Advertisement

2 லட்சம் ஆசிரியர்களுக்கு 'மெமோ!'

'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார் பில், செப்., 7 முதல், கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு செல்லவில்லை; அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பணிகள் முடங்கி உள்ளன. பல பள்ளிகளில், காலாண்டு தேர்வை நடத்தவும், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்துள்ளது.

இதில், மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வரை பணிக்கு வராதது தெரிய வந்துள்ளது. நிலைமை மோசமாகாமல் தடுக்க, போராட்டத்தில் பங்கேற்று உள்ள ஆசிரியர்களுக்கு, தனித்தனியாக விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கும்படி, மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராததால், அவர்களின் வீட்டிற்கே, தலைமை ஆசிரியர்கள் வழியாக, 'மெமோ' அனுப்பப்பட உள்ளது.அதில், 'பணிக்கு வராமலும், விடுமுறைகடிதமும் இல்லாமலும் வேலை நிறுத்தத்திற்கு சென்றதால், தங்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என, விளக்கம் கோரப்படுகிறது.

ஆசிரியர்கள் தரும் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

'நீட்' குறித்து பேச தடை:'ஜாக்டோ - ஜியோ' சங்கநிர்வாகிகள், பள்ளி மாணவர்களிடையே, 'நீட்' தேர்வுக்கு எதிராக, பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இதையடுத்து, 'நீட் தேர்வு குறித்து விமர்சனம் செய்யவும், இது தொடர்பாக, பள்ளி பிரார்த்தனை கூட்டம் மற்றும் வகுப்புகளில் உரையாற்றவும், ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (27)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ////ஜாக்டோ - ஜியோ' சங்கநிர்வாகிகள், பள்ளி மாணவர்களிடையே, 'நீட்' தேர்வுக்கு எதிராக, பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்///போராட்டத்திற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு இருப்பதால், மாணவர்களை தூண்டி விட்டு காரியம் செய்ய முயல்கிறார்களோ என்று என்ன தோன்றுகிறது. எனது முந்தைய கருத்தில் இவர்கள் போக போக மாணவர்களை தூண்டி விடுவார்கள் என்றும், நாங்கள் பள்ளி படிக்கும் பொது இது போன்று நடந்தது என்றும் எழுதினேன். அது தான் நடக்கும் என்று தெரிகிது.

 • muruganandam - pudukkottai,இந்தியா

  நமக்கும் கிழே உள்ளவர் கோடி என்பதை எப்போது உணர போகிறார்கள் ?. இவர்களை விட படிப்பிலும் திறமையிலும் உள்ளவர்கள் நிறைய பெயர் இவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தாலே போதும் என்கிற மனநிலையில் உள்ளார்கள் .

 • Sivasubramanian - chennai,இந்தியா

  சம்பளத்தை ஏற்றுவதற்கு பதிலாக சம்பளத்தை குறைக்க வழிவகை செய்யலாம். இவர்களுக்கு திறமை இருந்தால் பணியிலிருந்து விலகி வெளியில் சென்று வேலை பார்த்து அவர்கள் விரும்பும் சம்பளம் வாங்கிக்கொள்ளலாம். சென்றுவிடுங்கள் ஊழியர்களே. நீங்கள் அப்புறப்படுத்தப்பட்டால், நல்ல வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அந்த வாய்ப்பினை பெறுவார்கள். அவர்களால் இந்த சமூகம் உருப்படட்டும். விலகிவிடுங்கள் ஊழியர்களே.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  தனியார் கல்வி நிறுவனங்களை பாருங்கள் அவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்த்து குறைந்த சம்பளம் தான் வாங்குகிறார்கள் இவர்கள் அரசையும் மக்களையும் மிரட்டுகிறார்கள் அரசு எஸ்மா டெஸ்மா சட்டங்களை பயன்படுத்தி ஒடுக்கவேண்டும்

 • isaac - Thanjavur ,இந்தியா

  மிகவும் குறைந்த வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் தினமும் போறாண்டிக்கொண்டிருக்கிறார்கள் சுமார் 80% மக்கள்., இவர்கள் 58 வயதிற்குமேல் வாழ வழி தேடுகிறார்கள்.,அரசாங்க வேலைக்கு காத்திருப்போர் பட்டியல் ஏராளம் .,

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ஆசிரியர்கள் முன்னுதாரணமாய் இருக்க வேண்டும் இவர்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் இவர்கள் அமைப்பு நீதிமன்றம் மூலம் போராடலாம் தெருவில் போராடுவது தவறு

 • moorthi - Namakkal,இந்தியா

  மேலே நிறைய பேர் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஆனால் எனது கருத்து ஒரு ஆசிரியர் 30 ஆண்டுகள் தமிழக மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து பணி நிறைவு பெற்று வீட்டுக்குச் செல்லும்போது வெறும் கையோடு செல்லாதிருக்கவே GPF வேண்டும் என்று போராடுகின்றனர். இதில் தவறு எதுவும் இல்லை. அவர்கள் 58 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையை சமாளிப்பார்கள்.

 • periasamy - Doha,கத்தார்

  ஐந்து வருஷம் எம் எல் ஏ வாக இருந்தால் வாழநாள்பூரா ஓய்வூதியம் பெறும் இவர்கள் வாழ்நாள் பூராவும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கக் கூடாது?

 • periasamy - Doha,கத்தார்

  எம் எல் ஏ க்கள் சம்பளத்தை லட்சக்கணக்கில் உயர்த்திக் கொண்ட பழனியும் அமைச்சுகளும் ஏன் ஊழியர்களின் சலுகைகளை வழங்கக் கூடாது?

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர்களெல்லாம் கல்வி போதிக்கும் ஆசிரியர்களா வெட்கம் பிணம் தின்னும் கழுகுகள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  துறைசார் நடவடிக்கை தான்....... 2 லட்சம் 'மெமோ ஒரு அறிக்கையின் மூலம் காணாமல் செய்து விடலாம்...

 • Shake-sphere - India,இந்தியா

  ஆசிரியர்களுக்கு ஏற்கனவே மித மீறிய அதிக சம்பளம் கொடுப்பதனாலேயே இவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர். அதிக பட்சம் ரூபாய் ஐய்யாயிரம் முதல் பத்தாயிரம் வரை என்ற அளவில் தொகுப்பு ஊதியம், மற்றும் மதிப்பு ஊதியங்களை நடைமுறைப்படுத்தினால் செய்யும் தொழிலில் அக்கறை இருக்கும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  போராட்டம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு மடங்கு சம்பளத்தை வெட்ட வேண்டும்... இல்லை என்றால் இவர்களுக்கு புத்தி வராது...

 • jagan - Chennai,இந்தியா

  எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமிச்சு தலைக்கு அஞ்சு லட்சம் வாங்கிட்டு ஆர்டர் போட்டுட்டா போச்சு...

 • Sithu Muruganandam - chennai,இந்தியா

  ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்துக்கொண்டு இரண்டு லட்ச்சம் ஆசிரியர்களுக்கு மெமோ கொடுத்துள்ளனர். அவர் தேர்தலில் நின்றால் மீண்டும் ஆட்சிக்கு வருகிற செல்வாக்கு இருந்தது. அதனால் தைரியமாகச் செய்தார். ஆனால் இவர்கள் தேர்தலில் நின்றால் யார் ஓட்டுப்போடுவார்கள்? இவர்களின் நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கப் போகிறது.

 • Ray - Chennai,இந்தியா

  நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயாவின் நள்ளிரவு டிஸ்மிஸ் கொள்கைகள் தொடருகின்றதோ

 • Manian - Chennai,இந்தியா

  உங்கள் பிஎப் பணத்திலிருந்து நஷ்டத்தை ஏன் வசூலிக்க கூடாது என்று ஒரு மெமோ அனுப்புங்கள். ஒரு மத சம்பளம் கட் என்றும் சட்டம் இயற்றுங்கள்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அரசு பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில், இந்த போராட்டம் மக்களை சிறை வைக்கிறது. மாணவர்களின் கல்வியை பாழாக்குகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதில்லை. இதுபோன்ற போராட்டங்கள், தனியார் கல்வியை தான் ஊக்குவிக்கிறது. அது பொதுவான மக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்லதல்ல. பணம் மட்டுமே குறிக்கோளாக ஆசிரியர்கள் மாறிவிட்டது வேதனை அளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்க்கையில், அரசு ஊழியர்களின் நிலைமை மேம்பட்டதாகவே உள்ளது. அதை கருத்தில் கொண்டு, காலவரை அற்ற போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்றங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் அல்லது லாபியை குரூப்களை கொண்டு, இந்த பிரச்னையை கையாள வேண்டும். பணியை நிறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. அதனால் அரசு ஊழியர்களுக்கு கெட்ட பெயரை தவிர, நலன் ஒன்றும் பயக்காது.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  இதுவரைக்கும் ரமணன் சார் தான் பள்ளிக்கூடங்களுக்கு லீவ் விட்டுட்டு இருந்தார் இப்ப முதலமைச்சரே லீவ் விடுறார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement