம் அதிகமாகும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  iPhone X க்காக நவம்பரில் வரும் புது போனுக்காக காத்திருக்கிறேன்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement