Advertisement

ஆமதாபாத் - மும்பை, 'புல்லட்' ரயில் நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

ஆமதாபாத்: ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான
அடிக்கல் நாட்டு விழா, ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில், ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, பியுஷ் கோயல்,
புல்லட் ரயில் பற்றி, நேற்று கூறியதாவது: நாட்டின், முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள், நாளை துவங்குகின்றன. ஆமதாபாத்தில் நாளை நடக்கும் விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டுகின்றனர்.

இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

320 கி.மீ., வேகம்* ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்; இது, 350 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்
* இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்றுசெல்லும்

* மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும்
* 21 கி.மீ., துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ., துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது
• இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட வரவேற்புஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

அவரை வரவேற்க, ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, மஹாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமம் வரை, 7 கி.மீ., துாரத்துக்கு வரவேற்பு பேரணி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட, 28 இடங்களில், 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (41)

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  இதெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தால் நடக்காது.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மொச புடிக்கிற நாயை மூஞ்சியைப் பாத்தா தெரியாதா ???

 • K.Ravi - kalpakkam,இந்தியா

  ஏற்கனவே 65 லட்சம் கோடி கடன் இந்தியாவுக்கு... இதுல இன்னும் 1 லட்சம் கோடியா.. என்னாகப் போகிறது நாடு...

 • குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா

  அப்புகோதண்டம் எங்க இன்னும் இந்த பக்கம் வரலை > உங்கள் பதிலால் இந்த ஆர்டிகிள் பெருமையடையட்டும்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இது செஞ்சா அது என்ன ஆச்சுங்கறது, அது செஞ்சா இது என்னாச்சுங்கறது. அவருக்கு கொஞ்சம் டைம் கொடுங்கப்பா, எல்லாமே பேரழலா போய்க்கிட்டுதான் இருக்கு. மோடி குஜராத் முதல்வராக ஜப்பான் சென்ற போது உடன்பாடு ஆனது இப்போதுதான் பூஜையே தொடங்குகிறது. அடுத்து மும்பை சென்னை ஆரம்பிக்கும். அது வரைக்கும் மோடி இருக்கணுமே.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  எங்கூருல பொள்ளாச்சி - போத்தனூரு தண்டவாளத்த புடுங்கிப்போட்டு பத்து வருசமாச்சு... இன்னும் போட துப்பில்ல... இதுல புல்லட் ரெயிலு.. ம் .. ஒரு லச்சத்தி பத்தாயிரம் கோடி...ம் .. நடத்துங்க ...

 • RP Iyer - Bengaluru,இந்தியா

  பியுஷ் கோயலுக்கு வாழ்த்துக்கள்

 • Hari Raj - Kuala Lumpur,மலேஷியா

  Excellent initiative by Modi ji

 • bal - chennai,இந்தியா

  சீனாவுக்கு மரண அடிகொடுக்க பட்டது. ஏன் ஒரே சமயத்தில் பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா என்று எல்லா முக்கிய மாநகரங்களில் துவக்கவில்லை.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  வாழ்த்துக்கள் மோடிஜி. நவீன இந்தியாவின் தந்தையாக எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு. ஆனால், இதே போல் தமிழக திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எச்சரிக்கிறோம்.

 • christ - chennai,இந்தியா

  மஸ்தான் காஸ்டிலியாக உலகை சுற்றுவதை போல ஏழை எளிய மக்களையும் நினைத்து விட்டார் போலும் .

 • christ - chennai,இந்தியா

  இருக்குற ரயில்களில் அவசரத்துக்கு டிக்கெட் கிடப்பது இல்லை .மக்களின் தேவைக்கேற்ப ரயில்களில் எண்ணக்கை அதிகப்படுத்தவில்லை .ரயில்களில் முன்பதிவு செய்வதற்கு அதிக கெடுபிடிகளை செய்கிறது ரயில்வே .,ரயில்களில் எந்நேரமும் காத்திருப்போர் பட்டியில் நீளுகிறது ,மக்களின் தேவைகளை சாதகமாகிக்கொண்டு தட்கல் ,சுவேதா ,என மாற்றி மாற்றி பெயர்களை போட்டு கொண்டு கட்டணத்தை அதிகப்படுத்தி ரயில்வே மக்களிடம் கொள்ளை அடிக்கிறது .மக்களுக்கு இப்போதைக்கு தேவை புல்லட் ரயில்கள் அல்ல .சாதாரண மக்கள் அன்றே செல்வதற்கும் படுக்கை வசதி உள்ள பயண சீட்டு சாதாரண கட்டணத்துடன் தாரளமாக கிடைக்கும் படி செய்வது

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  மணிக்கு 320 கிமீ வேகமாம். மும்பை அகமதாபாத் நடுவுல 12 ஸ்டேஷன்களில் நிக்குமாம். ஒரு ஸ்டேஷனில் மூணு நிமிஷம்ன்னு வச்சிக்கிட்டாலும் 36 நிமிஷம் காலி. ஸ்டேஷன்ல இருந்து கிளம்பும்போதே டபக்குன்னு 320 கிமீ வேகத்தில போகுதுன்னா (அட ஒரு பேச்சுக்குத்தான்ம்லே..) ஒண்ணே முக்கால் மணி நேரம் தேவை. ஆக மொத்தம் எப்பிடியும் ரெண்டரையில இருந்து மூணரை மணி நேரம் தேவைப்படும். இப்பவே ஆறுல இருந்து ஏழுமணி நேரத்துல போகுதாம்??? அப்போ என்ன வித்தியாசம்??? பேசாம ஹைப்பர் லூப் போட பிளான் பண்ணுனா என்ன??? அட அப்ரசண்டிங்க முறைக்காதீங்கப்பா...

 • Sampath Kumar - chennai,இந்தியா

  அம்புட்டு திட்டமும் அமைப்பினிக்கும் அத்தனைக்கும் தான் வடக்கு வாழும் தெற்கு தேயும் இங்கே நிறைவேற்ற பட்டதை ரயில் திட்டம் நூறு கிடக்கு இதை தவிக்க நாதிகிடையாது அப்புறம் தெற்கு தேயமா வளர வா போகுது போங்க நீங்கள் உங்க அரசாங்கமும்

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  இத்தனை செலவில் (இன்னும் குறைவான செலவிலேயே) நதி நீர்களை இணைத்திருக்கலாம்.உண்மையிலேயே நாட்டை ஆள்பவர்களுக்கு விவசாயிகள் மீதி அக்கறை இல்லை என்றே சொல்லலாம். இந்த வீண் செலவெல்லாம் அதானிக்கும், அம்பானிக்கும் & பெரிய பெரிய பணக்காரனுக்கு மட்டுமே தான்.

 • JOKER - chennai,இந்தியா

  குளிக்கவெய் தண்ணி இல்ல .இதுல ???

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  வாழ்த்துக்கள் ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இங்கே வருமா... வராதா.......?,

 • Syed Shafi - Lankawi,மலேஷியா

  மொதெல்லா நதிகளை இணைக்கப்பாருங்க ,,யாருக்கு வேணும் இப்போ இந்த புல்லட் ரயில்.. நாடு நல்லா இருக்கணும் என்றால் நீர் நிலைகளை இணைக்கணும் .2020 இல் இந்தியா ஒரு வல்லரசாக மாறனும்னா மோடி வீட்டுக்கு போகணும் ,ஓசி லே உலக சுற்றுலா போனது போதும் ,, நம்ப நாட்டை கடன் காரனாக்குனதும் போதும்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  தேவையில்லாத திட்டம். அதைவிட எந்த நாட்டின் தலைவர் வந்தாலும் குஜராத் தர்ஷன் செய்யவச்சி அயல்நாட்டினர் மத்தியில் மரியாதையை கெடுக்கறாங்க. மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்கு, குஜராத்துக்கு மட்டுமல்லன்னு யாராவது ஞாபகப்படுத்தனும்

 • Raja Seb - Chennai,இந்தியா

  Ippo ithu thevaiya...?? illa theriyaamaththaan kekuren..

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  bullet மோடி

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  போக்குவரத்தை நவீனப்படுத்துவதில் இது ஒரு புதிய அத்தியாயம்... வாழ்த்துக்கள்...

 • Manian - Chennai,இந்தியா

  புதிய தொழில்கள் வளர, அஞ்சு லட்சம் புதிய வேலைகள், இதர வாகன உறுப்பு தயாரிப்பு, சேனாவிற்கு ஆப்பு, பாதை எங்கும் உப தொழில்கள், நகர நெருக்கடி தீர்வு, ... ஜப்பான், சைனாவில் நடந்ததெல்லாம் இங்கேயும் நடக்கும். லஞ்சத்தை ஒழிப்பது முடியாத காரியம். சிறிதளவேனும் முன்னேற்றம் வருவது மகிழ்ச்சியே . எதிர்மறை எண்ணிகள் மெதுவாக வாய் மூடிகள் ஆவார்கள், அதுவரை வேண்டாதவற்றை இங்கே குப்பையாக கொட்டுவார்கள். . இதில் 40 % கட்டிங் இல்லை என்பதே சிறப்பு.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  இந்தியாவுல வேலை வாய்ப்பே இல்ல. யாரும் வேல விசயமா ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறதில்ல சும்மா சொந்தக்காரங்கள பாக்குறதுக்கு எதுக்கு புல்லட் டிரெயின் ?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  தமிழக ரயில்வே திட்டங்கள் ரத்து. அஹமதாபாத்திற்கு புல்லட் ரயில்.

 • Raman - Lemuria,இந்தியா

  மும்பை டு அஹமதாபாத் ஐநூறு கிலோமீட்டர் டால்கோ ரயிலில் இயக்கினால் இரண்டரை மணி நேரம் ஆகும் . செலவு வெறும் 1000 கோடி. அதே தொலைவை புல்லட் ரயிலில் இயக்கினால் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஆகும் . செலவு ஒரு லட்சம் கோடி. 45 நிமிட சேமிப்பு . அந்த சேமிப்பை போற்றுபவர்கள் விமானத்தில் சென்று விடுவார்கள் . நடுத்தர வர்க்கத்திற்கு ஸ்பெயின் நாட்டின் டால்கோ தான் தேவை

 • Raman - Lemuria,இந்தியா

  தற்போதைய தண்டவாளத்தில் இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்ல கூடிய ஸ்பெயின் - டால்கோ ரயில்கள் இயக்க முடியும் எனும் பொழுது முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ஒரு லட்சம் கோடி அதுவும் ஒரே ஒரு ஊருக்கு செலவிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த பணத்தில் கோவை- சென்னை , பெங்களூரு சென்னை போன்ற ஐம்பது தடங்களை இணைக்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement