Advertisement

எம்.பி.,க்கள் சொத்து வழக்கு விசாரிக்க விரைவு நீதிமன்றம்

புதுடில்லி: 'ஒரு தேர்தலுக்கும், அடுத்த தேர்தலுக்கும் இடையே சொத்து மதிப்பு உயரும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு தேர்தலுக்கும், அடுத்த தேர்தலுக்கும் இடையே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு உயர்வது தொடர்பாக விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு நடந்து வருகிறது.சொத்து மதிப்பு உயர்ந்த, ஏழு லோக்சபா எம்.பி.,க்கள், 98 எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை, மத்திய நேரடி வரி வாரியம் சமீபத்தில் தாக்கல் செய்தது.இந்த வழக்கு, நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:ஒரு தேர்தலுக்கும், அடுத்த தேர்தலுக்கும் இடையே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் சொத்து, பல மடங்கு உயர்ந்துள்ளது தொடர்பான இந்த பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
அதற்கு, விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இது தொடர்பான சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றி, உரிய வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறிஉள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement