Advertisement

அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிப்பு!

சென்னை: ஒட்டுமொத்த கட்சி தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி, அ.தி.மு.க., பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறித்து, அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், கட்சியில் சசிகலா செய்த நியமனம் எதுவும் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், தினகரன் பதவியும் பறிபோனது. கட்சியை வழிநடத்த, முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், முழு அதிகாரம் வழங்கப்பட்டது. ஒன்றுபட்ட, அ.தி.மு.க.,வாக மீண்டும் இயங்கவும், இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், பொதுக்குழுவில் சபதம் ஏற்றனர்.
அ.தி.மு.க.,வில், இரு அணிகளாக செயல்பட்ட, முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்துள்ள நிலையில், அக்கட்சியின் முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், நேற்று சென்னை, வானகரத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில்,
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விபரம்:* தமிழக மக்களின் நலன் கருதி, அ.தி.மு.க., என, ஒன்று பட்ட ஒரே இயக்கமாக,ஜெ., தலைமையின் கீழ் பணியாற்றியதை போன்று,மீண்டும் பணியாற்ற முடிவெடுத்து இருப்பதை, பொதுக்குழு அங்கீகரித்து ஒப்புதல் அளிக்கிறது. எம்.ஜி.ஆர்., தந்த வெற்றிச் சின்னமான, இரட்டை இலையையும், அ.தி.மு.க., என்ற பெயரையும் மீட்டெடுத்து, கட்சியை வெற்றிப் பாதையில் நடத்தி செல்ல, இப்பொதுக்குழு உறுதி ஏற்கிறது
* ஜெ., நியமித்த நிர்வாகிகள், அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட, இப்பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது. அமைப்பு தேர்தல் வழியாக, பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெ.,வால் அங்கீகரிக்க பட்ட நிர்வாகிகள், அவரவர் பணியில் தொடர்வர்

* ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வை கைப்பற்றவும், அபகரிக்கவும்,நம் அரசியல் எதிரிகளும், நம்மை அழிக்க நினைக்கும் மாற்றாரும் கட்டியிருந்த, மனக்கோட்டைகளை தவிடு பொடியாக்கி, ஜெ., வழியில் கட்சியை, ஆட்சியையும் சிறப்புற வழிநடத்தி செல்லும்
முன்னோடிகளுக்கு, பொதுக்குழு பாராட்டுக்களை தெரிவிக்கிறது
* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை, இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது. எனவே, அ.தி.மு.க.,வில் இனி பொதுச்செயலர் என்ற பொறுப்பு இல்லை;

* ஜெ., புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் நிர்வாக அமைப்பினை சீர்குலைக்கும் நோக்கிலும், அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி நியமிக்கப்படாத, தினகரன் வெளியிடும் எந்த அறிவிப்பும் செல்லாது
* ஜெ., எண்ணப்படி கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பொறுப்புகளை உருவாக்க, பொதுக்குழு தீர்மானிக்கிறது. இவர்கள், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளராகவும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட, பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது

* பொதுச்செயலருக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு, முழுமையாக வழங்கப்படுகிறது. தேர்தல் கமிஷன், அரசு, நீதிமன்றம், வங்கி கணக்கு உள்ளிட்ட, அனைத்து வரவு செலவுகளுக்கும், இந்த இருவரும் இணைந்து கையெழுத்திடுவர்.
மேலும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, படிவம், 'ஏ' மற்றும், 'பி' உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும், கட்சி அறிவிப்பு, நியமனம், ஒழுங்கு நடவடிக்கைகளிலும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திடுவர்
* அ.தி.மு.க., சட்டதிட்ட விதிகளில் செய்யப் படும், இந்த மாற்றங்களுக்கும், திருத்தங்களுக்கும், பொதுக்குழு முழு ஒப்புதல் அளிக்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த 2 தீர்மானங்கள்* ஜெ., மறைவுக்கு பின், 2016 டிச., 29ல் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தற்காலிக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்வதோடு, அவர் மேற்கொண்ட நியமனம், நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது

* அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி நியமிக்க படாத, தினகரன் வெளியிடும் எந்த அறிவிப்பும் செல்லாது

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (63)

 • thangadurai - TIRUVANNAMALAI,இந்தியா

  நல்லது முதலில் மன்னார்குடி கும்பலை விரட்டியதற்கு. ஆனால், இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களும் திருந்தமாட்டார்கள். அப்படியே திரும்ப ops eps என மனம் மாறிவிடுவர். சசிகலா எப்போ ஜெயலலிதா மாதிரி கொண்டை போட்டு பால்கனியில் நின்று போஸ் கொடுக்க கட்சியினர் அடிமைகள் மாதிரி ஒரு வேலைஆளால் நடத்தப்பட்டார்களோ அப்போதே ops திரும்ப ஆரம்பித்திருக்க வேண்டும். முகஸ்துதி பாடிட்டு சின்னமா எங்கம்மா உங்கம்மா னு ஸீன் போட்டுட்டு இப்போ வெளியில துரத்துறோம்னு சொன்ன யார் நம்புவா?.

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  நல்லது முதலில் மன்னார்குடி கும்பலை விரட்டியதற்கு. ஆனால், இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களும் திருந்தமாட்டார்கள். அப்படியே திரும்ப ops eps என மனம் மாறிவிடுவர். சசிகலா எப்போ ஜெயலலிதா மாதிரி கொண்டை போட்டு பால்கனியில் நின்று போஸ் கொடுக்க கட்சியினர் அடிமைகள் மாதிரி ஒரு வேலைஆளால் நடத்தப்பட்டார்களோ அப்போதே ops திரும்ப ஆரம்பித்திருக்க வேண்டும். முகஸ்துதி பாடிட்டு சின்னமா எங்கம்மா உங்கம்மா னு ஸீன் போட்டுட்டு இப்போ வெளியில துரத்துறோம்னு சொன்ன யார் நம்புவா?. இது முழுக்க முழுக்க மீதி இருக்கிற நாலு ஆண்டில் ஆட்டையே போடத்தான் இப்ப பிரச்சனை வேணாம்னு சேந்துக்குறானுங்கோ. நாலு ஆண்டு ஆட்சி முடிந்தவுடன் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் நிற்பார்கள் அல்லது சின்னம்மா விடுதல் ஆகி வரும்போது போய் மாலை போட்டு கூனு கும்பிடு போட்டு தியாகத்தலைவினு சொல்லுவாங்க. இவனுங்க இப்படி தான் மக்கள் எல்லாத்தையும் இடந்தகத்துல வாங்கி அடுத்த காதுல விட்டுட்டு போய்டே இருக்கனும். அஞ்சு வருடம் தொல்லப்படக்கூடாதுனா அரைமணிநேரம் இவனுங்க மற்ற அரசியல் காட்சிகள் பண்ணின ஊழல் இவைகளை பற்றி யோசித்து வாக்களியுங்கள். கட்டாயமாக வாக்களியுங்கள்.

 • Rajakumar - tenkasi,இந்தியா

  ஆவலுடன் எதிர்பார்த்த மாதிரி????? அப்படியா சொல்லவே இல்ல..

 • Jayaraman Sekar - Bangalore,இந்தியா

  அண்ணா திமுக அம்மா அண்ணா திமுக புரட்சித்தலைவி அம்மா எனும் பெயரில் தான் இவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி உள்ளார்கள். அனைத்திந்திய அண்ணாதிமுக என்னும் பெயரில் இவர்களால் பொது குழு செயற் குழுவை கூட்ட முடிய வில்லை. தேர்தல் ஆணையர் தீர்ப்பு வந்த பிறகு தான் இவர்கள் பொது குழுவை கூட்ட முடியும். ஆனா ஒன்பது மாதங்களாக ஏன் தேர்தல் ஆணையர் அல்லது ஆணையம் தீர்ப்பு வழங்க வில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி == அண்ணா திமுக அம்மா அண்ணாதிமுக புரட்சித்தலைவி அம்மா இவர்கள் இணைந்ததாவது தேர்தல் கமிசன் அங்கீரம் பெற்றதா? தேர்தல் கமிசன் வேலை செய்யுதா வேடிக்கை பார்க்குதா? கவர்னர் செயல் உண்மையிலேயே சரியானதா? கண்ணுக்கு எதிராக மத்திய அரசாங்கத்தின் கை வேலை செய்வது தெரிகிறதே? பி ஜெ பி வர வேண்டுமென்று விரும்பும் நாங்களும் கூட மன வருத்தப் படும்படி மத்திய அரசாங்கம் நடக்கிறதே

 • Mannar Nagarathinam - Ramanathapuram,இந்தியா

  தீர்மானங்களில் முன்னாள் முதல்வர் ஜெ மரணம் குறித்த நீதி விசாரணை இடம் பெறவில்லையே??????????????????

  • Rajasekar - trichy,இந்தியா

   அதெல்லாம் சும்மா நாங்க சொல்லுவோம், அதெ நீ கேட்கக்கூடாது.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   அது அப்போ இது இப்போ

 • PrasannaKrishnan -

  even the party can be collapsed.

 • PrasannaKrishnan -

  even the party can be collapsed.

 • isaac - Thanjavur ,இந்தியா

  பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளையடித்த கும்பலிடம் இருந்து விடுவிக்க புரட்சி தலைவியால் கூட முடியாததை உங்கள் தூண்டுதலினாலும், மக்களின் மனசாட்சியை மட்டும் புரிந்துகொண்டு செயல்பட்டது, மிகவும் பாராட்டத்தக்கது ., இன்னும் இந்த சேவைகள் தொடரட்டும்.,

 • senthilkumar - tamilnadu,இந்தியா

  அப்போ சசி+தினகரனால் நியமிக்கப்பட்ட ops மட்டும் okva

  • dandy - vienna,ஆஸ்திரியா

   இந்த அழுக்குகள் இரண்டும் யார்? கட்சியை உருவாக்கினவர்களா ? உண்மையான தொண்டர்கள் வெறும் சிங்கள் டி உடன் காலம் போக்குகின்றான்

  • Rajasekar - trichy,இந்தியா

   அப்போ சசி+தினகரனால் நியமிக்கப்பட்ட ops மட்டும் okva . - உண்மையை கேட்டா வேற பதில் சொல்லுவாங்கண்ணே.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ரெண்டு டெல்லி அடிமையும் சேர்ந்து தான் சின்னம்மாவை அம்மாவின் மறு உருவனமாக பார்க்கிறோம் என்று சொல்லி காலில் விழுந்து பொதுச்செயலாளர் ஆக்கினீர்கள் அப்போ தெரியவில்லையா அதிமுகவில் ஜெயாவிற்கு அடுத்து பொதுச்செயலாளர் யாரும் இல்லை என்று? ஏன்பா பழனி பொதுச்செயலாளர் அல்லாத சசி சொல்வதை கேட்டு எப்படி முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டாய்? இதை மற்ற ஆடுகள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் ?

  • dandy - vienna,ஆஸ்திரியா

   காரணம் எல்லாம் செம்மறி ஆடுகள் .

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  எடுபுடியும் பன்னீரும் எவ்வளவு நாள் இப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போம். தங்கள் பொது எதிரி சசிகலா கூட்டம் துரத்தியடிக்கப்பட்டு விட்டது இனி தினமும் நான் தான் நாட்டாமை என்று இருவரும் அடித்துக்கொள்வார்கள்.

 • periasamy - Doha,கத்தார்

  இவனுக்கள் மோடியின் அடிமையாக இருப்பதால் தமிழ்நாட்டின் அனைத்து நலன்களும் பறிக்கப்பட்டுவிட்டது எனவே மக்கள் இவனுக்களை ஒழித்து கட்ட ரெடியாக இருக்கிறார்கள்

 • Prabaharan - nagercoil,இந்தியா

  என்னதான் செய்தாலும் அகில இந்திய அடிமைகள் முன்னேற்ற கழகமாக தான் இருக்கிறது.

  • Ganesh - chennai,இந்தியா

   "அகில இந்திய அடிமை திருடர்கள் முன்னேற்ற கழகம்" என்று சொல்லுங்கள். அப்போதான் அ இ அ தி மு க என்ற abbreviation பொருந்தும்

  • Sakthisaravanan Pachaiyappan - chennai,இந்தியா

   சரி

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இதுவே உங்களது கடைசி பொதுக்குழுவாக இருக்கும். அடுத்த முறை ஆட்சியையும் இருக்காது. கட்சியும் இருக்காது. அது நிச்சயம்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  இனிமேல் தான் கச்சேரி ஆரம்பம். தற்போதைய அதிமுக MLAக்கள் மற்றும் MPக்களில் பெரும்பாலானோர் சசிகலாவின் சொந்தங்கள் பினாமிகள் மற்றும் அவர்களின் உறவினர்களாகவே இருப்பார்கள். கூடிய விரைவில் அடுத்த அதிரடியை தமிழகம் காணும். இது காலத்தின் கோலம் மக்கள் இதையெல்லாம் பார்க்கவேண்டிய கட்டாயம்

  • dandy - vienna,ஆஸ்திரியா

   அவ்வளவு லேசாக வருமானம் கிடைக்கும் இந்த துறையை விட இந்த செம்மறிகள் மடையர்கள் அல்ல ...

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  இது ஒரு நல்ல முடிவு என்று சொல்லுவதற்கு பதில் ஒரு நல்ல துவக்கம் என்று சொல்லலாம்

 • krishna - cbe,இந்தியா

  பன்னீர் நண்பர் சேகர் ரெட்டி, ராம் மனோகர் ராவ் விவகாரங்கள் என்ன ஆனது???

  • Rajasekar - trichy,இந்தியா

   பைலை காணூம். தேடிகிட்டு இருக்கோம்

 • krishna - cbe,இந்தியா

  எல்லோருமே கொள்ளை காரர்கள்தான். சசிகலா தலைமையிலான கும்பல் மட்டும் ஒதுக்கி வைக்க பட்டு உள்ளது.

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  இதை வைத்துக்கொண்டு சில பெரு குளிர்காயலாம் என்று காத்திருந்தனர். அனால், இப்படி பிசுபிசுத்து போயிடுத்தேன்னு வருத்தம் தான்.

 • M.வெங்கடேசன் -

  சசிகலாவால் முதல்வரான எடப்பாடி சசிகலாவை வெளியேற்றுகிறார்.2017 ஆம் விசுவாசமானவர் என்கிற விருதை முதல்வருக்கு வழங்கலாம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இரண்டு மாடுகளும் இணையாக எவ்வளவு நாள்கள் வண்டியை இழுத்துச் செல்லும்... இவர்களின் ஒற்றுமையை குலைக்க புல்லுருவிகள் தோன்றாதா...

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

   இரண்டு பேருக்கும் சமமான அதிகாரம் எனில், என்ன அர்த்தம்? கொள்ளையிலா? அது சரி. நாளைக்கு இருவருக்கும் இடையில் ஒரு கருத்துவேறுபாடு எனில் , சமரசத்துக்கு என்ன வழி? யாருக்கு அதிகாரம்?

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  அண்ணா திமுக அம்மா அண்ணாதிமுக புரட்சித்தலைவி அம்மா எனும் பெயரில் தான் இவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி உள்ளார்கள். அனைத்திந்திய அண்ணாதிமுக என்னும் பெயரில் இவர்களால் பொது குழு செயற் குழுவை கூட்ட முடிய வில்லை. தேர்தல் ஆணையர் தீர்ப்பு வந்த பிறகு தான் இவர்கள் பொது குழுவை கூட்ட முடியும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தினமலர் இதேபோல் எழுப்பிய சந்தேகங்கள் வாசகர்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த பொது குழு இவர்கள் பலத்தை காட்ட மட்டுமே பயன் படும் இவர்கள் கட்சி சட்டப்படி இந்த பொது குழு தீர்மானங்கள் செல்லாது. நான் தினகரன் அணியை சேர்ந்தவன் கிடையாது. இந்த உதவாக்கரை அண்ணாதிமுக அழிவதை பார்த்து ரசிப்பவன்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  //அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி நியமிக்க படாத, தினகரன் வெளியிடும் எந்த அறிவிப்பும் செல்லாது// தினகரனை கட்சி உறுப்பினராக நியமித்ததே சசிகலாதான் அவரது நியமனம், நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது என்றால் சசி தினகரனை கட்சியில் சேர்த்ததும் செல்லாதது தானே? பின்ன அவனைப்பற்றி ஏன் தீர்மானம்?

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   சதி நியமனம் செய்த அடிமை தான் ஈப்பீஸ். அப்போ அந்தாளு நியமனம் எப்படி செல்லும்? சொல்லும்?

  • Rajasekar - trichy,இந்தியா

   நீங்க ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்குறீங்க அன்னே.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   நான் நியமிக்கிறேன் என கவர்னரிடம் எழுதிக்கொடுத்தாரா? அதனடிப்படையில் தான் கவர்னர் முதல்வராக்கினாரா? சட்டம் இதுவல்ல

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அண்ணா திமுக இப்போ ஓரளவு மீண்டு வருது. இனிமேலாவது படித்தவர்கள், பண்பானவர்களை சேர்த்து அடுத்த தேர்தலில் நிக்கவையுங்க. கட்சி, அரசியல் மூலம் பணம் சம்பாதிப்பதை நிறுத்துங்க. கோடிகளில் ஊழல் செய்து சம்பாதித்தவர்கள் இன்று காண்பது சிறை வாழ்க்கை, இனியும் காணப்போவது சிறை வாழ்க்கை, தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த ஜென்மத்தில் ஊழல் செய்து, எத்தனை நூறு அல்லது ஆயிரம் கோடிகளை உங்களால் என்ஜாய் பண்ணமுடியும்.

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

   நாய்வாலை நிமிர்த்த முடியுமா? சொறி பிடித்த கை சும்மா இருக்குமா?

 • karthi - chennai,இந்தியா

  எடப்பாடி - பன்னீர் இருவருக்கும் வாழ்த்துக்கள். இனி நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து, மீண்டும் சசி கும்பல் தலை எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த மீட்டிங்கில், சசியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஏனென்றால், பாம்பு மீண்டும் படம் எடுக்க வாய்ப்பு தரக்கூடாது. இனி மக்கள் நலனில் நீங்கள் அக்கறை செலுத்தவேண்டும், நிறைய மக்கள் பணிகள் காத்து கொண்டு இருக்கின்றன. இதுதான் பொதுமக்களாகிய எங்களின் விருப்பம், எதிர்பார்ப்பு எல்லாம்.

  • Raman - kottambatti,இந்தியா

   அதுசரி எப்போ பன்னீரும் எடபாடியும் நல்லவர்கள் ஆனாங்க.. இவனுகளும் பெரிய பாம்புகள் தான்..

  • Rajasekar - trichy,இந்தியா

   அன்னே ரொம்ப ஓப்பனா பேசுறீங்க

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  சிறைச்சாலையில் , உங்களோடு சிறையில் உள்ள திருடர் ,திருடிகளுக்கு களி செய்து. கொடுக்கலாமே.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  தண்டனை பெற்றபின் சிறைக்கு செல்வது தான் மரபு. இங்கே தண்டனைக்கு முன்பே வேறொரு குற்றத்திக்காக தண்டனை பெற்ற பிறவி மறு குற்றத்திக்காக ஜெயில் செல்லா தண்டனையை பெற்றிருக்கிறது யாரும் இனி அக்ரஹாரத்திற்கு போகமாட்டார்கள்

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  அப்படி போடு அருவாளை.....இருவரும் இனைந்து செங்கோட்டையனை முதல்வராக தேர்ந்தெடுத்தால்...தினகரனையும் உள்ளே கொண்டுவர வாய்ப்புண்டல்லவா? மூவரும் இணைந்திருந்தால் தானே களைகட்டும்?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   இது ஸ்டாலினுக்கு எதிரான கருத்தாயிற்றே...

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அல்போன்சு, ஏம்பா சுத்தி, சுத்தி அந்த மன்னார் குடி கொள்ளைகோஷ்ட்டி இல்லாமல் இருக்க முடியவில்லையா.

 • அய்யப்பன் -

  ரொம்ப நல்லது.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  எதோ இனிமேலாவது இந்த அக்கப்போர் ஒரு முடிவிற்கு வந்தால் சரி...

 • Suresh - Nagercoil,இந்தியா

  தெரிந்து தவறை திரும்ப செய்தால் தண்டனை நிச்சயம் என்பதற்கு அ தி மு க கட்சியில் நடந்த கூத்துக்கள் ஒரு எடுத்துக்காட்டு.. ஜெயலலிதாவால் செய்யமுடியாததை பழனிச்சாமி செய்துகாட்டி உள்ளார் பாராட்டுக்கள்.. cd கடை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டையே வளைத்து போட்ட கும்பலுக்கு முற்றுப்புள்ளி.. செயலாளர் பதவியை உடைத்தது தான் சரியான முடிவு.. நடக்கவேண்டியது நடந்துவிட்டது இனிமேலாவது மக்களின் உழைப்பில் வாழும் நீங்கள் மக்களுக்காக ஏதாவது செய்யுங்கள்...

  • kuthubdeen - thiruvarur,இந்தியா

   உங்கள் கருத்துக்கள் தான் உண்மையானது ,,,யாருமே நெருங்க முடியாத இடத்தில இருந்து கொண்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மிரட்டி தன் குடும்பத்தை வளர்த்த சூனியக்காரி சசி ...என்ன காரணம் கொண்டு அம்மா அவர்கள் கூடவே வைத்து இருந்தார் என்பது புரியாத புதிர் .இப்பொழுதாவது முடிவுக்கு வந்துள்ளதே ..இந்த ஒரு காரணத்திற்காகவே எடப்பாடியை ஆதரிக்கிறேன்

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

   CD கடை வைத்திருந்தவர் ஆயிற்றே. எதோ ஜெயலலிதா சம்மந்தப்பட்ட ஒரு வில்லங்கமான காஸெட்டை (அது உண்மையோ, பொய்யோ தெரியாது), வைத்து மிரட்டிக்கொண்டு இருந்திருக்கலாம்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஐய்யா eps அண்ட் ஓபிஸ் அண்ட் மதுசூதனன் வணக்கம் , நான் அதிமுக அல்லது திமுகவோ இல்லே இந்த நாட்டின் தமிழ்நாட்டு பிரஜை 77வயதானவள் என்பதால் மனம் நெருஞ்சி வாழ்த்துகிறேன் அதே போல MGR அவர்கள் கச்சி திமுகலேர்ந்து வெளியேவந்து துவங்கியதற்க்கே காரணம் முகவின் ஊழல்களே தான் , மன்னிக்கவும் ஜெயாவுக்கு கெட்டபெயர் வந்ததே சசியால் தான் என்பது மறுக்கவே முடியாத உண்மை , இனியாவது நீங்கல்லாம் ஒத்துமையா லஞ்சம் வாங்காமல் நேர்மையாகவே நல்லாட்க்ஷியே வழங்கினால் MGR ஆன்மா வாழ்திண்டே இருக்கும் . அவர் மீதுள்ள கவர்ச்சியாலேயே தான் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர் என்பதுதான் உண்மை இவ்ளோ சொத்துக்களையும் அடிபிசுபிடிச்ச்சு மெரட்டியே அச்சுறுத்தியே தான் அந்தகள்ளர் கூட்ட தலைவி சசி ஜெயாவின் பதவியை வச்சுத்தான் வெளையாடினா கோடீஸ்வரியும் ஆனாள் போறாததுக்கு தினகரன் என்ற பிராடை துணைக்கும் வச்சுண்டு ஆடிண்டுருக்கா என்பதுதான் உண்மை ,மக்களாகிய எங்களுக்கு சொத்து சுகம் வண்டாமையா நீதி நேர்மை உண்மை சத்தியம் என்பதுதான் MGR குறிக்கோள் , அதைமறக்காமல் ப்ளீஸ் லஞ்சம் என்ற பேய்க்கு அடிமை ஆகாமல் நல்லாட்க்ஷியே தாருங்கள் . நான் உள்பட ஏவாளும் கைநிறைய பணம் நகைகள் என்றுபொறக்கவே இல்லீங்க தாயின் வயத்துலேந்து வர்ரச்ச கைகளை இறுக்கமூட்டிண்டு வரோம் மக்குள் போறச்ச கைகள் விரிச்சுண்டு இறைவா நான் எதுவும் கொண்டுவரலீங்க என்று தான் ஒன்னு எரிக்கப்படுவோம் அல்லது மண்ணுளே பொதைக்கப்படுவோம் .ஒத்துமையாக நின்று சசி அண்ட் தினகரனை ஒழிச்சத்திற்கு மிக்க நன்றி அய்யா நன்றி கள் பலகோடி

  • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

   ஆமாம் ஜெ. பச்சபாப்பா.. அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.. கொள்ளை அடிச்சதெல்லாம் ... தலைவிதான்... ஏன் இந்த ஓரவஞ்சனை.. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய ஊழல் மட்டைகள் தானே.. ஆனால் இவர்களிடம் இருந்து உண்மை, நேர்மை, சத்தியம், ஊழலற்ற ஆட்சி எதிர்பார்க்குறீங்களே நீங்கள் உண்மையிலேயே அப்பாவி தான்...

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   eps அண்ட் ஓபிஸ் அண்ட் மதுசூதனன் - நீதி நேர்மை உண்மை சத்தியம்.. ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா.. புத்தி பிசகி பைத்தியம் பிடிச்சிருக்கு இந்த Su ருக்குப்பை- இன்னிக்கி இந்த பொறம்போக்குகள் எல்லாம் உத்தமர்கள் ஆயிட்டாங்களா?

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  ஒருத்தன் நைட்டு புல்லா பாஃரின் சரக்க போட்டுட்டு , ட்விட்டர்ல வந்து ஆஃப் பாயில் போடுவானே . அவன் இன்னைக்கு என்னத்த ஒளறுவானோ ..

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   நீங்க டிரம்பை சொல்றீங்களா இல்லை மோடியை திட்டுறீங்களா?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இந்த நாடகம் இன்றோடு முடியுமா? இல்லை கன்னி தீவு போன்று தொடருமா? என்று காலம் தான் பதில் சொல்லும். சசி குடும்பம் அதிமுகவை விட்டு போவது, தமிழகத்திற்கு நல்லதே. ஆனால், அதிமுக தொண்டர்களிடம் இருக்குமா? அல்லது வடஇந்திய மக்களுக்கு தமிழகத்தை தியாகம் செய்வதற்காக இன்னும் நாலு வருடங்களுக்கு குத்தகைக்கு விட பயன்படுமா? என்று பார்ப்போம்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  அம்மாவால் துரத்தப்படாத சசிகலாவை துரத்திய பன்னீருக்கு பழனிக்கு வாழ்த்துக்கள். இனியாவது ஊழல் இல்லாமல் அம்மாவின் ஆட்சியை ஒழுங்காக நடத்தி அவரது ஆன்மாவை சாந்தி அடைய செய்யுங்கள்.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  இவர்கள் தீர்மானத்தை படித்து பார்த்ததில் அண்ணாதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை இவர்கள் நீக்காததன் மர்மம் என்ன

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  கொள்ளை அடித்த மற்றும் அடிக்க போகும் பணத்தை வைத்து, ஜெயா மாதிரி, இந்த ஸிரோக்கள் தமிழக மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். காலம்தான் இதெற்கு பதில் சொல்ல வேண்டும்.

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

   JJ தான் "1 ". நாங்களெல்லாம் பூஜ்யம் - என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். "1 " இல்லாமல்போன பிறகு, இவர்கள் எல்லாமே பூஜ்யம்தானே. இப்போ எப்படி இரண்டுபேர் "1 " ஆனார்கள்?. "ஒன்று" போய்விட்டபிறகு பூஜ்ஜயங்களெல்லாம் கலைய வேண்டியதுதானே. .

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  2016 டிச., 29ல் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தற்காலிக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் ரத்து - குரு பெயர்ச்சி பலன்கள் ?

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாம் சரி ..என்ன காரணத்திற்காக சசியை கட்சியை விட்டு வெளியேற்றினார்கள் ? குடும்ப அரசியல் செய்துவிடுவார் என்னும் பயத்தினாலா ? ஒரு வேலை அதுதான் காரணம் என்றால் நாளை இந்த கட்சி ஏதாவது ஒரு குடும்ப கட்டு பாட்டிற்குள் செல்லாது என்று என்ன நிச்சயம் ? / மீறி சென்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க கட்சியின் சட்ட விதி திருத்தம் செய்யப்பட்டதா ?

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

   அந்த முன்யோசனை எல்லாம் இவர்களுக்கு உண்டா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement